நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு / நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு, அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள். குறைந்த பட்சம், அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்குமே!
நீங்கள் அனுப்பிய மெயிலை உங்கள் நண்பர் படித்து விட்டாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.
செய்முறை விளக்கம்:
1). முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
2). இப்போது, www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.
அங்கு, உங்கள் முகவரி, உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள். Step 3 -ல் முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்க. (அப்படி செய்தால், நீங்கள் ட்ராக் செய்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.)
3). இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து, வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image" (Firefox) & Copy(IE) சொடுக்கி, copy செய்யவும்.
இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து, அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி, உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
(கவுண்ட் டவுன் டைமர் ஓடும், அந்த ஒரு நிமிடத்திற்குள் மேலே கூறியதைச் செய்ய வேண்டும்.) அவ்வளவு தான்.
நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன், எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.
1 comments:
இப்படி நாம் செய்வது அடுத்த வருக்கு தெரியுமா?
Post a Comment