ஓர் இடத்திற்குச் செல்ல வழிகள், முகவரிகள் மற்றும் சிறிய அளவிலான மேப் ஆகியவற்றைப் பெற இப்போது நமக்கு அதிகம் உதவுவது கூகுள் மேப்ஸ் ஆகும்.
கூகுள் மேப்ஸை உலகின் எந்த நாட்டிலிருந்தும் பெறலாம். எந்த நாட்டிற்கும், நகரத்திற்கும், தெருவிற்கும் வழி காட்டும் வகையில் மேப்களும், வழி காட்டுதல்களும் நமக்கு கூகுள் மேப்ஸ் தருகிறது. இதற்குத் தேவை எல்லாம் சற்று வேகமாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு மட்டுமே.
இணைய இணைப்பு இல்லாதபோது கூகுள் மேப்ஸ் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது? கூகுள் மேப்ஸில் ஒரு முக்கியமான இடத்திற்கு மேப் கண்டறிந்து, அதனை சேவ் செய்து, அதனை இன்டர்நெட் இணைப்பு கிடைக்காதபோது எப்படி பார்ப்பது?
இந்த இடத்தில் தான் நமக்கு ஜிமேப் கேட்சர் (Gmap Catcher) என்னும் அப்ளிகேஷன் நமக்கு உதவுகிறது. இதனை http://code.google.com /p/gmapcatcher என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திலிருந்து டவுண்ட்லோட் செய்து, பின் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும். பின் அதனை இயக்கவும்.
இது இயங்குகையில், நீங்கள் எந்த ஊருக்கான மேப் பார்க்க விரும்புகிறீர்களோ, அந்த ஊரின் பெயரை என்டர் செய்திட வேண்டும்.
பின்னர் ஆன்லைனில் சென்று குறிப்பிட்ட மேப்பைப் பெற, இந்த புரோகிராம் உங்கள் அனுமதி கேட்கும். இதற்கு 'Yes' என்பதில் கிளிக் செய்திட, உடனே அந்த நகரத்திற்கான மேப் ஜிமேப் கேட்சர் விண்டோவில் கிடைக்கும்.
இதன் பின்னர் அதனை டவுண்லோட் செய்திட நாம் கட்டளை கொடுத்தவுடன், அந்த மேப் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்கள் சிஸ்டத்தில் சேவ் செய்யப்படும். மேப்பிற்கான பூகோள ரேகைக் குறியீடுகள் (latitude, longitude) ஏரியா, ஸூம் செட்டிங்ஸ் ஆகிய தகவல்களும், மேப்புடன் பதியப்படும்.
இது டவுண்லோட் செய்யப்பட்டுவிட்டால், இந்த மேப்பினை அடுத்துப் பார்க்க, இன்டர்நெட் இணைப்பு தேவைப்படாது. இல்லாமலேயே ஜிமேப் கேட்சர் உதவியுடன் காணலாம்.
ஜிமேப் கேட்சர் புரோகிராமினை விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களிலும் இயக்கலாம்.
0 comments:
Post a Comment