
இயற்கை அன்னை தான் முன்பு விளையாடிய ஆட்டங்களை மறந்து போகாமல் மீண்டும் விளையாடி பார்க்க ஆசையப்பட்டு நிறுத்தி வைத்திருக்கிற இடங்களில் ஒன்று அலாஸ்கா.அலாஸ்கா என்றால் பெருநிலம்.
வெயில் அடிக்கும் திடீரென்று மழை பொழியும் திடீரென்று தண்ணீர் குட்டை தோன்றும் சிறிது நேரத்தில் அந்த இடம் பொட்டல் வெளியாகக் காட்சி தரும்.வருடத்தில் பெரும்பான்மையான நாட்கள் சூரியனே வராது அங்கே தாவரங்கள் கூட கிடையாது.
எஸ்கிமோ மக்கள் இங்கே வாழ்கின்றனர்.பனிப்பாறைகள் உருகி திடீர் நதிகள் பெருகினாலும் குளிர் வாட்டி வதைத்தாலும் அலாஸ்காவில் வசிப்பதை அந்த மக்கள் பெருமையாக நினைக்கின்றனர்.
அலாஸ்காவிடம் இயற்கை அன்னை அளவுக்கு அதிகமான அன்பை கொண்டுள்ளது போல மற்ற இடங்களில் சாதாரணமாக நடைபெறுவது இங்கே இன்னும் அதிக அழகோடு நிகழ்கின்றது.

மழை பெய்யாமல் நீர் எவ்வாறு வந்தது ? வியப்பாக இருக்கும்.
திடீரென பூகம்பம் வந்ததுபோல் சத்தம் கேட்கும்.எங்கோ தொலைவில் பனிப்பாறையிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்து அது விழும் சத்தம் பல மைல் தூரம் எதிரொலிக்கும்.
நன்றாக வெயில் அடிக்கிறதே என்று குடையை எடுத்து கொள்ளாமல் செல்வோம் சிறிது நேரத்தில் முன்னறிவிப்பின்றி மழை கொட்டோகொட்டென்று கொட்டும்.சில தூரம் சென்று பார்த்தால் மழை பெய்ததற்கான அறிகுறியே இருக்காது.
சூரியன் மறைந்து விட்டது இருள் சூழப்போகிறது என்று நினைப்போம் இரண்டு மணி நேரத்துக்கு மங்கலான வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.
அலாஸ்காவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பனிப்பாறைகள் (Glaciers) உள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு 290000 சதுர மைல்.மாலஸ்பினா (Malaspina) என்ற பனிப்பாறை அமெரிக்காவின் ஒரு மாநிலமான ரோட்ஸ் ஜலாண்டை (Rhode Island)விட பெரியது.

உலகின் நீளமான நதிகளில் ஒன்றான யூகான் நதி (Yukon River) அலாஸ்காவில் மட்டுமே 1854 மைல் நீளம் ஓடுகின்றது. கனடாவில் ஓடும் இந்த நதியின் மொத்த நீளம் 2300 மைல்.எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் உள்ள எரிமலைகள் 80-க்கும் மேல் அலாஸ்காவில் உள்ளது.

அமெரிக்காவின் மற்றப் பகுதிகளிலிருந்து விலகி அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இருப்பது அலாஸ்கா.கனடாவைத் தாண்டி அலாஸ்காவுக்கு செல்ல வேண்டும்.
அழகும் ஆபத்தும் நிறைந்த நிலப்பகுதி.அங்கே பூமிக்கடியிலும் பூமியின் மேலும் எப்போதும் சக்தியின் தாண்டவம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
கடந்த நூற்றாண்டுக்குள் அலாஸ்காவில் மட்டும் ரிக்டர் அளவில் 7-க்கு மேல் நேர்ந்த பூகம்பங்கள் 75.3.5 ரிக்டர் அளவில் நேர்ந்த பூகம்பங்கள் வருடத்துக்கு 1000-க்கும் மேல்.
சூரியன் கண்ணாமூச்சி ஆடும் நிலம் அலாஸ்கா.பாயிண்ட் பேரோ (Point Barrow) என்ற இடத்தில் வருடத்துக்கு 87 நாட்கள் சூரியன் மறைய மாட்டான்.67 நாட்கள் சூரியன் தலைகாட்ட மாட்டான்.

அலாஸ்காவின் ஆனந்தத்தை அனுபவித்துக்கொண்டும் அதன் ஆபத்தை சகித்துக்கொண்டும் அந்த சகிப்பையே ஆனந்தமாக ஏற்றும் அலாஸ்கா மக்கள் வாழ்கிறார்கள்.
அடுத்த பதிவில் அலாஸ்கா எவ்வாறு அமெரிக்கா வசமானதும் அலாஸ்காவில் காணப்படும் அதிசயங்கள் பற்றியும் பார்ப்போம்.
அலாஸ்கா ஓர் அதிசயம் தொடரும்......
10 comments:
புதிய தகவல்கள் நண்பர். படங்கள் அருமை.. தொடருங்கள்
//LK said...
புதிய தகவல்கள் நண்பர். படங்கள் அருமை.. தொடருங்கள்//
கருத்துக்கு ஊக்கத்துக்கும் மற்றும் வருகைக்கு நன்றி எல்.கே
ஹா ஹா அலாஸ்காவின் அழகை இங்கிருந்தே அனுபவித்த ஆனந்தம் ............
உங்கள் பதிவுகள் அருமை நண்பரே
சிறந்த தகவல்களை தருகிறீர்கள்
வாழ்த்துக்கள் :)
//Harini Nathan said...
ஹா ஹா அலாஸ்காவின் அழகை இங்கிருந்தே அனுபவித்த ஆனந்தம் ............
உங்கள் பதிவுகள் அருமை நண்பரே
சிறந்த தகவல்களை தருகிறீர்கள்
வாழ்த்துக்கள் :)//
ஹா..ஹா அது தான் எனக்கு வேண்டும்.
அடுத்த பதிவு போட்டதும் நீங்க பிலேன பிடிச்சு அலாஸ்காவுக்கே போயிடுவிங்க.
அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.
கருத்துக்கும் வருகைக்கும் ஹரிணி நன்றி
nalla pathivu nanba... innum eluthungkal...
what great nature
//தருமி said...
very informative
thanks//
Thank you Tharumi
//Mohamed Faaique said...
nalla pathivu nanba... innum eluthungkal...//
கருத்துக்கு ஊக்கத்துக்கும் மற்றும் வருகைக்கு நன்றி முகமட்
//jpragash said...
what great nature//
Thank u jpragash
mika nalla pathivu.
Post a Comment