அலாஸ்கா பெருநிலம் ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு விற்கப்பட்ட ஓர் பகுதியாகும்.இதன் பின்னனியை பார்ப்போமாயின் கிரிமியன் யுத்தத்தில் படுநஷ்டமடைந்த ரஷ்யா அலாஸ்காவை விற்க முன்வந்தது.பனியும் மலையும் கடலும் காடு;ம் எரிமலைகளும் நிறைந்த ஒரு நிலப்பகுதியை வாங்க எவரும் முன்வரவில்லை.அப்பொழுது அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியாக இருந்த சீவார்ட் என்பவருடன் ரஷ்யர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
கிரிமியன் யுத்தம்:
ரஷ்யாவோடு பிரிட்டனும் பிரான்சும் 1854-56 வரையான ஆண்டுகளில் நடத்திய போர்.ஜெருசலேம் நாசரேத் ஆகிய இரண்டு புனிததட தலங்களில் யாருக்கு முன்னுரிமை என ரஷ்ய ஆசார சர்ச்சுக்கும் பிரான்ஸ் கத்தோலிக்கர்கனுக்கும் இடையே எழுந்த பிரச்சனைதான் இந்த யுத்தத்துக்கு அடிப்படை.இந்த யுத்தத்தில் ரஷ்யாவுக்கு பேரிழப்பு.
அலாஸ்காவை விலைக்கு வாங்கியதை பல அமெரிக்கர்கள் ஏற்கவில்லை.ரஷ்யர்கள் உபயோகமற்றது என்று தள்ளிவிட்டதை அமெரிக்கா வாங்குவதா என்று எதித்தார்கள்.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அலாஸ்காவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.அது பொன் விளையும் ப+மியாக உலகப் பிரசித்திப் பெற்றது.அலாஸ்காவின் வடமேற்கு பகுதியில் ஒரு பாகத்துக்கும் தென்மத்தியில் ஒரு நகருக்கும் ‘சீவார்ட்’ என்று பெயர் சூட்டி உள்ளார்கள்.
அலாஸ்கா என்றாலே அதியங்கள் நிறைந்த பகுதியாகவே கருத்தப்படுகிறது.அலாஸ்காவின் அதியங்கள் ஒன்றா இரண்டா ?? மீன் நீர் திடல் எல்லை மலை பனி என்று ஏராளமான அதியங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
அலாஸ்காவின் தேசிய மீன் கிங் சால்மன்
மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி தான் பிறந்த இடத்துக்கே வருகின்றது.இதில் வியப்பு என்னவென்றால் அருவி எதிர்ப்படும் போது அது மேல்நோக்கிப் பாய்ந்து அருவியின் வேகத்தை எதிர்த்து செல்கின்றது.அப்படி பாய்ந்து வரும் மீன்களை பிடிப்பதற்காக நீர்நிலைகள் அருவிகள் இவற்றின் ஓரம் கிரிஸ்லி கரடிகள் காத்திருக்கும்.சால்மன் மீன்களைப் பார்த்ததும் பாய்ந்து பிடித்துவிடும்.
அருவி நீரை மீன் எதிர்த்து பாய்வது ஒரு வியப்பென்றால் அவற்றைப் பாய்ந்து பிடிக்க காத்திருக்கும் கரடிகள் அருவி நீரில் முன் கால்களைத் தூக்கிப் பாய்ந்து மீனைப் பிடித்து சமநிலை தவறாமல் மீண்டும் தரையில் காலூன்றுவது ஓர் அதிசயம்.அதைப் பார்ப்பவர்களுக்கு கரடியை அருவி அடித்துக்கொண்டு போயவிடும் என்றுதான் தோன்றும்.
மீன் பிடிப்பவர்களிடமிருந்து கரடிகள் பருந்துகள் ஆகியவற்றிடமிருந்து தப்பி பிழைத்துவரும் சால்மன் மீன் தான் பிறந்த இடத்துக்கே வந்து சேர்கின்றன.அங்கே தண்ணீருக்கு அடியில் பள்ளம் தோண்டி முட்டைகளை இடுகின்றன.ஆண் மீனும் போட்டி போட்டுக் கொண்டு அம் முட்டைகளை காக்கின்றது.மீன் குஞ்சுகள் வெளி வந்ததும் சில நாட்களில் சால்மன் மீன் இறந்து விடுகின்றது.
என்ன ஓர் அதியம் மீண்டும் அடுத்த பதிவில் இன்னும் சில அதியசங்களுடன் சந்திக்கின்றேன்.
அலாஸ்கா ஓர் அதிசயம் தொடரும்......
8 comments:
அலாஸ்கா இவ்வளவு அதிசயங்களா?
தொடருங்கள்.
//nis said...
அலாஸ்கா இவ்வளவு அதிசயங்களா?
தொடருங்கள்//
இன்னும் வியப்புக்குள் ஆழ்த்தும் அதிசயங்கள் அலாஸ்காவில் காணப்படுகிறது.
கருத்துக்கும் வருகைக்கும் எனது நன்றிகள்
திரும்ப திரும்ப அலாஸ்கா பற்றி பதிவிடுகிறீர்கள் உண்மையில் அதிசயமாய் தான் இருக்கிறது
இயற்கையின் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் இல்லை லட்சம் கண்கள் இருந்தாலும் போதாது
அருமை டிலீப்
தொடருங்கள்//
Harini Nathan said...
//திரும்ப திரும்ப அலாஸ்கா பற்றி பதிவிடுகிறீர்கள் உண்மையில் அதிசயமாய் தான் இருக்கிறது
இயற்கையின் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் இல்லை லட்சம் கண்கள் இருந்தாலும் போதாது
அருமை டிலீப்
தொடருங்கள்//
அதியங்கள் நிறைந்த பகுதி அலாஸ்கா. அதை பற்றி அனேகர் அறியமால் இருக்கலாம் அதற்காகவே இவ் பதிவு.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி
ம் உண்மைதான் :}
Harini Nathan said...
ம் உண்மைதான் :}
உண்மைதான் ஹரிணி
nalla thagaval nanri bro
//orin said...
nalla thagaval nanri bro//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஒரின்
Post a Comment