அலன் மாத்திசன் டூரிங் (Alan Mathison Turing - 23 ஜூன் 1912 – 7 ஜூன் 1954) ஒரு ஆங்கிலேயக் கணிதவியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். இவர் தற்காலக் கணினி அறிவியலின் தந்தையாகவும் கருதப்படுவது உண்டு. டூரிங் இயந்திரத்தின் உதவியுடன் படிமுறை (algorithm), கணக்கிடல் போன்ற கருத்துருக்களை முறைப்படுத்துவதில் இவர் பெரும் பங்களிப்புச் செய்தார்.
இயந்திரங்களை உணர்வு உள்ளவையாகவும், சிந்திக்கக் கூடியவையாகவும் உருவாக்க முடியுமா என்பது குறித்த செயற்கை அறிவுத்திறன் தொடர்பான விவாதத்துக்கு டூரிங் சோதனை மூலம் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். இவர் தேசிய இயற்பியல் சோதனைக்கூடத்தில் பணிபுரிந்த போது நிரல் சேமிப்புக் கணிப்பொறிகளுக்கான முதல் வடிவமைப்புக்களை செய்தார். ஆனாலும் இவை அவற்றின் முழு வடிவில் அப்போது உருவாக்கப்படவில்லை. 1948 ஆம் ஆண்டில் இவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மான்செஸ்டர் மார்க் என்னும் உலகின் முதலாவது உண்மையான கணினிகளுள் ஒன்றை உருவாக்கும் பணியில் இணந்துகொண்டார்.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பிளெச்லி பார்க்கில், ஐக்கிய இராச்சியத்தின், இரகசியக் குறியீடுகளைப் புரிந்துகொள்வதற்கான மையத்தில் பணி புரிந்தார். அப்போது சில காலம், ஜேர்மனியின் கடற்படை தொடர்பான இரகசியக் குறியீட்டுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் இருந்தார். ஜேர்மன் குறியீடுகளைப் புரிந்து கொள்வதற்கான பல நுட்பங்களை இவர் உருவாக்கியுள்ளார்.
இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள சத்ரப்பூர் என்னும் இடத்திலேயே டூரிங் கருவில் உருவானார். இவரது தந்தையார் ஜூலியன் மாத்திசன் டூரிங்இந்தியக் குடிசார் சேவையில் அப்போது பணியாற்றி வந்தார். அலன் டூரிங்கின் தாயார் சாரா, மதராஸ் தொடர்வண்டிப் பகுதியில் தலைமைப் பொறியாளராக இருந்த எட்வார்ட் வாலர் ஸ்டோனி என்பவரின் மகள். ஜூலியனும், சாராவும் தமது பிள்ளையை இங்கிலாந்திலேயே வளர்க்க விரும்பியதால் அவர்கள் இந்தியாவிலிருந்து இலண்டனுக்குத் திரும்பினர். அங்கே மைடா வாலே (Maida Vale) என்னும் இடத்தில் 1912 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் நாள் அலன் பிறந்தார்.
அலன் டூரிங்குக்கு ஒரு அண்ணன் இருந்தார். இவர்கள் சிறுவர்களாக இருந்தபோது, இவரது தந்தையார் இந்திய குடிசார் சேவையில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளாத காரணத்தால் ஜூலியனும் சாராவும் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் அடிக்கடி பயணம் மேற்கொண்டிருந்தனர். அக்காலத்தில் அலனும், அவரது அண்ணனும் பெற்றோரின் நண்பர்களின் பாதுகாப்பில் இருந்துவந்தனர்.
மிகவும் இளம் வயதிலேயே அலன் டூரிங்கின் அறிவுத்திறன் வெளிப்பட்டது. அலனுக்கு ஆறு வயதானபோது அவரை அவரது பெற்றோர் சென் மைக்கேல் பள்ளியில் சேர்த்தனர். 14 வயதானபோது இவர் டோர்செட் என்னும் இடத்தில் இருந்த, மிகவும் புகழ் பெற்றதும், செலவு கூடியதுமான ஷேர்போர்ன் பள்ளியில் சேர்ந்தார். இவர் அப்பள்ளியில் சேரவேண்டிய முதல் நாள் இங்கிலாந்தில் ஒரு பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.
முதல் நாள் எப்படியாவது பள்ளிக்குப் போய்விட வேண்டும் என்பதில் குறியாக இருந்த டூரிங், தனது [மிதிவண்டி]]யில் முதல் நாளே புறப்பட்டு சவுதாம்ப்டனில் இருந்து 60 மைல் தொலைவிலிருந்த பள்ளிக்கு எவருடைய துணையும் இன்றிச் சென்றார். கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் டூரிங்குக்கு இருந்த ஆர்வத்தைச் சில ஆசிரியர்கள் மதிக்கவில்லை.
கல்வி என்றால் மொழி, இலக்கியம், வரலாறு, கலை போன்ற பாடங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவர்கள் எண்ணினர். அலனின் தலைமை ஆசிரியர் அவரது பெற்றோருக்குப் பின்வருமாறு எழுதினார்: "நான் நினைக்கிறேன் இவன் இரண்டு பள்ளிகளுக்கு இடையே இருக்கமுடியாது என்று. பொதுப் பள்ளியில் இருக்கவேண்டுமானால் இவன் ஒரு படிப்பாளியாக வருவதைக் குறியாகக் கொண்டிருக்க வேண்டும். அறிவியல் வல்லுனனாக வருவதே இவனது நோக்கமானால் இவன் பொதுப் பள்ளியில் தனது நேரத்தை வீணாக்குகிறான்."
நிலைமைகள் இப்படி இருந்தபோதும், டூரிங் தான் விரும்பிய பாடங்களில் மிகுந்த திறமையைக் காண்பித்து வந்தார். 1927 ஆம் ஆண்டில் அடிப்படை நுண்கணிதத்தைக் கற்றுக்கொள்ளாமலே சிக்கலான கணக்குகளுக்குத் தீர்வு கண்டார். 1928 இல் 16 வயதாக இருந்தபோது அல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஆக்கங்களைப் பார்க்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அவற்றை டூரிங் புரிந்துகொண்டார்.
அதே பள்ளியில் படித்தவரும், சற்று மூத்தவருமான கிறிஸ்தோபர் மார்க்கம் என்பவருடன் கொண்ட நட்பினால் டூரிங்கின் நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புக்களும் உயர்ச்சியடைந்தன. ஆனால், பாள்ளியின் கடைசித் தவணையின் போது நோய் காரணமாக மார்க்கம் திடீரென இறந்து விட்டான். இதனால் டூரிங்கின் சமய நம்பிக்கை தகர்ந்து ஒரு நாத்திகர் ஆனார். மனித மூளையின் செயற்பாடு உள்ளிட்ட எல்லாத் தோற்றப்பாடுகளுமே பொருண்மை சார்ந்தனவே என்னும் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டார்.
3 comments:
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
www.ellameytamil.com
கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
நல்ல பதிவு டிலீப்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி
Post a Comment