அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeடிவியின் அருகில் சென்று குழந்தை படம் பார்ப்பதால், கண் கெட்டு விடுமே என்று கவலைப்படுபவரா நீங்க...? இனி, குறிப்பிட்ட தூரம் அருகில் வந்தால் டிவி தானாகவே படம் காட்டாது. குழந்தை, பின்னால் சென்றால் மட்டுமே டிவி பார்க்க முடியும்.


இப்படி ஒரு சூப்பர் ஸ்மார்ட் டிவியை சோனி நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்த மாதம் இங்கிலாந்தில் அது விற்பனைக்கு வருகிறது. பிறகு, இந்தியாவிலும் கிடைக்கும். டிவியை அருகில் இருந்து குழந்தைகள் பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, புதிய தொழில்நுட்பத்தில் இந்த டிவி உருவாக்கப்பட்டுள்ளது.

டிவியில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவி, திரையில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்குள் யாராவது வந்தால் படத் தெளிவைக் குறைத்து புள்ளி புள்ளியாகி விடும். அதைப் புரிந்து கொண்டு குழந்தை தானாவே குறிப்பிட்ட தூரத்துக்கு செல்ல நேரிடும்.

பாதுகாப்பான அந்த தூரத்தில் இருந்து டிவி பார்த்தால் குழந்தையின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது. பேஸ் டிடெக்ஷன் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ள இந்த டிவியின் சென்சாரால் குழந்தைகளையும் பெரியவர்களையும் பிரித்து அடையாளம் காண முடியும்.


 


திரையின் அருகே 12 வயதுக்கு குறைந்தவர்கள் வந்தால் மட்டுமே படம் காட்ட டிவி அடம் பிடிக்கும். பெரியவர்கள் வந்தால் திரையில் மாற்றமிருக்காது.
தவிர, டிவி பார்க்கும் முறைகள் பற்றி திரையில் டிஸ்ப்ளேவும் இடம்பெறும். அறையில் இருப்பவர் எழுந்து சென்று விட்டால்,  சில விநாடிகளில் டிவி தானாக ஆப் ஆகி விடும் தொழில்நுட்பமும் இதில் உண்டு. இதன்மூலம், மின் சிக்கனம் ஏற்படும்.Post Comment


2 comments:

Nishan said...

Great work Dileep:) It's really amazing creation. continue your search.... Keep rock always..

Dileep said...

Thxx Nishan............. I'll do my best
keep touch with us

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.