ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். சம்ஹைனில் கொண்டாடப்படும் செல்டிக் திருவிழாவிலும்மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இக்கொண்டாட்டத்தின் வேர்கள் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.
மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.
வரலாறு
ஆலோவீன் பழமையான செல்டிக் திருவிழாவில் இருந்து வந்தது.. சமஹைன் திருவிழாவானது கேல் நாகரிகத்தின் அறுவடைக் காலங்களில் கொண்டாடப்படுகிறது. பல சமயங்களில் இது செல்டிக் புது வருடம் என அறியப்படும்.
இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான இடைவெளி இந்நாளில் மெலிந்து போவதாய் பழைய செல்ட் இனத்தவர் நம்பினர். அன்றைய நாளில் தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.
இந்த கொண்டாட்டத்தில் ஒரு சிறிய தீயை எழுப்பி அவற்றுள் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் இடப்படுகின்றன. பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் கெட்ட ஆவிகள் செய்வதைப் போல கிழிக்கப்படுகின்றன. அல்லது கெட்ட ஆவிகளை சமாதானப்படுத்த அவ்வாறு செய்யப்படுகிறது.
ஆலோவீன் நாளன்று பழைய எலும்புக்கூடுகளை முன்னிலைப்படுத்துவார்கள் இது அவர்களை விட்டுப் பிரிந்தவர்களை குறிப்பிடுகிறது. ஐரோப்பாவிலிருந்தான வழக்கத்தில் முதன்முதலில் டர்னிப் காய்கறியில் தீய ஆவியின் முகம் செதுக்கப்பட்டது. அதற்குள் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இதற்கு ஜேக் லாந்தர் என்று பெயர்.
ஜேக் என்ற பொறாமை குணம் கொண்ட, சூதாடும் வழக்கமுள்ள குடிக்கும் பழக்கமுள்ள ஒரு விவசாயி பேயானது மரத்தில் ஏறுமாறு செய்து பின்னர், அது ஏறுகின்ற சமத்தில் அதன் கிளையை குறுக்கே வெட்டினார். இதற்குப் பழி வாங்கும் விதமாக பேயானது ஒரு சாபம் கொடுத்தது.
ஜேக் தனது ஒரே விளக்கினைக் கொண்டு பூமியில் அங்கும் இங்குமாக இரவில் அலையுமாறு சாபம் கொடுத்தது. வட அமெரிக்காவில் டர்னிப்புக்குப் பதிலாக பூசணிக்காய் பயன்படுத்தப்படுகிறது. பூசணிக்காய் எளிதாகக் கிடைப்பது மட்டுமில்லாமல் மிகவும் பெரிதாகவும் இருக்கிறது.
இதனால் பூசணிக்காயை செதுக்குவது என்பது டர்னிப்பை வெட்டுவதை விட எளிதாக இருக்கிறது. பூசணிக்காய் வெட்டும் செயல் ஆனது அமெரிக்காவில் பொதுவாக அறுவடைக் காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

ஆலோவீனோடு தொடர்புடைய உருவச் சித்திரங்கள் அனைத்தும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து வந்துள்ளன. தேச வழக்கங்களும், கோதிக் மற்றும் திகில் இலக்கியங்களும், பிராங்கன்ஸ்டீன், தி மம்மி போன்ற பெரும்புகழ் படைத்த திகில் திரைப்படங்களும் இதில் பெரும் பங்களிப்பு செய்துள்ளன.
வீடுகள் இத்தகைய ஆலோவீன் அடையாளங்கள் கொண்டு
அலங்கரிக்கப்படுகின்றன.
வீடுகள் இத்தகைய ஆலோவீன் அடையாளங்கள் கொண்டு
அலங்கரிக்கப்படுகின்றன.
ஆரஞ்சு மற்றும் கருமை ஆகிய இருவண்ணங்கள் இந்த கொண்டாட்டத்தில் தொடர்புபட்ட வண்ணங்களாய் உள்ளன. இவை இருளையும் நெருப்பின் வண்ணத்தையும் குறிப்பதாய் கருதப்படுகிறது.
ஆடை அலங்கரிப்புகள்
ஆலோவீன் ஆடை அலங்கரிப்புகள் என்பது பெருத்த உருவங்கள் கொண்ட பேய்கள், முறையற்றபடி மந்திர சக்தியை பயன்படுத்தும் சூனியக்காரிகள், எலும்புக்கூடுகள் மற்றும் பிசாசுகள் ஆகியவற்றின் அடையாளங்கள் கொண்ட உடை அலங்கரிப்புகளாக இருக்கும். இந்த ஆடை அலங்கரிப்புகள் பாரம்பரிய வகை என்பது தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள், மற்றும் நவீன நாகரீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன.
அமெரிக்க தேசிய சில்லரை விற்பனைக் கூட்டமைப்புக்காக பிக் ரிசெர்ச் என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் 2005 ஆம் ஆண்டில் 53.3% நுகர்வோர் ஆலோவீன் அலங்கரிப்புகளுக்காக சராசரியாக $38.11 செலவிடத் திட்டமிட்டிருந்ததாக கண்டறியப்பட்டது. இது முந்தைய வருடத்தை விட $10 அதிகமான தொகையாகும்
மதம் சார்ந்த கருத்துக்கள்
வட அமெரிக்காவில் ஆலோவீனைப் பற்றிய கிருத்துவ பார்வையானது முற்றிலும் மாறுபடுகிறது. சில கிருத்துவ அமைப்புகள் இந்த நாளை கிருத்துவக் கலாச்சாரத்திற்கு உட்பட்ட ’அனைத்து துறவியர் தினமாக’க் கூறுகின்றன. இந்த கருத்தை மறுக்கும் கிருத்துவர்கள் இதனை புதுப்பித்தல் நாளாகக்கொண்டாடுகின்றனர்.
அதாவது ஒற்றுமைக்காக இறை வணக்கம் செய்யும் நாளாக இதைக் கருதுகின்றனர்.செல்டிக் கிருத்தவர்கள் இந்த நாள் குறித்ததாக சம்ஹைன் செய்திகளைப் பற்றியும் மற்றும் இதில் உள்ள நாகரீக சம்பந்தமானவைகளைப் பற்றியும் பேசுகின்றனர்.

பல கிருத்துவர்கள் ஆலோவீன் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதை மதச்சார்பற்ற நாளாகவே கருதுகின்றனர். இந்த நாள் அன்று இனிப்புகள் கொடுத்து மகிழ்கின்றனர். ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆலோவீன் நாளை ஒரு கிருத்துவ மதம் சம்பந்தப்பட்ட நாளாகவே கருதுகின்றன.
பெரும்பான்மையான கிருத்துவர்கள் உண்மையில் இதில் சாத்தான்கள் பற்றிய எதுவும் இல்லை என்றும் குழந்தைகளின் மத உணர்வுகளுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறுகின்றனர். இறப்புகளைப் பற்றியும் அவை குறித்த கொள்கைகளைப் பற்றியும் செல்டிக் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்த முறைகள் ஒரு பாடமாக இருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
கிருத்துவர்களில் சீர்திருத்தப் பிரிவைச் சார்ந்தவர்களும் அடிப்படைவாதிகளும் ஆலோவீன் கருத்துக்களை மற்றும் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். இதை அற்பமானது என்று அவர்கள் கருதுகின்றனர்.சிலர் ஆலோவீன் கொள்கைகள் முற்றிலுமாக கிருத்துவ நம்பிக்கையிலிருந்து மாறுபடுவதாகக் கூறுகின்றனர்.இதன் உண்மை வடிவம் பகன் இனத்தாருடைய இறந்தோர் திருவிழாவைச் சார்ந்தது என்பது அவர்கள் வாதம்.

கிருத்துவ மதத்தை தவிர மற்ற எல்லா மதங்களும் ஆலோவீன் கருத்துக்களில் மாறுபடுகின்றன. செல்டிக் பகன் இனத்தவர் இந்த பருவத்தை ஆண்டில் புனிதமானதாய் கருதுகின்றனர்.
6 comments:
வித்தியாசமான பதிவு .தொடர வாழ்த்துக்கள்
பகிர்விற்கு நன்றி
//roshaniee said...
வித்தியாசமான பதிவு .தொடர வாழ்த்துக்கள்
பகிர்விற்கு நன்றி//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி றொஷானி
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
டிலீப்
வித்தியாசமான பதிவு நண்பா வாழ்த்துக்கள்
//nis said...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
டிலீப்//
உங்களுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்
//sivatharisan said...
வித்தியாசமான பதிவு நண்பா வாழ்த்துக்கள்//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா
Post a Comment