இரு சுழிகளுக்கிடையே மாட்டிக் கொள்ளும் காதல் என்னவாகிறதுங்கிறதுதான் கதை. ஊரில் .
பெரியவர்களான சிங்காரவேலருக்கும் ராமசாமிக்கும் 40 வருட தீராத பகை.
ஆளுக்கொரு பட்டாளத்தை வைத்துக் கொண்டு வீராப்பாக வளைய வருகிறார்கள். இதனால் அவர்கள் வீட்டுக் குழந்தைகளும் கூட ஆளுக்கொரு பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் பார்த்து விட்டால் முறைப்பது அடிதடி என்று அலைகிறார்கள். சிங்கார வேலர் வீட்டு சுசீலாவுக்கும் மூர்த்திக்கும் சின்ன வயதில் இருந்தே காதல். பெரியவர்கள் பகையாக இருக்கும் போது அந்த வீட்டு சிறிசுகளின் காதல் மட்டும் என்னவாகும். ஒருவழியாக இறங்கிவரும் சிங்காரவேலர் திருமணத்தை தாம் நடத்தி வைப்பேன் என்று நாள் குறிக்கிறார். திருமண மாப்பிள்ளையிடமே திருமணத்திற்குப் போகக் கூடாது என்று ராமசாமி சத்தியம் வாங்கிவிட அதை மீறி திருமணம் நடந்ததா… சவாலில் ஜெயித்தது யார் ராமசாமியா சிங்காரவேலரா என்பது கதையின் முடிவு. பாரதிராஜா, பாலசந்தர் என இரு இமயங்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள். சிங்காரவேலராக பாரதிராஜா. ஒரு கொள்கை பிடிப்புடன் வாழும் கம்யூனிஸ்டாக வருகிறார். படத்தில் பாரதிராஜாவைத் தேடவேண்டியிருக்கிறது. காரணம், முழுக்க முழுக்க அவர் சிங்காரவேலராகவே மாறிப் போயிருக்கிறார். ராமசாமியாக பாலசந்தர். கோபக்காரரான இவர் வரும் காட்சிகளில் எல்லாம் கோபத்தைக் காட்சிகளில் காட்டுவதற்குப் பதிலாக வசனங்களில் பேச விட்டிருக்கிறார்கள். இதனால் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் எல்லாம் அந்த ஃபீல் வர மறுக்கிறது. பாரதிராஜாவின் அளவிற்கு இவரது கதாபாத்திரம் எந்த அழுத்தத்தையும் படம் முழுக்க உருவாக்காமல் இருந்தாலும் கடைசி சில நிமிடங்களில் மட்டும் இவர் காட்சிகளை உணர்வுப்பூர்வமாக படமாக்கியிருக்கிறார்கள். சுசீலாவாக அஞ்சலி. அங்காடித் தெருவுக்குப் பிறகு அஞ்சலி நடிப்பில் அடுத்த ஹாட்ரிக். பல இடங்களில் நடிப்பில் பளிச்சிடுகிறார். அதற்காக அவர் முகத்தை அடிக்கடி டைட் குளோஸ் ஷாட்டில் காட்டி முகத்தில் உள்ள பரு கூட தெரியும் அளவுக்கு காட்டுவது நல்லாவா இருக்கு.. (மேக்அப் போடலீங்களா…!) மூர்த்தியாக புதுமுகம். இவர் காதலை குழந்தைகளிடம் சொல்லும் போது அவர்கள் ஆளாளுக்கு கிண்டலாக பதில் சொல்வதால் சோக உணர்ச்சிகள் வரவேண்டிய இடத்தில் சப்பென்று போகிறது காட்சி. படம் துவங்கிய கொஞ்ச நேரத்திற்கு இசையமைப்பாளர் எங்கே போனார் என்று தெரியவில்லை. இதனால் படம் துவங்கிய சில நிமிடங்கள் ஏதோ நாடக சபாவிற்குள் நுழைந்த உணர்வுதான் கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் சேர்த்தார் போல் ஆங்காங்கே இசை ஈர்ப்புள்ளதாக இருக்கிறது. சபாஷ் ஒளிப்பதிவாளர் செழியன். தரிசு நிலங்களையும் இயற்கையையும் இவர் காமிரா அழகாக உள்வாங்கியிருக்கிறது. சிறிய குழந்தைகளை முக்கியக் கதாப்பாத்திரத்தில் காட்டியிருப்பதால் ‘பசங்க’ படத்தின் பாகம் இரண்டோ என்று கூட தோன்றலாம். சுட்டிகள் அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன. முக்கியமாக அந்த குஷ்பு பெயரில் வரும் பெண், பாரதிராஜாவிடம் ‘தோழரே’ என்று பழக முயற்கிக்கும் அந்த சிறுவன் என திரையை வாண்டுகளில் ஒன்றிரண்டுபேர் அவ்வப்போது கலகலக்க வைக்கின்றனர். காவல்துறை உதவி ஆய்வாளராக கருணாஸ். இவர் வரும் காட்சிகளில் யாராவது சிரித்தால் அது உலக அதிசம்தான். |
0 comments:
Post a Comment