அமெரிக்காவில் ஒரே மாதத்தில் பத்து லட்சம் விற்பனை ஆகி சாதித்த ‘ஐ & பேட்’ ஐரோப்பிய நாடுகள் உட்பட மற்ற நாடு களில் விற்பனைக்கு வந்தது.
அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம், ஐபாட் என்ற ஐபோன் சாதனத்தை தொடர்ந்து, ஐ & பேட் என்ற கையடக்க கம்ப்யூட்டர் & பே ன்& இ புக் ரீடர் என்று பல்நோக்கு டிஜிட்டல் சாதனத்தை உருவாக்கியது.
கடந்த ஜனவரியில் முதன் முதலில் உலகுக்கு அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம், கடந்த மாதம் அமெரிக்காவில் விற்பனைக்கு வெளியிட்டது.
ஐ & பேட் சாதனத்தில் வை&பை வசதி, 3 ஜி டேட்டா போன்ற தொழில்நுட்ப வசதிகளும் உண்டு. மொபைல் போனுக்கும், லேப்டாப் கம்ப்யூட்டருக்கும் இடைப்பட்ட சாதனம் இது.
அமெரிக்காவில் ஐ & பேட் விற்பனைக்கு வெளியிட்ட 28 நாளில் பத்து லட்சம் விற்பனை ஆனது. இதைத்தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நேற்று விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டது ஆப்பிள் நிறுவனம். பிரான்ஸ் தலைநகர் பாரீசில், அதி காலை முதலே பல கடைகளிலும் நீண்ட கியூவில் ஆண்களும், பெண்களும் நின்று ஐ & பேட் சாதனத்தை வாங்கிச்சென்றனர். பிரிட்டனில், ஐந்து மணி நேரம் கியூவில் நின்று பலரும் இந்த சாதனத்தை வாங்கினர்.
சாதாரண மொபைல் போன் வந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட, இப்போது கையடக்க கருவியாக போன், லேப்டாப் கம்ப்யூட்டர் ஐ &பேட் வந்தி ருப்பது பலருக்கும் பெரும் சந்தோஷத்தை அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலும் ஐ & பேட் சாதனம் நேற்று அறிமுகம் ஆனது. அங்கும் ‘ஹாரி பாட்டர்’ புத்தகம் வாங்க நீண்ட கியூவில் நின்றது போல பல ரும் வாங்கினர். ஜப்பானிலும் இந்த நிலை காணப்பட்டது.
0 comments:
Post a Comment