பேஸ் புக் இணைய தளத்தில் நடத்தப்பட்ட முஹமது நபி குறித்த கார்டூன் போட்டி தொடர்பில் பாகிஸ்தான் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த வழக்கை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையதளத்தில் காணப்படும் அம்சபங்கள் இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த கார்டூன் போட்டியில் பிரசூரமான ஆக்கங்கள் மற்றும் கருத்துக்கள் விமர்சனப் பாங்கானவை எனவும் அவற்றில் இஸ்லாமிய மதத்தை காயப்படுத்தக் கூடிய கருத்துக்களும் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த இணையத் தளத்தை தடை செய்யுமாறு ஏற்கனவே பாகிஸ்தானில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இணைய பாவனைக்கு எவ்வித தடைகளும் தற்போது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, டென்மார்க் பத்திரிகைகளில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான கார்டூன்கள் காரணமாக பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment