அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

ஒரு ரன்னில் மும்பை வெற்றி


Munaf Patel defended 11 in the final over to earn a one-run win

ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை போராடிய புனே அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 
புனேயில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் 45வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற மும்பை கேப்டன் ஹர்பஜன், "பேட்டிங்' தேர்வு செய்தார்.

சச்சின் அசத்தல்:
மும்பை அணிக்கு சச்சின், பிராங்க்ளின் இணைந்து விவேகமான துவக்கம் தந்தனர். புனே பவுலர்கள் துல்லியமாக பந்துவீச, ஆரம்பத்தில் அடக்கி வாசித்தனர். முரளி கார்த்திக் வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் தான் கிடைத்தன. டிண்டா வீசிய அடுத்த ஓவரின் 6 பந்திலும் சச்சின் திணற, "மெய்டனாக' அமைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிண்டாவின் இரண்டாவது ஓவரில் சச்சின் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்து, அதிரடிக்கு மாறினார். மறுபக்கம் நெஹ்ராவின் ஓவரில் பிராங்க்ளின் வரிசையாக இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. புவனேஷ் குமார் பந்தில் பிராங்க்ளின்(25) அவுட்டானார். 

நெஹ்ரா அபாரம்:
பின் மைக்கேல் கிளார்க் பந்தில் ரோகித் சர்மாவுக்கு எல்.பி.டபிள்யு., கேட்கப்பட்டது. அம்பயர் மறுத்தார். இதையடுத்து ஒரு ரன்னுக்கு ஓட முற்பட்ட ரோகித் சர்மா(3) அநியாயமாக ரன் அவுட்டானார். சிறிது நேரத்தில் நெஹ்ரா "வேகத்தில்' சச்சின்(34), ராபின் பீட்டர்சன்(13) வெளியேற, மும்பை அணி 13.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்து தவித்தது.

ஹர்பஜன் ஏமாற்றம்:
இதற்கு பின் வந்த பேட்ஸ்மேன்களும் சொதப்ப, ஸ்கோர் அப்படியே படுத்தது. புவனேஷ் குமார் பந்தில் ராயுடு(1) போல்டானார். திசரா பெரேரா(0) ரன் அவுட்டானார். டிண்டா பந்துவீச்சில் கேப்டன் ஹர்பஜன் "டக்' அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய மலிங்கா, டிண்டா ஓவரில் பவுண்டரி, சிக்சர் அடித்தார். இவர் 14 ரன்களுக்கு ரன் அவுட்டானார். மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டும் எடுத்தது. தினேஷ் கார்த்திக்(18) அவுட்டாகாமல் இருந்தார். 

சுலப இலக்கை விரட்டிய புனே அணிக்கு மும்பை பவுலர்கள் "ஷாக்' கொடுத்தனர். முனாப் பந்தில் உத்தப்பா(18) வெளியேறினார். ஹர்பஜன் "சுழலில்' ஜெசி ரைடர்(9), மைக்கேல் கிளார்க்(14) சிக்கினர். ஓஜா வலையில் ஸ்டீவன் ஸ்மித்(2) போல்டாக, 9.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

மலிங்கா மிரட்டல்:
பின் கேப்டன் கங்குலி, மிதுன் மன்ஹாஸ் இணைந்து போராடினர். மலிங்கா வீசிய போட்டியின் 17வது ஓவரில் கங்குலி ஒரு பவுண்டரி அடித்தார். இதே ஓவரில் இவர் 16 ரன்களுக்கு "போல்டாக', சிக்கல் ஆரம்பமானது. முக்கியமான 19வது ஓவரை துல்லியமாக வீசிய மலிங்கா, பார்னலை(2) வெளியேற்றியதோடு 4 ரன்கள் மட்டும் கொடுத்து, போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தினார். 

கடைசி ஓவரில் புனே வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன. முனாப் பந்துவீசினார். முதல் பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்தை "வைடாக' வீச, உதிரியாக ஒரு ரன் கிடைத்தது. 2வது பந்தில் ஒரு ரன். 3வது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில் ஒரு ரன். 5வது பந்தில் புவனேஷ் குமார் ஒரு பவுண்டரி அடிக்க, "டென்ஷன்' எகிறியது. 6வது பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுக்கப்பட, புனே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து, தொடர்ந்து நான்காவது தோல்வியை பெற்றது. போராடிய மன்ஹாஸ்(42), புவனேஷ் குமார்(10) அவுட்டாகாமல் இருந்தனர். 

ஆட்ட நாயகன் விருதை மலிங்கா வென்றார்.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.