அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

ஆவிகளின் உலகம் - 1
இன்றைக்கு ஒரு வித்தியாசமான பதிவோடு உங்களை சந்திக்கின்றேன்.அது என்னது என்று சொல்லவா?? ஓகே ஆவிகள் பற்றி அனேகர் கேள்விப்பட்டு இருப்பிர்கள்.கொஞ்சம் அதை பற்றி தெரிஞ்சு கொள்வமே…..
ஆவி என்பது ஒரு பிரமை என்று சில ஆய்வாளர்கள் கூறினாலும் எதையும் சுலபத்தில் ஒப்புகொள்ளாத அறிவாற்றலும் பகுத்தறிவும் மிகுந்த பல விஞ்ஞானிகள் ஆவிகளை அலட்சியப்படுத்த தயாராக இல்லை.


முதலில் நான் உங்களுக்கு சில ஆவிகளை பற்றி சொல்லபோகிறேன்.ஆவிகள் எப்படி இருக்கும் எப்படி நடந்து கொள்ளும் அவை ஆபத்தானவையா எப்பது  பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கின்றது.


ஆவி என்றால் என்ன??
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பேய்களை பற்றி கருத்து ஒன்று உண்டு.அதாவது ஆவி என்பது ஒரு 3D உருவம்.கண்ணுக்கு தெரிகிற சற்றே அவுட் ஆஃப் போகஸில் தோற்றமளிக்கிற ஒரு Physical Object .அதன் கால்கள் நமக்கு தெரியமால் இருக்கலாம்.சில சமயம் தெரியவும் செய்யலாம்.அது இறந்துபோன ஒருவருடைய உருவமாக இருக்கும்.ஆவி ஒருவருடைய கண்களுக்கு மட்டும் தெரியலாம் சில சமயம் பலராலும் கூட்டமாக அதை பார்க்க முடியும்.


நம் கண்களுக்கு தெரிவதற்கு முன்பே நாய் ப+னை குதிரை போன்ற பிராணிகளை ஆவியின் நடமாட்டம் பாதிக்கின்றது.அருகில் ஆவிகள் நடமாடுவது அவற்றுக்கு புரிகிறது. இன்னும் ஒன்று ஆவிகளுக்கு கதவுகள் சுவர்கள் ஒரு பொருட்டல்ல.சுவருக்குள் புகுந்து மறைந்து அடுத்த அறைக்கு அவற்றால் போக முடியும்.


இப்போழுது நாம் சாதாரண ஆவி அல்லது சிம்பிளான ஆவியை பற்றி ஒரு உம்மை சம்பவத்துடன் பார்ப்போம்.


டாக்டர் கென்னத் வாக்கர் உலகபுகழ் பெற்ற மருத்துவ மேதை. சாமான்யர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அவர் எழுதி விட்டுப்போன ' The Story of Medicine ' போன்ற மருத்துவ மற்றும் மனோதத்துவ புத்தகங்கள் உண்டு.குறிப்பாக ஆவிகளை புரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் அந்த டாக்டர்.  The Unconscious Mind என்ற அவருடைய புத்தகத்தில் Apparitions என்கிற அத்தியாயத்தில் விவரிக்கப்படு;ம் ஆவி இது.


கதையை பார்ப்போமா??
குறிப்பு: நீங்கள் கொஞ்சம் பயந்த சுபாவமா?? கற்பனை சக்தி அதிகம் உள்ளவரா?? தனியாக வசிப்பவரா?? 
இரவில் இதை படிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.


வாக்கரின் நெருங்கிய நண்பர் டாக்டர் ரோவல்.மூடநம்பிக்கை எதுவும் இல்லாத மனிதர்.லண்டனில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ரோவல் தனது நண்பர் கென்னத் வாக்கரிடம் விவரித்த நிகழ்ச்சி இது.


மிகவும் சிம்பிளான ஆவி இது.டாக்டர் ரோவல் இப்படி சொன்னார்.
மதியம் 12 மணி அடிக்க இன்னும் பத்து நிமிஷங்கள் இருந்தன.என் ரவுண்ட்ஸை முடித்துக் கொண்டு ஆஸ்பத்திரியிலிருந்து பக்கத்தில் உள்ள மெடிக்கல் ஸ்கூலுக்கு நடந்தேன்.இரண்டு கட்டடங்களை இணைக்கும் பாலம் போல வராண்டா உண்டு.நான் அதில் நடந்து சென்ற போது எதிரே ஒரு நர்ஸ் மெல்ல நடந்து வந்தாள்.வயது ஜம்பதுக்கு மேல் இருக்கும்.மருத்துவமனையின் யூனிப்பார்ம் வெளிர் நீலத்தில் வெள்ளை புள்ளிகள் கொண்ட உடையை அணிந்திருந்த அவரை நான் அதுவரை அந்த ஆஸ்பத்திரியில் பார்த்ததில்லை.நான் அருகில் சென்ற போது சற்று ஒதுங்கி அவரைப் பார்த்து நாகரிகம் கருதி என் தொப்பியை தொட்டு மரியாதை காட்டினேன்.அவரும் மெல்ல தலையசைத்து விட்டு என்னை தாண்டி செல்ல எனக்கு ஏதோ பொறி தட்டியது.அவர் அணிந்திருந்த யூனிப்பார்மில் ஏதோ மாறுதல்.கைப்பகுதி சற்று பழைய ஸ்டைலாக இருந்தது.அது நீளமான வராண்டா.அந்த நர்ஸ் என்னை தாண்டி சில அடிகள் கூட போயிருக்க முடியாது.நான் ஒரேடியாக திரும்பி பார்த்தேன் அங்கே நர்ஸ் இல்லை.இருபுறமும் தோட்டம் அதற்குள் அவர் எங்கேயும் போயிருக்க முடியாது.அதாவது கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விட்டார் என்பது தான் உம்மை.


வழியெல்லாம் என் கண்கள் அலைபாய்ந்தன.தலைமை மேட்ரனைத் தேடினேன்.அவர் இல்லாததால் மற்ற சீனியர் நர்ஸ்களை அறைக்கு அழைத்தேன்.சுமார் 50 வயதுள்ள சற்றே நீளமான மூக்கோடு கூடிய நர்ஸ் இங்கே பணிபுரிகிறரா? என்று நான் ஆரம்பித்த உடனே அங்கே ஓர் இறுக்கமான மௌனம் நிலவியது.பிறகு உதவி தலைமை மேட்ரன் மெல்லிய குரலில் கேட்டார்.’டாக்டர் எட்டாம் நம்பர் வார்ட் சிஸ்டரைப் பார்த்தீர்களா?
மேலும் விசாரித்ததில் ஜந்தாறு நர்ஸ்கள் அதை பார்த்திருக்கிறார்கள்.எல்லோரும் ஒரே மாதிரி அடையாளங்களை சொன்னார்கள்.கொஞ்ச நேரத்துக்கு பிறகு இன்னொரு பணியாளர் மெதுவாக சொன்னார்.டாக்டர் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.


எட்டாம் நம்பர் வார்டில் டியுட்டிக்கு போக எல்லோருமே தயங்குகின்றார்கள்.பகல் இரவு என்றில்லை சற்று கூட்டமில்லாமல் அமைதியான நேரத்தில் எல்லாம் குறுக்கும் நெடுக்குமாக அந்த நாஸ்.என்னை போலவே இன்னும் சில சீனியர் மருத்துவாகள் அந்த நர்ஸை நேருக்கு நேர் பார்த்திருக்கிறார்கள்.அப்படி ஒருவரான ரிட்டயர் ஆகிவிட்ட டாக்டர் ப்ராங்கிடம் இதை பற்றி கேட்டேன்.அவரும் அந்த நர்ஸை பார்த்துள்ளார்.அவர் பார்த்தது 6 மணி லேசாக இருட்ட ஆரம்பித்த நேரம்.அவரும் வராண்டாவில் தான் பார்த்துள்ளார்.சில வித்தியாசங்கள் இருந்தன.அந்த நர்ஸ் சற்று வேகமாக நடந்து வந்ததாகவும் முகத்தில் ஏதோ கலவரம் காணப்பட்டது.தன்னை நோக்கி வரும்போதே கண்ணெதிரே பளிச் சென்று மறைந்து போனதாகவும் சொன்னார் ப்ராங்க்.


ஆகவே யாருக்கும் பிரச்சனையேற்படுத்தாத எளிமையான ஆவி என்பது இதுவே.


டாக்டர் வாக்கரின் விளக்கப்படி ஆவிகளுக்கு கால்கள் தெரியாது என்பதும் அது தரையிலிருந்து சில அங்குலங்கள் உயரத்தில் மிதந்து வரும் என்பது தவறான கருத்து.அந்த சிஸ்டருக்கு நன்கு தரைபதிய நடந்து வந்தார்.புகை மண்டலமெல்லாம் இல்லை.அதைவிட பெரிய விஷயம் நர்ஸ் நடந்து வந்த போது மெல்லியதாக அவருடைய நிழலும் வராண்டாவில் கூடவே வந்தது என்கிறார்.


அந்த ஆவி நர்ஸின் பின்னணிக் கதை…..
அந்த நர்ஸ்க்கும் மேலதிகாரிகளுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட ஒரு தலைமை டாக்டர் கடுமையாக நர்ஸிடம் ஏதோ சொல்ல சென்ஸிடிவ் டைப்பான அந்த நர்ஸ் மனம் உடைந்து ஓடிப்போய் அந்த ஆஸ்பத்திரியின் நாலாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துள்ளார்.


என்ன இருக்குறீன்களா???? கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வாங்க…


அடுத்த பதிவில் சற்று வித்தியாசமான முரட்டுத்தனமான ஆவி பற்றி பார்ப்போம்.

ஆவிகளின் உலகம் தொடரும்.......

நன்றி : மதன்Post Comment


9 comments:

Harini Nathan said...

ஐயோ ஐயோ என்ன டிலீப் இப்படி பயமுறுத்துறீங்க lol
வித்தியாசமான பதிவு :)

டிலீப் said...

//Harini Nathan said...
ஐயோ ஐயோ என்ன டிலீப் இப்படி பயமுறுத்துறீங்க lol வித்தியாசமான பதிவு :)//

ஹரிணி இது யஸ்ட் சிம்பிளான ஆவி இன்னும் Main ஆவி வர இல்ல ஹி.....ஹி.....

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


www.ellameytamil.com

philosophy prabhakaran said...

இதுபோன்ற கதைகளை எனக்கு படிக்க பிடிக்கும்... தொடர்ந்து நிறைய பாகங்களை எழுதுங்கள்...

டிலீப் said...

//philosophy prabhakaran said...
இதுபோன்ற கதைகளை எனக்கு படிக்க பிடிக்கும்... தொடர்ந்து நிறைய பாகங்களை எழுதுங்கள்..//

எனக்கும் இவ்வாறான கதைகள் பிடிக்கும் தொடர்ந்து எழுதுகிறேன்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பிரபாகரன்

அரபுத்தமிழன் said...

Interesting pls. continue

டிலீப் said...

//அரபுத்தமிழன் said...
Interesting pls. continue//

thank you thamilan, ill continue

priya said...

ஐயோ திகிலா இருக்கே........அடுத்ததா போடுங்க....சீக்கிரம்..........

டிலீப் said...

//priya said...
ஐயோ திகிலா இருக்கே........அடுத்ததா போடுங்க....சீக்கிரம்.........//

கண்டிப்பாக வெகுசீக்கிரத்தில் போடுகிறேன் பிரியா
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பிரியா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.