ஆவிகளை பற்றி முதல் பதிவை வாசித்த அனேகமான வாசகர்கள் என்னிடம் கேட்ட கேள்வி எப்போது அடுத்த பதிவை தொடர்வீர்கள் என்று.ஆகவே அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த தொடரையும் இப்பதிவின் மூலம் தொடர்கின்றேன்.
லண்டனில் உள்ள மனோதத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இயக்கமான இந்த கேள்வியை 17000 பேருக்கு அனுப்பி ஒரு கருத்து கணிப்பை எடுத்தது.
கேள்வி: ஆவிகள் இருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா?
அதற்கு 15316 பேரிடமிருந்து ஆம் என்ற பதில் வந்தது.
இன்னொரு விஷயம் அந்த 10 சதவிகிதத்தில் பெரும்பாலானவர்கள் பெண்கள்(ஆண்களை விட ஆவிகளோடு உரையாடும் பெண் மீடியம் அதிகம் )
அடுத்து ஆவிகள் நான்கு வகை உண்டு என ஆராய்ச்சியாளர்கள் ஒப்பு கொள்கிறார்கள்.இந்த விவகாரத்தில் ஜி.என்.எம்.டைரல் என்கிற பிரபல ஆவி ஆராச்சியாளர் 1951-ல் எழுதிய ஒரு புத்தகம் மிகச் சிறந்த அறிவுபூர்வமானதாகக் கருதப்படுகின்றது.
அவ் நாலு வகைகளையும் பார்ப்போம்.
- முதலாவதாக உயிரோடு இருப்பவர்களின் ஆவி.அதாவது ஒருவர் உயிரோடு இருக்கும் போதே அவருடைய ஆவி வேறு எங்கோ வசிக்கும் ஒருவர்முன் தோன்றுவது.
- இரண்டாவது ஆபத்து நேர ஆவிகள் இதை Crisis Apparitions என்கிறார்கள்.எமக்கு பரிச்சயமான ஒருவர் இறக்கும் தருணத்திலோ அவர் இறந்த உடனடியாகவோ நம்முன் தோன்றுவது.
- மூன்றாவது சராசரி ஆவிகள்.பல நாட்களுக்கு முன்பு இறந்த ஒருவருடைய ஆவி.எப்போதாவது தோன்றுவது.இது எங்கு வேண்டுமானாலும் தோன்றி நடமாடும்.
- நான்காவது நீண்டகால ஆவிகள்.பாழடைந்த வீடுகள் பழைய கோட்டைகள் போன்ற இடங்களில் பல ஆண்டுகளாக சில சமயம் நூறு ஆண்டுகளுக்கு மேல் நடமாடும் பழம்பெரும் ஆவிகள்.(வேறெங்கும் செல்லாது.)
இவ்வகை ஆவிகளுக்கான உதாரணங்களை இனிவரும் பதிவுகளில் தருகிறேன்.
கடந்த பதிவின் இறுதியில் நான் குறிப்பிட்ட முரட்டுத்தனமான ஆவியை பற்றி நான் இன்னும் கூறவில்லையே என்று நீங்கள் கேட்பது எனக்கு விளங்குகின்றது.சரி வாங்க அந்த ஆவியையும் ஒரு கை பார்த்திட்டு வருவம்.
'The World and That' என்ற புத்தகத்தை எழுதிய ஃபீபி பாய்ன் என்கிற பெண்மணி ஆவிகள் பற்றி நிறைய ஆராய்ச்சிகளை செய்தவர்.அவர் ஒரு நாள் காரில் தன் வீட்டுக்கு செகரெட்டரியுடன் திரும்பி கொண்டிருந்தார்.வரும் வழியில் காரில் கோளாறு ஏற்ப்பட இரவு நேரம் அருகே உள்ள லோட்ஜி ஒன்றில் இரவு தங்கிவிட்டு போகலாம் என்று முடிவு செய்தனர்.
பாய்ன் சொல்லுகிறார்….
லோட்ஜ் உள்ளே நுழைந்து ரிஜிஸ்தரில் கையெழுத்து போடும் போதே என் உள்ளுணர்வுகள் சிலிர்ந்தன.மாடியில் ஓர் அறையில் நானும் இ;ன்னொறு அறையில் உதவியாளரும் தங்கினோம்.அதற்குமுன் நான் இரு அறைகளையும் பார்வையிட்டேன்.குறிப்பாக நான் தங்கப்போகின்ற அறைக்குள் நுழைந்த போது மறுபடியும் என் உள்ளுணர்வு எச்சரித்தது.சாப்பிட்ட பிறகு அறைக்குள் போய் படுத்த சில நிமிடங்களில்…..
ஆழ்ந்து தூங்கிவிட்டேன்.சில மணிகள் கடந்திருக்கும் லேசாக விழிப்பு வந்தது.அந்த அறை இப்போது சற்றுக் குளிர்ந்ததுபோல் தோன்றியது.சற்று பதற்றமானேன்.படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளபார்த்த போது அது நிகழ்ந்தது.இரு முரட்டுக்கரங்கள் என் கழுத்தை பிடித்தது.மூச்சு திணறியது.என் பார்வை அந்த உருவத்தை நோக்கியது.தொள தொளவென்று பச்சைநிறக் கோட் அணிந்து சற்று முகம் வெளிறிப்போன ஒருவன்.அவன் கட்டில்மீது இருந்து என் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தான்.
பாய்ன் நிறையவே ஆவிகளை பார்த்த அனுபவசாலி.உங்களை என்னை மாதிரியோ மிரண்டு போகிறவர் அல்ல.இருப்பினும் பச்சை நிறகோட்டுடன் வெளிறிய முகத்துடன் தன் கழுத்தை அந்த உருவம் நெரித்த போது அந்த பெண்மணி கொஞ்சம் திணறிப் போனதாகவே குறிப்பிடுகிறார்.
என்னால் மூச்சுவிட முடியவி;ல்லை.கூடவே இந்த திடீர் தாக்குதலில் கோபமும் வந்தது.நான் அதனிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ள முடிவு செய்தேன்.’போ’ என்று இருமுறை சிரமப்பட்டு கூச்சலிட்டேன்.அந்த உருவம் சற்று பின்வாங்கியபோது எழுந்து உட்கார்ந்தேன்.வேகமாகக் கதவுபக்கம் என் கையை நீட்டி ‘போ வெளியே ! என்று கத்தினேன்.அதை நோக்கி முன்னேறுவது போல பயமுறுத்தினேன்.அந்த ஆவி சற்று பரிதாபமாக என்னையே பார்த்துகொண்டு பின் நோக்கி நகர்வதை போலத் தோன்றியது.பிறகு கதவுக்கு அருகில் சென்று மெல்ல மங்கலாக மாறி திடீரென்று மறைந்துவிட்டது.
அவ் அறை பழைய சீதோஷ்ண நிலைக்கு திரும்பியது.
என் கழுத்தில் வலி.கீறல் மாதிரி ஓர் உணர்வு.எழுந்து சென்று கண்ணாடியில் பார்த்தேன்.ஆவி என்னை முரட்டுத்தனமாக கையாண்டதால் என் கழுத்து முழுவதும் சிவந்துபோய் கீறல் மயமாகத்தானே இருக்க வேண்டும்? ! ஆனால் கண்ணாடியில் பார்த்தபோது எந்த கீறலும் தெரியவில்லை.சாதாரணமாகவே இருந்தது.
ஆவிகளை பார்த்து கவலைப்படத் தேவையில்லை.பயப்பட்டால்தான் ஆபத்து ! என்று சொல்லுகிறார் பாய்ன்.
நடக்கிற காரியமா??
பதிவு - 1
ஆவிகளின் உலகம் தொடரும்.......
நன்றி : மதன்
13 comments:
//ஆவிகளை பார்த்து கவலைப்படத் தேவையில்லை.பயப்பட்டால்தான் ஆபத்து//
எப்படி பாஸ்..பயப்படாம இருக்கிறது,,
ஆவிகள் தொடர்பான சம்பவங்கள் சுமாராக இருந்தாலும் வாசிக்கும்போது வாசகர்கள் கொடுக்கும் கற்பனை உள்வாங்கல் கோரமாகவும் அமைந்துவிடும் என்று மதன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகின்றது. ரொம்ப வெருட்டுறீங்க டிலீப்.
Super, pls, continue
நீங்களும் ஆவி பத்தி எழுதுறீங்க, அதனால ஜாக்கிரதை, பயந்துராதீங்க :)
//ஹரிஸ் said...
//ஆவிகளை பார்த்து கவலைப்படத் தேவையில்லை.பயப்பட்டால்தான் ஆபத்து//
எப்படி பாஸ்..பயப்படாம இருக்கிறது//
ஹிரிஸ் என்ன பண்றது?? பாய்ன் சொல்றாங்களே....ஒருக்கா Try பண்ணிபார்ப்பமா??
//Jana said...
ஆவிகள் தொடர்பான சம்பவங்கள் சுமாராக இருந்தாலும் வாசிக்கும்போது வாசகர்கள் கொடுக்கும் கற்பனை உள்வாங்கல் கோரமாகவும் அமைந்துவிடும் என்று மதன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகின்றது. ரொம்ப வெருட்டுறீங்க டிலீப்//
ஜனா அண்ணா நானும் கதை கோரமாக சொல்ல கூடாது என்றுதான் பார்க்குறன் ஆனால் அவ்வாறு செல்லுகின்றதே.ரொம்ப பயந்தீட்டிகளோ???
//அரபுத்தமிழன் said...
நீங்களும் ஆவி பத்தி எழுதுறீங்க, அதனால ஜாக்கிரதை, பயந்துராதீங்க :)//
நான் அதிகமாக இரவு நேரத்தில் தான் ஆவிகள் சம்பந்தமாக படிப்பேன்.
ஆகவே எழுதுபோது அவ்வாறான பயம் வருவதில்லை
ஏம்பா இந்த வேண்டாத ஆராய்ச்சியெல்லாம்????
//Lakshmi said...
ஏம்பா இந்த வேண்டாத ஆராய்ச்சியெல்லாம்????//
லக்ஷ்மி அம்மா ஒரு பொழுதுபோக்கு
எனக்கு ஆவிகள் சம்பந்தமான் கதைகள் வாசிக்க ரொம்ப பிடிக்கும்
டிலீப் சுப்பர் சுப்பர் இன்னும் கொஞ்சம் பயங்கரமா எழுதுங்களே :)
அடுத்த பதிவுக்காக காத்துருக்கிறேன்
//Harini Nathan said...
டிலீப் சுப்பர் சுப்பர் இன்னும் கொஞ்சம் பயங்கரமா எழுதுங்களே :)
அடுத்த பதிவுக்காக காத்துருக்கிறேன்//
ஹரிணி இன்னும் கொஞ்சம் பயங்கரமா எழுதினா யாருமே என்ட வலைப்பக்கத்துக்கு வர மாட்டாங்க...LOL
நன்றி சீக்கிரத்தில் எழுதுகிறேன்.
ஆவிக்கு அரபி பாஷையில் "ஷைத்தான்" என்று கூறுவார்கள்
அருமை திலீப்
//மகாதேவன்-V.K said...
ஆவிக்கு அரபி பாஷையில் "ஷைத்தான்" என்று கூறுவார்கள்
அருமை திலீப்//
ஆம் தேவன் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
Post a Comment