பிராட்பேண்ட் என்றாலே அதி வேக தரவிறக்க வேகம்(High Download Speed) என்று தான் நமக்கு தெரியும். இதனைக் குறித்து இருக்கும் சில மர்மங்களை நான் உங்களுக்கு தெரிவிக்க இருக்கிறேன் நம்மில் சிலருக்கு இது தெரிந்தாலும் பலருக்குத் தெரியாது.
முதலாவதாக வேகம்:-
பிராட்பேண்ட் வேகம் எப்போதும் கிலோ பிட்ஸ்(kb-KiloBits) என்ற குறியீட்டிலேயே அளக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு உங்களிடம் 256kbps கனெக்ஷன் இருந்தால் உங்கள் அதிக பட்ச தரவிறக்க வேகம் 32KBPS மட்டுமே.இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த kbps KBPS வித்தியாசத்தை பலர் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்
அடுத்ததாக பயன்பாடு:
இதனை ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றன.நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தரவிறக்கம்(Unlimited Downloads) செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டு குறிப்பிட்ட அளவிற்கு பின் உங்கள் வேகத்தினை குறைக்கின்றனர். இதற்கு பெயர் Fair Usage Plan ஆம்.
0 comments:
Post a Comment