அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

டாக்டர் சாமர்வெல்



தியடோர் ஹோவார்ட் சாமர்வெல் (Theodore Howard Somervell, 16 ஏப்ரல் 1890 - 23 சனவரி1975) ஒரு பிரித்தானிய அறுவை சிகிச்சை நிபுணரும், மலையேற்ற நிபுணரும் சமூக சேவகரும் ஆவார். எவரெஸ்ட் சிகரத்துக்கு இருமுறை ஏற முயன்றவர். நாற்பது ஆண்டுகள் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றினார்.


சாமர்வெல் இங்கிலாந்தில் வெஸ்ட்மோர்லேண்டில் கெண்டால் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் செருப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருந்தார்கள். பதினேழு வயதில் ரக்பி பள்ளியிலும் மலையேற்றப் பயிற்சிக்கழகத்திலும் சேர்ந்தார். கேம்ப்ரிட்ஜில் கான்வில், காயஸ் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். கிறித்தவ மத நம்பிக்கையில் ஆழமாக ஈடுபட்ட காலம் இது. பல்கலைக் கல்லூரியிலேயே பயிற்சி மருத்துவராக இருந்தார்.

முதலாம் உலகப் போரில் ஈடுபட்டு 1915 முதல் 1918 வரை சாமர்வெல் பிரான்சில் பிரித்தானிய இராணுவ வீரராகப் பணியாற்றினார். போரில் கண்ட காட்சிகள் அவரை ஆழமான அமைதி விரும்பியாக மாற்றின. கிறித்தவ நம்பிக்கை மேலும் உறுதிப்பட்டது. சோம்மே என்ற ஊரில் 1916 இல் நடந்த போரில் அவர் ஒரு மருத்துவக் கொட்டகையில் வெறும் நான்கு சக மருத்துவர்களுடன் பணியாற்றினார். அங்கே கிடந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுகாயமடைந்த வீரர்களில் ஒருவர் கூட பிறரை விட முன்னால் தனக்கு சிகிழ்ச்சை அளிக்கப்படவேண்டும் என்று கோரவில்லை என்பதை அவர் கவனித்தார். 1921 இல் அவர் ராணுவத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். அப்போது காப்டன் பதவியில் இருந்தார்.

1922ல் சாமர்வெல் லேக் மாவட்டத்தில் இருந்த ஆல்ப்ஸ் மலையில் ஏறித் தன் தகுதியை நிரூபித்துக்கொண்டார். அதே ஆண்டு எவரெஸ்டில் ஏறுவதற்கான தகுதியை பெற்று அந்த குழுவில் சேர்ந்தார். அக்குழுவில் இருந்த ஜார்ஜ் மல்லோரியுடன் ஆழமான நட்புக் கொண்டார். இருவரும் ஷேக்ஸ்பியர் கவிதைகளை வாசித்து ரசிப்பதுண்டு.
மே 18 ஆம் நாள் இமயமலையில் வடக்கு கோல் (North Col) பகுதியில் 7020 மீட்டர் உயரமான பனிமலையில் ஏறிக்கொண்டிருந்தார்கள். அன்றுவரை மனிதன் சென்றதிலேயே உயரமான மலைப்பகுதி அது. எவரெஸ்டை தொடுவதற்கான முதல் முயற்சி. எவரெஸ்டின் வடக்கு விளிம்பு வழியாக அவர்கள் ஏறினார்கள். கூட ஷெர்பா மலைவழிகாட்டிகளும் இருந்தனர். மேலும் ஏறி 8000 மீட்டர் உயரத்தில் முகாமடிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் காற்றில் ஆக்சிசன் குறைவாக இருந்தமையால் அந்த திட்டம் நடக்கவில்லை.
ஆகவே ஷெர்பாக்களை கீழே அனுப்பி 7600 அடி உயரத்தில் ஒரு முகாமை உருவாக்கச் சொன்னார்கள். அங்கே முகாமிட்டபின் மறுநாள் பனியால் புண்ணாகிப்போன கால்களுடன் மேலும் ஏறி 8170 மீட்டர் உயரத்தில் அடுத்த முகாமை அமைத்தார்கள். ஆனால் அதற்கு மேல் செல்ல அவர்களால் இயலவில்லை. இமயத்தில் ஏறியவர்களில் அன்றைய கணக்கில் மிக அதிகமான உச்சியை அடைந்தவர்கள் அவர்கள். அவர்களின் காலகட்டத்தில் ஆக்சிசனைக் கையோடு கொண்டு செல்லும் வழக்கம் இருக்கவில்லை.
சிலநாட்களில் ஜெப்ரி புரூஸ், மற்றும் ஜார்ஜ் ஃபின்ச் தலைமையில் இன்னொரு குழு ஆக்சிசனுடன் மலை ஏறியது. அதிலும் சாமர்வெல் இருந்தார். அம்முயற்சியும் வெல்லவில்லை. சாமர்வெல்லும் மல்லோரியும் இன்னொரு முயற்சி செய்யலாமென்று வாதிட்டார்கள். தலைவரான சார்லஸ் புரூஸ் அதை எதிர்த்தார். ஜூன் 7 ஆம் தேதி சாமர்வெல் பங்கெடுத்த குழு ஒன்று பதினைந்து ஷெர்பாக்களுடன் மீண்டும் மலை ஏறியது.
அப்போது ஒரு பெரும் பனிச்சரிவு உருவாகி ஏழு ஷெர்பாக்களை இழுத்துச்சென்றது. இடுப்பளவு பனியில் அந்த மேட்டை ஏறலாமென்று முடிவெடுத்தது சாமர்வெல் தான். அந்த முடிவுக்காக அவர் மிகவும் வருந்தினார். முயற்சி எவரெஸ்டை வெல்லாமலேயே முடிவுக்கு வந்தது.
இந்தியாவெங்கும் பயணம் செய்த சாமர்வெல் கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கே கண்ட வறுமையால் வருத்தம் அடைந்த அவர் குமரி அருகே நெய்யூர் என்ற ஊரில் இருந்த லண்டன் மிஷன் அமைப்புடன் இணைந்து மருத்துவப்பணி செய்ய ஆரம்பித்தார். அங்கே இருந்த ஒரே ஒரு மருத்துவர் ஒரு நாளில் மூவாயிரம் நோயாளிகளை பார்க் கவேண்டியிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு லண்டனில் காத்திருந்த பிரகாசமான எதிர்காலத்தை உதறி நெய்யூரிலேயே தங்கி மருத்துவசேவை செய்ய ஆரம்பித்தார்.
மருத்துவப் பணியின் நடுவே 1924 இல் சாமர்வெல் மீண்டும் இமயமலை ஏற்றத்துக்காகச் சென்றார். அந்த முயற்சியும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக முழுமை அடையவில்லை. பனிச்சரிவில் இறங்க மறுத்து நான்கு சுமை தூக்கும் ஷெர்பாக்கள் மலை விளிம்பியிலேயே தங்கிவிட முகாமுக்கு திரும்பிய சாமர்வெல் மறுநாள் மலையேறிச்சென்று அவர்களை மீட்டு கொண்டுவந்தார். சாமர்வெல் எட்வர்ட் நார்ட்டனுடன் இணைந்து அடுத்த மலையேற்றத்தை மேற்கொண்டார். 8570 அடிவரை அவர்கள் சென்றனர். 1952 டென்சிங்-இலாரி கூட்டணி வரும்வரை அந்த உயரமே இமயமலையில் சாதனையாக இருந்தது.
1961 இல் சுதந்திர இந்தியாவில் பணி ஓய்வு பெற்ற சாமர்வெல் பிரித்தானியா திரும்பினார். மூன்று ஆண்டுகள் ஆல்பைன் கிளப்பின் தலைவராக இருந்தார். லண்டனில் 1975ல் அம்பிள்சைட் என்ற ஊரில் மரணமடைந்தார்.
அவர் நினைவாக திருவனந்தபுரம் காரகோணத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒன்று உள்ளது.

நன்றி விக்கி

Post Comment


10 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வாருங்கள் டிலீப். குறுகிய இடைவெளிக்கு பின்.

டிலீப் said...

ஆம் பிரஷா நீண்டநாட்களின் பின்பு.
தங்கள் நலம் அறிய ஆவல்.
படிப்பால் நேரம் கிடைப்பது அரிது...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நான் நலம் தாங்கள் நலமா?
நன்றாக படியங்கள். வாழ்த்தகள்.

குறையொன்றுமில்லை. said...

உங்க படிவின் மூல டாக்டர் சாமர்வெல் அவர்கள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

ம.தி.சுதா said...

வடா வா... எப்படியிருக்கே... நல்லதொரு பதிவோடு மிள் வருகையா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

டிலீப் said...

//தோழி பிரஷா said...
நான் நலம் தாங்கள் நலமா?
நன்றாக படியங்கள். வாழ்த்தகள்.//

நன்றி பிரஷா

டிலீப் said...

// Lakshmi said...
உங்க படிவின் மூல டாக்டர் சாமர்வெல் அவர்கள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி. //

நன்றி Lakshmi அம்மா

டிலீப் said...

// ♔ம.தி.சுதா♔ said...
வடா வா... எப்படியிருக்கே... நல்லதொரு பதிவோடு மிள் வருகையா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)//

நல்லம் மச்சி நீ எப்பிடி இருக்கிறாய்....

Unknown said...

நலம் தானே...

டிலீப் said...

நலம் நண்பரே ..தாங்கள்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.