கண்ணாடியிழை (fibreglass) என்பது கண்ணாடியின் சிறு இழைகளால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள். இது பல பன்னுரு தயாரிப்புகளுக்கு வலுவூட்டும் பொருளாக பயன்படுகிறது; இதனால் வலுவூட்டப் பட்ட கலப்புரு பொருட்களை கண்ணாடியிழை வலுவூட்டு நெகிழி என்று (பிரபலமாக கண்ணாடியிழை என்று) கூறப்படுகிறது.
கண்ணாடி தயாரிப்பாளர்கள் காலகாலமாக கண்ணாடியிழைகளை தயாரித்துவந்தாலும், நுண்ணிய இயந்திரங்கள் வந்த பின்னரே பெரிய அளவில் கண்ணாடியிழை தயாரிப்புகள் தயாரிக்கும் நிலை சாத்திய மாயிற்று. 1893 இல், எட்வர்ட் ட்ரும்மொந்து லிப்பி என்பவர் உலகத்தின் கொலம்பியர் எக்ஸ்பொசிசன் என்ற நிறுவனத்தில் பட்டிழைகளுடன் கண்ணாடியிழைகளை சேர்த்து ஒரு ஆடை தயாரித்தார். இந்த ஆடையை முதலில் உடுத்தியவர் பிரபல மேடை நடிகை சியார்சியா கெவான்.
இப்பொழுது பொதுவாக கண்ணாடியிழை என்று அழைக்கப்படும் பொருளை உண்மையில் 1938 ஆம் ஆண்டு ஓவென்சு கார்னிங்கில் உள்ள ரசல் கேம்சு சிலைடர் என்பவர் ஒரு காப்பு பொருளாக பயன்படுத்தினார். இது ஆங்கிலத்தில் பைபர்கிளாசு என்ற வணிகப் பெயரில் வர்த்தகத்தில் இருந்தது; இது பின்னர் வணிகக்குறியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சற்று இதே போலவே, ஆனால் மிக விலை உயர்ந்த தொழிநுட்பம் அது மிக வலிமையாகவும், எடை குறைவாகவும் உள்ள பயன்பாடுகளுக்கு தேவைப்படும் நிலையில் கார்பன் இழை பயன்படும்.
முதன்முதலில் வியாபார ரீதியாக கண்ணாடியிழை தயாரிப்பு 1936 ல் தொடங்கப்பட்டது. 1938 ல் ஓவென்ஸ்-இல்லினோயிஸ் கிளாஸ் கம்பெனி மற்றும் கார்னிங் கிளாஸ் வொர்க்ஸ் இணைந்து ஓவென்ஸ்-கார்னிங் பைபர் கிளாஸ் கார்ப்பொரேசன் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கினர். இந்த புதிய நிறுவனம் தொடர் நுண்ணிழை கண்ணாடியிழை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. இன்றும் ஓவன்ஸ்-கார்னிங் கண்ணாடியிழை தயாரிப்பில் முதலிடத்தில் உள்ளது.
நன்றி : விக்கி
0 comments:
Post a Comment