மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் நாம் நிறுவும் மென்பொருட்கள் அனைத்தும், இயங்குதளம் நிறுவப் பட்டுள்ள ட்ரைவில் \Program files (C:\Program Files) என்ற கோப்புறைக்கு உள்ளே வழக்கமாக நிறுவப்படும்.
ஒருவேளை அந்த குறிப்பிட்ட ட்ரைவில் இடப்பற்றாக்குறை காரணமாக, மற்றொரு ட்ரைவில் இதற்கு மேல் தேவையான மென்பொருட்களை நிறுவ விரும்பினால், என்ன செய்யலாம். (இல்லையெனில் ஒவ்வொரு முறை மென் பொருட்களை நிறுவும் பொழுதும், Destination ட்ரைவை மாற்ற வேண்டியிருக்கும். இது வழக்கமாக மறந்து விடும் விஷயங்களில் ஒன்று)
விண்டோசில் Registry Editor ஐ திறந்து கொள்ளுங்கள். (Start - Run சென்று Regedit என டைப் செய்து என்டர் கொடுக்கவும்).
Registry Editor விண்டோவில் கீழே சொல்லப்பட்டுள்ள பகுதிக்கு செல்லுங்கள்.
HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> Microsoft -> Windows -> CurrentVersion
இனி வலது புற பேனில் ProgramFilesDir என்ற கீயில் இரட்டை க்ளிக் செய்து, Edit String வசனப் பெட்டியில் Value data: என்பதற்கு நேராக நீங்கள் விரும்பும் லொகேஷனை டைப் செய்து OK கொடுங்கள்.
இதற்கு மேல் நீங்கள் நிறுவும் மென் பொருட்கள் அனைத்தும் இப்பொழுது புதியதாக நீங்கள் மாற்றிய லொகேஷனில் நிறுவப்படும்.
0 comments:
Post a Comment