துப்பாக்கி 80 % ஆக்ஷன் படமாக முருகதாசும் விஜயும் ரசிகர்களுக்கு தீபாவளி சரவெடியாக அளித்துள்ளனர்.
கதையின் படி இராணுவ அதிகாரியாக இருக்கும் ஜெகதீஸ் விடுமுறைக்காக மும்பையில் உள்ள தனது குடும்பத்தை பார்க்க வருகிறார். படம் ஆரம்பத்திலேயே விஜய்க்கு பெண் பார்க்கும் படலம் இடம் பெறுவதால் பார்ப்பவர்கள் என்ன கூடும் அப்போ லவ் ரோமன்ஸ் இல்லையோ என்று இதில் இயக்குனர் சுவராசியமாக கதையை நகர்த்தி செல்லுகின்றார்.
கஜால் அகர்வால் விஜயின் பைக் கியை களவாடி செல்வதால் வேறு வழியின்றி பஸ்ஸில் செல்கிறார் விஜய். பஸ்ஸில் இடம் பெறும் சில சம்பவங்கள் மற்றும் பஸ் குண்டு வெடிப்பு கதையின் திருப்பத்திற்கு வழிவகுக்கின்றது.

தீவிரவாத பற்றியும் அதனை முறியடிக்கும் ஹீரோக்கள் பற்றியும் பல தமிழ் படங்கள் வந்துள்ளது. ஆனால் முருகதாஸ் இங்கு பலருக்கு தெரியாத புது விடயத்தை தீவிரவாதத்துடன் சேர்த்து சமுதாயத்துக்கு தேவையான் ஓர் செய்தியை சொல்லியுள்;ளார்.
Sleeper Cells ஆதாவது மக்களோடு மக்களாக வாழும் அரசாங்கத்தின் மீது வெறுப்பின் நிமித்தம் அரசுக்கு நாட்டுக்கு எதிராக செயல்பட தங்கள் தலைவனின் கட்டளைக்கு காத்திருக்கும் ஒரு கூட்டமே.
இராணுவ அதிகாரியான ஜெகதீஸ் எவ்வாறு இந்த Sleeper Cells நபர்களை கண்டுபிடித்து ஒழிப்பதும் இவர்களுக்கு மூளையாக செயற்படும் தலைவனை அழிப்பதுமே கதை.
முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறையாமல் இன்னும் விறுவிறுப்பு பல மடங்கு அதிகரித்து செல்வது இயக்குனரின் திறமை.
ரசித்த காட்சிகள்
கஜலிடம் நீங்க டம் அடிப்பிங்களா என்று ஆரம்பித்து கஜலின் வாயாலேயே நான் குடிப்பேன் என்று சொல்ல வைக்கும் காமெடி கோர்வை.
12 பேரை ஒரே நேரத்தில் சுட்டு தள்ளுவது
ஜெயராம் சில காட்சிகளில் வந்தாலும் கலக்கல்
நான் அழகாக பிறந்தது என் தப்பா ??
நான் இருக்கைக்காக போன தப்பில்ல நான் இல்லாத டைம் போனதான் தப்பு
பொலிஸ் அதிகாரியாக வரும் சத்தியன் அலட்டல் இல்லாமல் விஜயின் திட்டகளுக்கு உதவியாக இருந்து சஸ்பென்ஸ் காமெடியில் கலக்கியுள்ளார்.காமெடிக்கு என்று தனியா ரக் இல்லாமல் கதையுடன் சேர்ந்து காமெடி செல்கின்றது.
சண்டை காட்சிகளில் போக்கிரியை விட ஸ்டையிஸாக நடித்துள்ளார் விஜய்.நண்பனில் இருந்த குறையை துப்பாக்கியில் நீக்கியுள்ளார்.
டான்ஸ் எப்போதுமே விஜயின் பிளஸ் போயின்ட் அதை பற்றி சொல்லவே தேவையில்லை பாடல்களுக்கான டான்ஸ் மூமன்ட் 100%
இசையை குறிப்பிட்டு ஆக வேண்டும் BGM சுறுசுறுப்பான புதிய ரகம்.ஹரிஸ் BGM க்கு என்று கடுமையாக உழைத்துள்ளார்.
விண்ணிலாவே பாடல் படத்திலிருந்த விறுவிறுப்பு மற்றும் ர்ழவக்கு ஜந்து நிமிடம் குளிர்மையை ஏற்படுத்திருகின்றார்.
கதையில் எந்த இடத்திலும் தோய்வு இல்லாமல் நகர்த்தியுள்;ளார் முருகதாஸ்.
இயக்குனரிடம் ஒரு கேள்வி
எப்படி பஸ்ஸில் குண்டு வச்சவன் விஜயிடமிருந்து தப்பிச்சு போய் 12 பேரையும் சந்திக்கிறான்.யாருட கண்ணுக்குமே அவனை தெரியலயா?? ஏற்கனவே அவன்ட போட்டே நியுஸ் பேப்பர் டி.வியில் பப்பிலிஷ் பண்ணிட்டாங்களே….
துப்பாக்கி தளபதிக்கு இன்னுமொரு தொடர் வெற்றி….
0 comments:
Post a Comment