அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




வணக்கம் வாசகர்களே, கடந்த பதிவில் அலாஸ்காவில் உள்ள அதிசயங்கள் சிலவற்றை பார்த்தோம் மீண்டும் இப்பதிவிலும் இன்னும் இருக்கும் ஏனைய அதியங்களை பார்ப்போம்.




அலாஸ்கா வானில் இடம்பெறும் அதியங்களை பார்க்கும் போது எம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.


அலாஸ்கா வடபகுதிகளில் வருடத்தில் 240 நாட்களுக்கு மேல் இரவு நேரத்தில் ஒளிநடனம் நடைபெறுகின்றது.இதற்கு ‘அரோரா போரியாலிஸ்’ (Aurora Borealis) என்று பெயர்.


‘அரோரா போரியாலிஸ்’ என்றால் வடக்கு ஒளி என்று சொல்லப்படும் அரோரா போரியாலிஸ் வடதுருவத்தை ஒட்டிய வடக்கு மண்டலங்களில் இரவுப் பொழுதில் நிகழும் வண்ண ஒளிநடனம்.சூரியக்காற்றும் ப+மியின் மின்காந்த அலைகளும் இந்நிகழ்வுகளுக்கு காரணம்.



வான மேடையில் வண்ண நாட்டியம்.வானத்தின் பெரும்பகுதியை நிரப்பிக் கொண்டு மண்ணை நோக்கி ஒளிக்கீற்றை வீசுகின்றாள்
வானமகள்.வண்ணங்கள் ஒன்றா இரண்டா? மஞ்சள், பச்சை, ஊதா, நீலம் என்று தனியாகவும், இணைந்தும், கலந்தும் ,விரிந்தும், சுருக்கியும், நீண்டும், வளைந்தும் ஒளிநடனம் நிகழ்த்துகின்றது.இருள் மறைய மண்ணிலே வண்ண ஒளிநிழலின் மாயக் கம்பளம் விரிக்கப்படுகின்றது.உலகின் வடகோடிக்கும் தென்கோடிக்கும் மட்டும் உரித்தான ஆனந்த வண்ணக்காட்சி.


அடுத்தது நீரின் அதிசயம்.நீர் எந்தெந்த வகையில் உருக்கொள்ளுமோ அந்தந்த வகையெல்லாம் அங்குண்டு.660 அடி உயரத்திலிருந்து விழும் தொடர் அருவி யூகான் என்ற 2 மைல் அகலத்துக்கு ஓடும் நதி 30 லட்சம் ஏரிகள் 1000 சதுர பரப்புக்கு மேலுள்ள பிரம்மாண்ட ஏரிகள் குளங்கள் குட்டைகள் என்று எத்தனை எத்தனையோ….


குளிர்காலத்தில் இவை அத்தனையும் உறைந்து வசந்தம் வருகிறபோது உள்ளே உறைந்த பனிமேலெழும்பி பெரிதாகி உடைந்து பெரும் சத்தத்தோடு ஓடத் தொடங்கும்.அந்த நாளை வசந்தத்தின் வரவு நாளாகக் கொண்டாடுவார்கள்.


ஃபேர்பேங்க்ஸ் அருகில் உள்ள தனானா நதியில் என்று பனிக்கட்டி உடைந்து ஓடும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு சொல்லும் போட்டியை நீனானா நகர மக்கள் ஆண்டுதோறும் நடத்துகின்றார்கள்.ஏப்ரல் 21-ம் தேதியில் இருந்து மே 20-ம் தேதிக்குள் எப்போழுது வேண்டுமானாலும் இது நிகழலாம்.



மூன்று கம்பங்களை தனானா நதியில் நட்டு ஒரு கடிகார அமைப்புடன் இணைத்துவிடுகின்றார்கள்.பனிக்கட்டி உடைந்து 100 அடி தூரம் ஓடியதும் கடிகாரத்தை கம்பம் இழுக்க கடிகாரம் நின்றுவிடுகின்றது.அந்த நேரமே சரியான நேரமாக அறிவிக்கப்படும்.


இவற்றை பார்க்கும் போது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கும் எமக்கும் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.


அழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1


அலாஸ்கா ஓர் அதிசயம் தொடரும்......



Post Comment


4 comments:

Unknown said...

அருமை

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
அருமை//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தேவன்

Harini Resh said...

வான மேடையில் வண்ண நாட்டியம்.
நீரின் அதிசயம்.
அருமை டிலீப் :)

டிலீப் said...

//Harini Nathan said...
வான மேடையில் வண்ண நாட்டியம்.
நீரின் அதிசயம்.
அருமை டிலீப் :)//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.