அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


" எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கை பார்க்கப்போகிறார்கள்?"

2004ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி, "திய வான் கோ"ஒரு முஸ்லீமால் கத்தியால் குத்தப்பட்டு மற்றும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். இவர் இஸ்லாமை வெளிப்படையாக எதிர்த்தார், இஸ்லாமைப் பற்றி விமர்சித்தார் மற்றும் இஸ்லாமில் பெண்களின் நிலை என்ன ? என்பதை சித்தரிக்கும் விதத்தில் ஒரு படத்தை தயாரித்தார். இந்த காரணங்களுக்காக இவர் கொலை செய்யப்பட்டார்.
சில நடுநிலை முஸ்லீம்கள் இக்கொலையை கண்டித்தார்கள், மற்றும் சிலர் இக்கொலை நியாயமானது தான் என்று நம்புகின்றனர். இந்த இரண்டு விதமான கருத்துக்களை உடைய குழுக்களை இஸ்லாம் சமுதாயத்தில் நாம் காணமுடியும். இதனால், இந்த இரண்டு குழு மக்களின் கருத்துக்களில் எது "உண்மையான சரியான இஸ்லாம்" என்பதை புரிந்துக்கொள்வதில் குழப்பம் நிலவுகிறது.


ஆதாரபூர்வமான இஸ்லாம் எது? இந்த ஒரு கேள்வியில் தான் முஸ்லீம்கள் ஒருவரில் ஒருவர் வெவ்வேறு கருத்துடையவர்களாக உள்ளார்கள். அதனால், இஸ்லாமை தோற்றுவித்தவராகிய முகமதுவின் வாழ்க்கையை சிறிது அலசிப்பார்ப்பது நியாயமானதாக உள்ளது. உண்மையில் முகமதை சேர்த்துக்கொள்ளாத எந்த இஸ்லாமிய கோட்பாடும் தவறு தான் (In fact, any definition of Islam that excludes Muhammad is false). முகமதுவின் வாழ்க்கை சரிதையை  (சீரா) முதன் முதலில் எழுதியவர் மதினாவில் பிறந்த இபின் இஷாக் (85 - 151 ஹிஜரி) என்பவர் ஆவார். இக்கட்டுரையில் முகமது தன்னை எதிர்த்தவர்களிடம் எப்படி நடந்துக்கொண்டார் என்பதை கற்றுக்கொள்ளப்போகிறோம். இதற்காக இரண்டு எடுத்துக்காட்டை காண்போம். 

அபு அபக்கை கொல்லச் சென்ற சலிம் பி உமர்: 

அபு அபக் என்பவர் அபயா இனத்தை சார்ந்தவர். நபி "அல்-ஹரித் பி. சமித் " என்பவரை கொன்றதினால், இவர் முகமதுவின் மீதுள்ள தன் வெறுப்பை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன், ஆனால் இப்படிப்பட்டதை இது வரை நான் காணவில்லை,ஒரு குழு அல்லது மக்கள் கூட்டம்,
தங்கள் கூட்டாளிகளை காரியமாக அழைக்கும் போது
தாங்கள் கைவைத்த வேலையில் அதிக அக்கரை காட்டுபவர்கள்,
மலைகளை கவிழ்த்துவிட்டவர்கள், எப்போதும் தோற்காதவர்கள்
கய்லாவின் பிள்ளைகள் ஒரு குழுவாக கூடினார்கள்,
ஒரு பயணி இவர்களிடம் வந்தான், இவர்களை இரண்டாக பிரித்துவிட்டான்,
எல்லா காரியங்களிலும் "அனுமதிக்கப்பட்டது", "தடுக்கப்பட்டது" என்றான்,
துப்பாவை நம்பினவனையா நீங்கள் இராஜாவாக அங்கீகரிக்கப்போகிறீர்கள்.


"எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கைபார்க்கப்போகிறீர்கள்?" என்று நபி கேட்டார். இதைக்கேட்டு, சலிம் பி. உமர் சென்று அபு அபக்கை கொன்றுவிட்டு வந்தான். இந்த நிகழ்ச்சியைக் குறித்து உமாம பி. முஜைரியா கீழ் கண்டவாறு சொன்னார்.

இறைவனின் மதத்திற்கு, மாமனிதர் அஹமதிற்கு எதிராக நீ பொய் சொன்னாய்!உன் தந்தை உன்னை கெட்ட மகனாக பெற்றார்.
நீ மேலே செல்ல ஒரு நம்பிக்கையாளர் உனக்காக‌ இரவிலே கட்டளையிட்டார்

"வயதை பாராதே, அபு அபக்கின் கணக்கை முடித்துவிடு" என்றார்.
மரண இரவில் உன்னை கொன்றவன் மனிதனோ அல்லது ஜின்னோ எனக்கு தெரிந்தாலும், நான் சொல்லேன்.  


இங்கு  முகமதுவிற்கு வெளிப்படையான எதிர்ப்பு இருப்பதை காணமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட இனமக்களில் ஒரு முக்கியமான தலைவரை முகமது கொன்றுவிட்டார். அந்த இன மக்களைச் சேர்ந்தவர் தான் இந்த அபு அபக் என்பவர். இவர் அதிக வயது சென்ற முதியவர். இவர் முகமதுவிற்கு எதிர்த்து நிற்கும் படி தன் இன மக்களை உட்சாகப்படுத்துகிறார். இவர் செய்கின்ற செயல்கள் எப்போது முகமதுவின் முன்னிலையில் கொண்டுவரப்படுகிறதோ, அப்போது முகமதுவின் பதில் மிகவும் சுலபமாக இருந்தது. முகமது சொன்னார் " எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கை பார்க்கப்போகிறார்கள்?". சலிம் பி. உமர் முகமதுவின் விருப்பத்தை அபு அபக்கை கொன்றதின் மூலமாக நிறைவேற்றினார். 



"மர்வானின் மகள் அஸ்மா" வை கொலை செய்ய உமர் பி. அடிய்யாவின் பயணம்:

இந்தப்பெண் உமய்யா பி. ஜையத்தை சார்ந்தவள். அபு அபக் கொல்லப்பட்டதை குறித்து இந்தப்பெண் தன் வெறுப்பை வெளிப்படுத்தினாள். இந்தப் பெண் கதமா(யாஜித்) இனைத்தைச் சார்ந்த ஒரு மனிதனின் மனைவியாவார்.  இஸ்லாமையும் அதை பின் பற்றுபவர்களையும் குறித்து இந்த பெண் அவதூறாக கீழ்கண்டவாறு சொன்னாள்:
நான் மாலிக், நபித் மற்றும் அல்‍ கஜ்ரஜை நிந்திக்கிறேன்.
முரத் அல்லது மதஜ்க்கு சம்மந்தப்படாத,
உங்களில் ஒருவராக இல்லாத அந்நியருக்கா நீங்கள் கீழ்படிகிறீர்கள்
நீர்த்த ஆகாரத்திற்காக பசியோடு காத்திருக்கிறவன் போல
உங்கள் தலைவரை கொன்றுவிட்ட பிறகு அவரிடமிருந்து நன்மையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
அவரிடமிருந்து ஏதாவது சிறிது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்களின் நம்பிக்கை அற்றுப்போக்கும் படியாக,
திடீரென்று அவரை தாக்கத்தக்க சுயமரியாதையுள்ள ஒரு மனிதனும் இல்லையா?


ஹசன் பி. தபித் அவளுக்கு பதில் அளித்தார்:
வெயில் மற்றும் வகிஃப் மற்றும் கத்மா இன மக்களே
கஜ்ரஜ் இனத்தைவிட தாழ்ந்து போனீர்களோ
அவள் மடத்தனமாக கவலையுற்று தனக்குள் அழுதுக்கொண்டு இருக்கும் போது,
மரணம் வந்துக்கொண்டே இருக்கிறது.
புகழ்பெற்ற ஆரம்பம் கொண்ட மனிதரை அவள் கலக்கிவிட்டாள்,
அவர் வரும்போதும் போகும் போதும் உயர் குணம் உடையவர்.
இரவின் நடுஜாமத்திற்கு முன்பே, தன் இரத்தம் சொட்ட மரித்தாள்
இதனால், எந்த குற்ற உணர்வும் இல்லை.


அந்த பெண் சொன்னதை நபி கேள்விப்பட்டவுடனே, "எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். அப்போது "உமர் பி. அதிய அல்கத்மி" என்பவர் நபியோடு இருந்ததால், நபி சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தார், மற்றும் அன்று இரவே, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சொன்று, அவளை கொன்றுவிட்டார். மறுநாள் காலை அவர் நபியிடம் வந்து, அவர் என்ன செய்தார் என்றுச் சொன்னார். அதற்கு நபி "ஓ உமர், நீ இறைவனுக்கும் அவரது நபிக்கும் உதவி புரிந்தாய்!" என்றார். நான் அப்பெண்ணை கொன்றதால் ஏதாவது தீய விளைவுகளை நான் சந்திக்க வேண்டிவருமா? என்று உமர் நபியவர்களிடம் கேட்டார். அதற்கு நபி அவர்கள் "அவளைப் பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள் " (Two goats won't butt their heads about her) என்றார். பிறகு உமர் தன் மக்களிடம் சென்றுவிட்டார்.

மர்வான் மகளின் இந்த கொலை நிகழ்ச்சிக்கு பிறகு "கத்மா" இன மக்களின் இடையில் மிகப்பெரிய கிளர்ச்சி உண்டானது. இந்த பெண்ணிற்கு 5 மகன்கள் இருந்தார்கள். நபி அவர்களிடமிருந்து உமர் சென்று "நான் மர்வான் மகளை கொன்றுவிட்டேன், ஓ கத்மா இன மக்களே, உங்களால் முடிந்தால் என் முன் நில்லுங்கள், என்னை கத்திருக்க வைக்காதீர்கள்" என்று சொன்னார். இது தான் "கத்மா" இன மக்களிடையே இஸ்லாம் மிகவும் வலுவானதாக காணப்பட்ட முதல் நாள். இதற்கு முன்பாக முஸ்லீமானவர்கள் அது வரை தங்கள் நம்பிக்கையை மறைத்துவைத்திருந்தார்கள். இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்களில் முதல்மையானவர்கள் "உமர் பி. தபித்" என்பவர் ஆவார் மற்றும் இவர் "The Reader" என்று அழைக்கப்பட்டார். அப்துல்லா பி. அஸ் மற்றும் குஜைமா பி தபித்" என்பவர்களும் முஸ்லீமானவர்களில் முதன்மையானவர்கள் ஆவார்கள். மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, "கத்மா" இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள். (இபின் இஷாக் பக்கங்கள் 675 - 676.)

"அபு அஃபக்" என்பவரின் கொலைக்கு பிறகு, இன்னொரு பெண் மிகவும் தைரியமாக முகமதுவிற்கு எதிராக வெளிப்படையாக‌ பேசினாள். அப்பெண்ணின் பெயர் "மர்வானின் மகள் அஸ்மா" என்பதாகும். மறுபடியும் முகமது எப்படி தன்னை எதிர்த்தவர்களை சமாளித்தார் என்று நாம் பார்க்கலாம். முகமது " எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். "உமர் பி. அதிய அல்-கத்மி" என்பவர் அப்பெண்ணை அன்று இரவு கொன்று முகமதுவின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

இந்த நிகழ்ச்சிகளில் பல முக்கியமான விவரங்கள் அடங்கியிருக்கின்றன. இதில் முதன்மையானது முகமதுவின் குணத்தைப் (Character) பற்றியது. தன்னை எதிர்ப்பவர்களை தன் வழியிலிருந்து நீக்கிவிட, "கொலை" என்னும் ஆயுதத்தை பயன்படுத்தும் நபர்களைப் போல குணம் படைத்தவர் தான் முகமது. தன்னை எதிர்ப்பவர்கள் "அபு அஃபக்" போன்ற ஒரு வயதான முதியவராக இருந்தாலும் சரி, அல்லது "மர்வானின் மகள் அஸ்மாவாகிய" பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் இவரை எதிர்த்தால், முகமது அவர்களோடு இப்படித்தான் நடந்துக்கொள்வார். இப்படி முகமது செய்த பல எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டுப் போகலாம்[1], மற்றும் முகமது சில நேரங்களில் "கொடுமைப்படுத்துதல் - Torture" என்ற ஆயுதத்தையும் பயன்படுத்தியுள்ளார்[2]. இவைகளை கருத்தில் கொண்டு பார்ப்போமானால், மற்ற அரசர்கள் போல, தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள "கொலையையும், கொடுமைப்படுத்தி பயப்படுத்துவதையும்" முகமது பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாக புரியும். முகமது நாடுகளை வெற்றிக்கொண்டார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, மற்றும் அவர் சொல்கிறார்:

நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இஸ்லாமை தழுவுங்கள் அப்போது நீங்கள் பாதுகாப்பாக‌ இருப்பீர்கள். (Sahih Muslim, book 19, number 4380) [3]

(I extend to you the invitation to accept Islam. Embrace Islam and you will be safe. (Sahih Muslim, book 19, number 4380) [3] )

முகமது இப்படியாக தான் ஆட்சியை அமைத்தும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட எடுத்துக்காட்டை கொடுத்து சென்று இருக்கும்போது, "முகமது ஒரு அமைதியின் சொரூபம் " என்று எப்படி முஸ்லீம்கள் சொல்கிறார்கள்?
இரண்டாவதாக, இந்த நிகழ்ச்சிகள் இஸ்லாம் அரேபிய இன மக்களின் இடையில் எப்படி பரவியது என்பதை படம் பிடித்து காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, இந்த இரண்டு கொலைகளுக்குப் பிறகு, "கத்மா இன மக்களின் இடையில் இஸ்லாம் மிகவும் சக்தி மிகுந்ததாக மாறியது". உணமையில், "மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, "கத்மா" இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள் ". "இஸ்லாமின் சக்தியாக (Power of Islam)" அவர்கள் கண்டது என்ன? அது தான் தன்னை எதிர்ப்பவர்களை "கொலை செய்யும் சக்தி". (அதைத்தான் தற்பொழுது தலிபான் தீவிரவாதிகள் செய்கின்றனர்.)இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில், இஸ்லாம் மற்றவர்களை பயப்படவைத்தும், கொடுமைப்படுத்தியும் பரவியது என்பது மிகவும் தெளிவாக புரிகிறது, இதற்கு முகமது தன் அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளார்.  


இதற்கான ஆதாரங்கள் கீழே...


[1] Other examples of Muhammad having his opponents assassinated or approving of their murder:



இஸ்லாம் பற்றிய உம்மைகள் தொடரும்...


நன்றி இணையம்

Post Comment


7 comments:

Harini Resh said...

hmm theriyaadha vidayangal Dileep, thodarungal

HajasreeN said...

uriya pathil kudiya wiraiwil

power said...

tambi meendum oru murai nandraha antha books kalai padippa. avarudaya mulu varalaraiyum paditthu vittu pirahu, avarai ppatri solluppa!

டிலீப் said...

//power said...
tambi meendum oru murai nandraha antha books kalai padippa. avarudaya mulu varalaraiyum paditthu vittu pirahu, avarai ppatri solluppa!//

annae padithai than aluthune.... ethukum neka poei padijkooo

faizeejamali said...

please research the incident of sumamath ibnu yamama . A great achievement of prophet Mohamed sal . here my point is this article is elaborated with exaggerated lies and false information. 1 - abu afaki was a most worst genocide criminal. 2-ASMABINTHMARWAN here the information is totally false, where a lot of incidents left over untold which major part of asma encounter.

mjmrimsi said...

என் அன்பு நண்பரே நான் உங்கள் கருத்துடன் முரண்படுகிறேன் தாங்கள் இஸ்லாத்தை பற்றி அறிந்திட அந்த மதத்தில் உள்ள மக்களை பர்க்காது அல்-குர்ஆணை படயுங்கள்
மேலும் எனது வலைப்பக்கம் வாருங்கள் http://mjmrimsi.blogspot.com/

Shayas2009 said...

MR DLIP
ORUVARAI PATRI KURAI SONNAL MULUVATHUMAKA THERINTHU KONDU SOL.ARIKURAIYAKA THERINTHU KONDU SOLLTHE.

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.