"டுவென்டி-20 உலக கோப்பை "சூப்பர்-8 போட்டியில், இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில், நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியை அடுத்து இங்கிலாந்து மற்றும் "ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதன் "சூப்பர்-8 சுற்றில், "இ பிரிவு போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்து அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை <உறுதி செய்துள்ளது. நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில், "டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி, பேட்டிங் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியின் பீட்டர்சனுக்கு பதிலாக, ரவி போபரா இடம் பெற்றார். நியூசிலாந்தின் கப்டில் நீக்கப்பட்டு, ரெட்மாண்ட் சேர்க்கப்பட்டார்.
நிதான துவக்கம்:
நியூசிலாந்து அணிக்கு ரைடர், பிரண்டன் மெக்கலம் ஜோடி, முதல் இரு ஓவர்களில் நிதானம் காட்டியது. பிரஸ்னனின் இரண்டாவது ஓவரில் நாதன் மெக்கலம் இரண்டு பவுண்டரி விளாசினார். மறுமுனையில் பிராட் ஓவரில் இரு பவுண்டரி அடித்த ரைடர் (9) நிலைக்கவில்லை. அதிகம் எதிர் பார்க்கப்பட்ட பிரண்டன் மெக்கலம் (33), ரெட்மாண்ட் (16) ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
டெய்லர் அபாரம்:
பின்னர் ரோஸ் டெய்லர், ஸ்டைரிஸ் ஜோடி இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. ஸ்டைரிஸ் 19 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹாப்கின்ஸ் (1) ஏமாற்றினார். மறுமுனையில் டெய்லர், 44 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். பின் வந்த வீரர்கள் ஏமாற்ற நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.
லம்ப் அசத்தல்:
எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு லம்ப், கீஸ்வெட்டர் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. கீஸ்வெட்டர் 15 ரன்கள் எடுத்தார். பீட்டர்சனுக்கு பதில் இடம் பெற்ற ரவி போபரா 9 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். கேப்டன் கோலிங்வுட் (3) நிலைக்கவில்லை. மறுமுனையில் அதிரடியாக விளையாடிய லம்ப் (32), வெட்டோரியிடம் வீழ்ந்தார்.
இங்கிலாந்து வெற்றி:
லுக் ரைட் (24) ஓரளவு கைகொடுத்தார். பின் மார்கன் 40 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு <<உதவினார். இங்கிலாந்து அணி, 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. பிரஸ்னன் (23) அவுட்டாகாமல் இருந்தார்.
அரையிறுதிக்கு தகுதி:
இந்த வெற்றியை அடுத்து "இ பிரிவில் இங்கிலாந்து அணி 3 வெற்றிகளுடன் (6 புள்ளி), இத்தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது. பாகிஸ்தான் (+0.041), நியூசிலாந்து (-0.373), தென் ஆப்ரிக்க (-0.617) அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றிருந்த போதும், "ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ஷ்டம் அடித்து, இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் வெற்றி
மற்றொரு போட்டியில், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதின. "டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு சல்மான் பட் (2), காலித் (7), முகமது ஹபீஸ் (1) ஆகியோர் கைவிட்டனர். கம்ரான் அக்மல் 37, உமர் அக்மல் 51, ரன்கள் எடுத்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அப்ரிதி, 18 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
எளிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கிப்ஸ் (3), கேப்டன் ஸ்மித் (13), காலிஸ் (22) ஆகியோர் விரைவில் அவுட்டானர். டிவிலியர்ஸ் (53), போத்தா (19) போராடிய போதும், தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்மூலம், "சூப்பர்-8 சுற்றில் இரண்டு தோல்வியடைந்த தென் ஆப்ரிக்க அணி (2 புள்ளிகள்), அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது.
0 comments:
Post a Comment