அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

சாகா இனக்குழுபடிமம்:Marangu19.jpg

சாகா இனக்குழு (Chaga), பான்டு மொழி பேசுகின்ற, ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு பழங்குடி (tribe) ஆகும். இது,வச்சாகா, சக்கா, ஜக்கா, வஸ்சக்கா, வச்சக்கா எனப் பலவாறாகக் குறிப்பிடப்படுவது உண்டு. இது தான்சானியாவில் வாழும் இனக்குழுக்களில் மூன்றாவது பெரியது ஆகும். 

கிளிமஞ்சாரோ, மெரு ஆகிய மலைகளின் தெற்கு மற்றும் கிழக்குப் பக்கச் சரிவுகளிலும், மோஷி பகுதியிலும் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒப்பீட்டளவில் இவர்களுக்கு உள்ள வளம், சாதகமானகாலநிலைகளால் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்பகுதியில் வழங்கி வரும் வெற்றிகரமான வேளாண்மைமுறைகளாலும் ஏற்பட்டது. விரிவான பாசன முறைகள், தொடர்ச்சியான உரப் பயன்பாடு என்பன இவற்றுள் அடங்கும். இப்பகுதியில் கிறிஸ்தவர்களாக மாறிய முதல் பழங்குடிகளுள் இவர்களும் அடங்குவர். கிறிஸ்தவர்கள் என்பதனால், கல்வி வசதிகள், மருத்துவ வசதிகள் என்பன இவர்களுக்கு இலகுவாகக் கிடைத்தது. இது ஏனைய இனக்குழுக்களைக் காட்டிலும் இவர்கள் பொருளாதார அடிப்படையில் சாதகமாக நிலையில் இருக்க உதவியது.சாகாக்கள், ஆபிரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து கிளிமஞ்சாரோ மலையடிவாரப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்த பல்வேறு பாண்டு குழுக்களின் வழி வந்தவர்கள் ஆவர். சாகக்கள் பாண்டு மொழியினராக இருந்தாலும், அவர்கள் அனைவரும், ஒரே மொழியைப் பேசுகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. அவர்கள் மொழி தொடர்புள்ள பல வட்டார வழக்குகளின் கலப்பு என்று கூறலாம். இந்த வட்டார வழக்குகள், வடகிழக்கு கெனியாவில் பேசப்பட்டுவரும் கம்பா மொழி, கிழக்குப் பகுதியில் பேசப்படும் தபிதா, பொக்கோமோ ஆகிய மொழிகளுடன் தொடர்புள்ளவை.


சாக்கா நிலம் முன்னர் அரசியல் ரீதியாக, சமத்துவச் சமூக முறை சார்ந்த, தனித்தனியான குடிமரபு ஆட்சிப்பகுதிகளாகப் (chiefdoms) பிரிந்திருந்தன. சாகா இனக்குழு, பாரே, தவேட்டா, தெயிட்டா ஆகிய இன மக்களுக்குப் பண்பாட்டு அடிப்படையில் நெருங்கிய தொடர்புள்ள இனக்குழுவாகும். வாரிசுரிமை தொடர்பில் இவர்கள் தந்தைக் கால்வழி முறையைப் பின்பற்றுகின்றனர்.

நன்றி:விக்கி


Post Comment


2 comments:

♔ம.தி.சுதா♔ said...

நன்றீப்பா....

எப்படி சுகமாயிருக்கியா படிப்பு எப்படியடா ?

டிலீப் said...

//♔ம.தி.சுதா♔ said...
நன்றீப்பா....

எப்படி சுகமாயிருக்கியா படிப்பு எப்படியடா ?//

வணக்கம் தலைவா ....
படிப்பு அது பாட்டுக்கு போகுது ......
நாங்க எங்க பாட்டுக்கு போறம்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.