தமிழில் தகவல் வேட்டை நடத்த விரும்பினால் அதற்கேற்ற தமிழ் தேடியந்திரம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
தமிழ்வேட்டை என்னும் பொருள்படும் ‘தமில்ஹண்ட்’ தான் அந்த தேடியந்திரம்.
தமிழ் செய்தி தளங்கள்,வலைப்பதிவுகள் என இண்டெர்நெட்டில் தமிழ் சார்ந்த
விஷயங்கள் பொங்கிப்பெருக தொடங்கியிருக்கின்றன.தொழில்நுட்ப செய்திகள்
மற்றும் வர்த்தக துறை செய்திகளை கூட தமிழிலேயே படிக்க முடிகிறது.
தமிழில் தகவல்கல் நிறையும் வேளையில் அவற்றை சுலபமாக தேடிப்படிக்க
உதவக்கூடிய தேடியந்திரத்தின் தேவை ஏற்படுவது இயல்பானது தான்.இப்போதைக்கு
கூகுலையே இதற்கு பய்னப்டுத்த வேண்டியிருப்பதாக தோன்றலாம்.
அப்படி இல்லை. தமிழிலேயே தகவலை தேட கைகொடுக்ககூடிய தேடியந்திரமாக தமிழ்ஹண்ட் இருக்கிறது.
இந்த தேடியந்திரத்தின் சிறப்பு தமிழில் டைப் செய்வதற்கான வசதியும்
இருப்பது தான். அதிலும் போனடிக் முறையில் டை செய்யலாம். முதலில் உள்ள
கட்டத்தில் அங்கிலத்தில் டை செய்தால் கீழே உள்ள கட்டத்தில் தமிழில் அந்த
வார்த்தை வந்து விடுகிறது.அதன் பிறகு கிளிக் செய்தால் தமிழில் தகவல்
முடிவுகள் தோன்றுகின்றன.
தமிழ் இணையத்தில் உலாவ விரும்பிகிறவர்களுக்கு சரியான தேடியந்திம் இதுவென்றே தோன்றுகிறது.
வடிவமைப்பிலும் நேர்த்தியை கொண்டிருக்கும் இந்த தளத்தை உலகதமிழர்கள்
தமிழில் வெளியாகும் படைப்புகளை தேடி படிக்க உதவியாக சுரதா என்பவர் இதனை
உருவாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகம் பிரபலாமாகமலே இருக்கும் இதனை
மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக குமரியை சேர்ந்த ஒருவர்
தேடியந்திரத்துக்கான தளத்தை நடத்தி வருவதாக அறிய முடிகிறது.
இந்த தமிழ் தேடியந்திரத்தை பயன்படுத்திப்பார்த்து அது பற்றி நண்பர்களுக்கு
பரிந்துரை செய்யுமாறு வேண்டுகிறேன்.நம் தமிழ் தேடியந்திரத்தை நம்மமைத்தவிர
ஆதரிப்பது வேறு யார்?
சுட்டி :www.tamilhunt.com
0 comments:
Post a Comment