இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பதாகவும் இதனால் அவருக்கு அமெரிக்காவில் உள்ள பிரபல கேன்சர் இன்டியூட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கல்ப்., செய்தி நிறுவனம் மூலம் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.
யுவராஜ்சிங் சமீப காலமாக உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அணியில் எந்த ஆட்டத்திலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். கடந்த அக்., மாதம் இவருக்கு கேன்சர் நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதனை அவரது தயாரும் , யுவராஜ்சிங்கும் மறுத்தனர். இது ஒரு கட்டிதான் விரைவில் குணமாகிவிடும் என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் யுவராஜ்சிங் அமெரிக்காவில் சிகிச்சை பெற கடந்த ஜன. 26ல் சென்றதாகவும், பாஸ்டன் நகரில் உள்ள ஒரு பிரபல கேன்சர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை வருவதாகவும் இந்த அங்கு அவருக்கு இடது நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு இது கேன்சர் தான் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான கிகிச்சைக்காக இன்னும் மார்ச் மாதம் வரை இவர் அமெரிக்காவிலேயே இருப்பார் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் ஆடத்துவங்கி விடுவார்: இது குறித்து அவரது பிசியோதரபிஸ்ட் ஜடின் சவுத்ரி, இந்திய தொலைக்காட்சி நிருபரிடம் கூறுகையில்: யுவராஜ்சிங்கிற்கு கேன்சர் கட்டி தான் . ஆரம்ப கட்டமாக இருப்பதால் , இது ஹீமோதரபி மூலம் குணப்படுத்த முடியும் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர், எனவே சிகிச்சை முடிந்து வரும் மே மாதம் ஆடத்துவங்கி விடுவார் என்றார். இது குறித்து சிங்கின் தந்தை யோகராஜ் நிருபர்களிடம் பேச மறுத்து விட்டார். கேன்சர் என்பதை இவரது தாயாரும் உறுதி செய்ய மறுத்துவிட்டனர்.
நேற்று நடந்த ஐ.பி.எல்., ஏலத்தில் இருந்து சகாரா இந்தியா விலகி கொள்வதாக அறிவித்திருந்தது. இந்த நிறுவனம் தான் யுவராஜ்சிங்கை கேப்டனாக கொண்ட புனேவாரியர்ஸ் அணியை நடத்தி வருகிறது, சகாராவின் தலைவர் சுசாந்தரோ ராய் நேற்று கூறுகையில்: எங்களின் குடும்ப நண்பர்களில் ஒருவரான யுவராஜ்சிங்கிற்கு இப்படி ஒரு நிலை வந்தது துரதிருஷ்டமானது. இது குறித்து மிகவும் வேதனைப்படுவதாக கூறினார்.
நன்றி:தினமலர்
2 comments:
மிகவும் வருத்தமளிக்கிறது சார் !
//திண்டுக்கல் தனபாலன் said...
மிகவும் வருத்தமளிக்கிறது சார் !//
ஆம் நண்பரே... சீக்கிரமாக களத்தில் கலக்க வருவார்
Post a Comment