இருபதுக்கு 20 ஓவர் உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது ஆசஷ் வெற்றியை விட சிறந்தது என்று இங்கிலாந்து அணித் தலைவர் கொலிங்வுட் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பையை வென்றது குறித்து இங்கிலாந்து அணித் தலைவர் கொலிங்வுட் கூறுகையில், உலக கோப்பையை முதன் முறையாக இங்கிலாந்து அணி வென்றதில் பெருமை அடைகிறோம் என்றார்.
உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது ஆசஷ் வெற்றியை விட சிறந்தது என்று கூறிய கொலிங்வுட், எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் இருந்ததால் கோப்பையை வெல்ல முடிந்தது என்றார்.
இந்தப் போட்டி முழுவதுமே நாங்கள் நன்றாக ஆடினோம் என்றும் சிறந்த அணியை வீழ்த்தி தான் உலக கோப்பையை வென்றுள்ளோம் என்றும் கொலிங்வுட் கூறினார்.
0 comments:
Post a Comment