அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

மொபைல் போன் கேம்ஸ் இலவசம்!


மொபைல் போனின் பயன்பாட்டின் எல்லைகள் விரிந்து கொண்டே போகின்றன. உங்கள் வாழ்க்கையின் ஸ்டியரிங் வீலாக மொபைல் போன் மாறி வருகிறது. ஒவ்வொருவரின் பலவகை தேவைகளை அதுநிறைவேற்றி வருகிறது. ஆனால் அனைவரும் விரும்பும் ஒரு விஷயம் அதில் கேம்ஸ் விளையாடுவதுதான். அதனால் தான் ஒவ்வொரு மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனமும் ஏதேனும் சில கேம்ஸ்களை பதிந்தே தருகின்றன. 

இந்த ஒன்றிரண்டு விளையாட்டுகள் போதுமா? இன்னும் வேண்டுமே என்று விரும்பும் மனங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக சிறுவர்கள், இளைஞர்கள், வீட்டில் உள்ள பெண்மணிகள் மொபைல் போனில் பலவகையான கேம்ஸ் விளையாடவே ஆசைப்படுகின்றனர். இவர்களுக்கு இலவசமாக கேம்ஸ் வழங்க ஓர் இணைய தளம் செயல்படுகிறது. இதன் முகவரி: www.gamejump.com இங்கு சென்றால் உங்களுக்கான மொபைல் போன் கேம்ஸ் அனைத்தும் இலவசம் என்ற வாசகங்களுடன் இந்த தளம் உங்களை வரவேற்கும். இதில் கேம்ஸ் என்ற டேப்பினை கிளிக் செய்தால் என்ன என்ன வகையான கேம்ஸ் இங்கு கிடைக்கிறது என்ற பட்டியல் விரியும். 13 வகையான கேம்ஸ் உள்ளன. இதனால் நீங்கள் என்ன வகை விளையாட்டுக்களை விரும்பி விளையாடுகிறீர்களோ, அதற்கேற்ற பிரிவில் சென்று தேடலாம். புதிர் தீர்க்கும் கேம்ஸ், ஆக்ஷன் கேம்ஸ், ஆர்கேட், ஒன் தம்ப், சாகசம், கேஸினோ எனப் பல பிரிவுகள் உள்ளன. 

இவற்றைப் பார்த்தவுடன் ஒன்றைத் தேர்ந்தெடுத்து டவுண்லோட் செய்து 

மொபைல் போனில் ஏற்ற வேண்டாம். அந்த தவற்றை நான் செய்தேன். பின் டவுண்லோட் செய்த கேம்ஸ் என் மொபைல் மாடலில் இயங்க மறுத்ததால், பின் மீண்டும் இந்த தளம் சென்றேன். டவுண்லோட் செய்திடும் முன் மஞ்சள் வண்ணத்தில் உள்ள செலக்ட் போன் (Select Phone) என்ற பட்டனை அழுத்திச் செல்லவும். பின் மொபைல் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியல் கிடைக்கும். இதனை அழுத்தி உங்கள் போன் மாடலைக் குறிப்பிட்டால், அதற்கான கேம்ஸ்களின் பட்டியல் கிடைக்கும். அதில் உங்களுக்குத் தேவையான கேம்ஸ் தேர்ந்தெடுத்து டவுண்லோட் செய்திடவும். 

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், தெளிவாக உதவிட ஹெல்ப் பிரிவு தரப்பட்டுள்ளது. அத்துடன் பெரிய அளவில் கேள்வி பதில் பிரிவும் உள்ளது. எனவே எந்த சிரமமும் இன்றி, அடுத்தவர் உதவியின்றி, உங்களுக்குத் தேவையான கேம்ஸ் டவுண்லோட் செய்து, போனுக்கு மாற்றி விளையாடவும். 

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.