நாசாவின் டோன் என்ற ஆளில்லா விண்கலம் வெஸ்டா சிறுகோளின் (asteroid) சுற்றுவட்டத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளது.
530 கிமீ விட்டமுள்ள வெஸ்டாவை சுற்றி வருவதாக டோன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெஸ்டாவை அடைய டோன் விண்கலத்திற்கு 4 ஆண்டுகள் பிடித்துள்ளது. அடுத்த ஓர் ஆண்டுக்கு அது வெஸ்டாவை ஆராய்ந்து விட்டு பின்னர் செரசு குறுங்கோளை நோக்கிச் செல்லவிருக்கிறது."சிறுகோள் பட்டையில் காணப்படும் மிக முக்கியமான சிறுகோளை முதன் முறையாகச் சுற்றி வரும் இந்த நிகழ்வு ஒரு முக்கியமான படிக்கல்," என நாசா நிர்வாகி சார்ல்ஸ் போல்டென் தெரிவித்துள்ளார்."டோன் விண்கலத்தின் ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் சிறுகோள்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு உதவும். 2025 ஆம் ஆண்டுக்குள் சிறுகோள் ஒன்றுக்கு மனிதனை அனுப்பி வைக்க அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். டோன் இத் திட்டம் குறித்து சில முக்கிய தகவல்களைப் பெறும்."
நன்றி : விக்கி
2 comments:
உருப்படியான ஒரு நல்ல பதிவு நன்பரே!! அறியத்தந்தமைக்கு நன்றி
//Mohamed Faaique said...
உருப்படியான ஒரு நல்ல பதிவு நன்பரே!! அறியத்தந்தமைக்கு நன்றி//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே
Post a Comment