ஓசோன் படை தேய்வின் விளைவுகள் என்பது புவியின் வளி மண்டலத்தில் அதிகளவை உள்ளடக்கிய ஓசோன் படையின் தேய்வினால் புவியின் சூழலில் ஏற்படும் மாற்றங்களையும் பிரச்சினைகளையும் குறிக்கும்.
ஓசோன் படை
ஓசோன் படையானது படைமண்டலத்தில் உள்ள பகுதியாகும். இப்பகுதி புவியின் வளிமண்டலத்தின் அதிகளவான பகுதியை (90%) உள்ளடக்கி உள்ளது. இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 1025 மைல் (1540 கிமீ) உயரத்தில் அமைந்துள்ளது. இப்படையானது சூரியனில் இருந்து வீசப்படும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக செயற்படுகின்றது.
ஓசோன் ஒட்சிசனின் விசேடமான ஒரு வடிவமாக உள்ளது. மூன்று ஒட்சிசன் அணுக்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண இரு அணுக்களினை கொண்ட ஒட்சிசனை விட விசேட அமைப்பினை கொண்டது. ஓசோன் ஆனது படை மண்டலத்தின் தாழ்பகுதியில் ஒட்சிசன், மற்றும் உயர் ஆற்றல் வாய்ந்த சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீசலின் மூலமும் உற்பத்தியாகின்றது. படை மண்டல ஓசோன் படையானது புவியிற்கு நன்மை பயப்பிக்கும் விதத்தில் செயற்படுகின்றது. புறஊதாக்கதிர் வீசலினை புவியின் மேற்பரப்பை அடையாவண்ணம் தடுக்கின்றது. அறிவியலாளர்கள் 1920 இல் ஓசோன் படையினை கண்டுபிடித்த காலத்தில் இருந்து அதன் இயற்கை அமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனா. 1974 இல் வேதியியலாளர்கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படையிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பல்வேறுபட்ட எதிர்விளைவுகள் ஏற்படுவதுடன் அதனை தடுப்பதற்கான சட்டதிட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை ஓசோன் படை தேய்விற்கு காரணமான பொருட்களை வெளியிடாமல் இருப்பதற்கான பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கடமை உலகிலுள்ள அனைத்து மக்களையும் சார்ந்துள்ளது.
நன்றி :தினகரன்
0 comments:
Post a Comment