மலையில் மோதி விமானம் பிளந்தபோது அதில் இருந்து குதித்து 8 பயணிகள் தப்பினர். அவர்களில் ஒருவர் மங்களூர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் இறந்தார். சப்ரீனா நஸ்ரின்ஹக், உமர் பரூக் முகமது, ஜோயல் பிரதீப் டிசோசா, கே.பி. மாயன்குட்டி, கிருஷ்ணன், ஜி.கே. பிரதீப், புத்தூர் இஸ்மாயில் அப்துல்லா ஆகிய 7 பேர் உயிர் தப்பியுள்ளனர்.
மங்களூர் மருத்துவமனையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலருக்கு தீக்காயமும், எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. மரணத்தின் விளிம்பு வரை சென்ற இவர்களில் சிலர், தாங்கள் உயிர் தப்பிய அனுபவத்தை பீதியுடன் கூறியுள்ளனர்.
பிரதீப்: விமானம் இறங்கியபோது எல்லாமே சரியாகத்தான் இருந்தது. அடுத்த 15&20 நொடிகளில் பிரச்னை ஆரம்பித்தது. ஓடுபாதையை விட்டு விலகியதும் விமானம் பயங்கரமாக அதிர்ந்தது. உடனே, ஏதோ விபரீதம் நேரப் போகிறது என்பதை உணர்ந்தேன். அதற்குள் மலையில் மோதி விமானம் இரண்டாக பிளந்தது. அதன் அருகே அமர்ந்திருந்த நான், எதைப் பற்றியும் யோசிக்காமல் கீழே குதித்து விட்டேன். சிறிது நேரத்தில் விமானம் தீப்பிடித்தது. அடுத்த 10 நிமிடத்தில் பயங்கரமாக வெடித்தது. இவ்வளவு பெரிய பயங்கர விபத்தில் நான் உயிர் பிழைத்ததை என்னால் நம்பவே முடியவில்லை.
புத்தூர் இஸ்மாயில் அப்துல்லா: விமானம் பிளந்தபோது அதன் இடதுபுறத்தில் உள்ள வழியாக நானும் மேலும் 2 பேரும் வெளியே வந்து குதித்து தப்பினோம்.
உமர் பரூக் முகமது: ஓடுபாதையை விட்டு விமானம் விலகியதும், காட்டுப் பகுதிக்குள் அதை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அது பயங்கரமாக வெடித்து தீப்பற்றி எரிந்தது. இந்த பயங்கரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை என்றார்

0 comments:
Post a Comment