அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

Mahela Jayawardene reached 10000 runs in Tests

டெஸ்ட் போட்டிகளில்  10 ஆயிரம் ஓட்டங்களைப் பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை மஹேல ஜயவர்த்தனஅடைந்துள்ளார்.  டெஸ்ட் போட்டி  வரலாற்றில் பத்தாயிரம் ஓட்டங்களைக் கடந்துள்ள ஒன்பதாவது வீரர் இவர் ஆவார்.


ஏற்கெனவே 9999 ஓட்டங்களைப் பெற்றிருந்த  மஹேல ஜயவர்த்தன தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையில் டர்பனில் நடந்துவரும் இரண்டாவது  டெஸ்ட் போட்டி யின் முதல் நாளான நேற்று ஒரு ஓட்டத்தைப் பெற்றபோதே  டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் எனும் மைல்கல்லைத் அடைந்தார். 

நேற்றை ஆட்டத்தில் அவரால் 31 ஓட்டங்களையே பெற முடிந்தது.இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான 34 வயதுடைய ஜயவர்த்தன, 127 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 29 சதங்களையும், 40 அரைசதங்களையும் அடித்துள்ளார்.


Mahela Jayawardene was run out by Jacques Kallis's direct hit

ஒருநாள் போட்டிகளிலும் மஹேல ஜயவர்த்தன அண்மையில்தான் பத்தாயிரம் ஓட்டங்களைக் கடந்திருந்தார். சனத் ஜயசூரியவுக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற இலங்கை வீரர் மகேல ஜயவர்த்தன ஆவார். 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 சதங்களுடன் 10ஆயிரத்து 59 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.