அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

சுப்பர் நிலவு தான் காரணமா ?





                                                                   ஜப்பானில் ஏற்றப்பட்ட பயங்கர சுனாமிக்கு "சுப்பர்" நிலவு தான் காரணமா ?என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டுகிறது.
                                                 பூமிக்கு மிக அருகில் நிலா நெருங்கி வருவது தான், சுப்பர் நிலவு என்ற அறிய வானியல் நிகழ்வாக வர்ணிக்கப்படுகின்றது. அப்படி நெருங்கி வரும்போது, நிலவின் பரப்பு 14 மடங்கு பெரிதாகவும் சாதாரன் பௌர்ணமி நாட்களை விட, 30 மடங்கு பிரகாசமாகவும் இருக்கும்.அதனால் உண்டாகும் ஈர்ப்பு சக்தி காரணமாக, பூமியில் எதிர் பாராத இயற்கை சீற்றங்கள் நிகழ்வது வழக்கம்.
                           கடந்த 1955 , 1974 ,1992 ,2005, ஆகிய இது போன்ற சுப்பர் நிலவு ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் பெரிய அளவில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ,2005 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், பூமிக்கு அருகில் நிலா வர இருந்தபோது, அதற்க்கு முன்பு 2004 ஆம்ஆண்டு டிசெம்பர் 26 ம் திகதி இந்தியா,இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் சுனாமி கோர தாண்டவம் ஆடியதை யாரும் மறக்க முடியாது
.
                                     2005 ஆம்ஆண்டுக்கு பிறகு எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் பூமிக்கு மிக அருகில் நிலா வருகிறது. பொதுவாக பூமியில் இருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் மைல் தொலைவில் உள்ள நிலா எதிர்வரும் 19 ஆம் திகதி,2 லட்சத்து 21 ஆயிரத்து 567 மைல் தொலைவுக்கு நெருங்கி வருகிறது.
                                                இந்த சுப்பர் நிலவு காரணமாக,பூமியில் பூகம்பம், சுனாமி , எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழும் என்று ஜோதிடர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு இருந்தனர்.அவர்கள் சொன்ன இரண்டே நாட்களை ஜப்பானில் சுனாமி தன் கோரமுகத்தை காட்டியது. எனவே அதற்க்கு சுப்பர் நிலவுதான் என ஜோதிடர்கள் அடித்து சொல்லுகிறாகள்.
                                                  ஆனால் பெரும்பாலான விஞ்சானிகள் இதை ஏற்கவில்ல. பூமியை நிலா நெருங்கிவருவதன் காரணமாக, பூமியில் எந்த விளைவும் ஏற்ற்படாது என்று அவர்கள் கூறுகின்றனர்.இது ஒருபுறம் இருக்க ஜப்பானில் ஏற்றப்பட்ட இந்த சுனாமி மற்றும் உலகில் பல இடங்களில் ஏற்றப்பட்டு கொண்டிருக்கும் இந்த இயற்கை சீற்றங்களால் அடுத்த ஆண்டு (2012 ) உலகம் அழிந்து விடுமோ என்ற கேள்வியும் மக்கள் மனதில் மீண்டும் உருவாக தொடங்கியுள்ளது

நன்றி- வீரகேசரி
படங்கள் - google

Post Comment


3 comments:

Harini Resh said...
This comment has been removed by the author.
Harini Resh said...

hm good post Dileep
podhuva ellarum appadi than solluranga

டிலீப் said...

நன்றி ஹரிணி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.