அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



Stuart Broad and Tim Bresnan lead the victorious England side off the field


இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கிடையே நடந்து வரும் நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் நோட்டிகம்மில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 319 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.



நாணய சூழற்சியில் மட்டுமே வெற்றி பெற்ற கப்டன் தோனி களதடுப்பு சாதகமாக தங்களுக்கு அமையுமென நினைத்து தாங்கள் பந்து வீச களத்துக்கு தனது அணியினருடன் இறங்கினார்.


கப்டன் தோனியின் முடிவு சரிதான் என்பது போன்று ஆடுகளமும் இந்தியா பந்தவீச்சாளர்களுக்கு சாதகமாவே அமைந்தது.இந்தியா பந்தவீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் இங்கிலாந்து திணறியது.மள மளவென்று விக்கெட்கள் சரிய ஒரு கட்டத்தில் 124 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்திருந்தது.இக்கட்டான தருணத்தில் இங்கிலாந்துக்கு கை கொடுத்தவர்கள் அவர்களின் பந்துவீச்சாளர்களே.


9வது விக்கெட்டுக்காக புரோட்- ஸ்வான் 73 ரன்களை இணைப்பாட்டமாக எடுத்தனர். இறுதியில் புரோட் 64 ரன்களுக்க ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிஸ்காக 221 ரன்களை எடுத்தது.


Stuart Broad celebrates an attacking half-century

தனது முதல் இன்னிஸை ஆட ஆரம்பித்த இந்தியா அணி முதல் ஓவரின் முதன் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.அன்டர்ஸனின் பந்தில் பீட்டர்ஸனிடம் பிடிகொடுத்து முகுன்ட் ஆட்டமிழந்தார்.அதன் பின்னர் ராகுல் ராவிடுடன் இணைந்த லக்ஸ்மன் 2-ம் விக்கெட்டுக்காக 93 ரன்களை இணைப்பாட்டமாக பெற்று 54 ரன்களுக்கு லக்ஸ்மன் ஆட்டமிழந்தார்.


அதன் பின்னர் ஆட வந்தவர்கள் விரைவாக பெவிலியன் செல்ல ராவிட்டின் நிதானமும் நேர்த்தியுமான ஆட்டத்தின் மூலம் யுவராஜ்யுடன் இணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.யுவராஜ் 62 க்கு ஆட்டமிழக்க ராவிட் தனது சதத்தினை எட்டினார்.273 ரன்களுக்கு 5 விக்கெட்டில் இருந்த இந்தியா அடுத்த அதிர்ச்சி புரோட் மூலமாக வர தொடங்கியது.


Rahul Dravid walks off to applause after his dismissal

87-வது ஓவரின் மூன்றாவது பந்தை வீசி தோனி ஆட்டமிழந்தார்.நான்காவது பந்தை முகம் கொடுத்த ஹர்பஜன் எல்பி.டபியு வில் வந்த வேகத்தில் ஓட்டங்கள் பெறமால் சென்றார்.இங்கிலாந்து ரசிகர்கள் ஆர்வதுடன் புரோட்டின் ஹட்ரிக்குக்காக காத்திருந்தனர்.5-வது பந்தில் பிரவீன் குமாரை போல்ட்டாக ஹட்ரிக் சாதனையை நிகழ்த்தினார் இளம் பந்து வீச்சாளர்.ராவிட்டின் அனுபவ ஆட்டத்தின் ஊடாக இந்தியா அணி 288 ரன்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. ராவிட் 117 ரன்களும் புரோட் 46 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றினார்.


Stuart Broad spreads his arms to celebrate his hat-trick


67 ரன்கள் பின்நிலையில் 2-ம் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.ஆரம்ப தூடுப்பட்டகாரர்கள் இருவரும் விரைவாக பெவிலியன் செல்ல மத்திய வரிசை வீரர்கள் பெல்-159 ,பீட்டர்ஸன் - 63, மோர்கன் - 70,  பிரியர் - 73, பிரஸ்சனன் - 90 ,புரோட் - 44 ரன்களை நிதானமான ஆட்டத்தை மூலம் பெற்றனர்.544 ரன்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து இந்தியாவுக்கு 477 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.


2ம் இன்னிங்ஸில் முக்கிய நிகழ்வு பெல்லின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்.தேநீர் இடைவேளைக்கு முன்பாக இறுதி பந்தில் மோர்கன் அடித்த பந்து பவுண்ரி அண்மையாக சென்ற வேளை பிரவீன் அதை தடுத்து நிறுத்தினார்.

The big screen confirmed that Ian Bell was run out before the appeal was retracted during tea

அதை கவனிக்காத பெல் பவுண்ரி என நினைத்து சரியாக கிரிஸ் பண்ணாமல் ஆட்டம் நிறுத்தப்படவுள்ளது என கிரிசுக்கு வெளியாக வந்தார்.எனினும் சிறந்த களதடுப்பின் மூலம் பந்தை தோனியிடம் செலுத்தி பெல்லை ஆட்டமிழக்க செய்தார்.இது சர்ச்சையாக மாறியது.எனினும் கிரிகெட்டின் மகத்துவ தன்மை இழக்க கூடாது என தோனி அந்த அப்பிளை வாபஸ் பெற்றார்.தோனிக்கு ஒரு சபாஷ்... ஹட்ஸ் ஒப்…




வெற்றியை நோக்கி ஆட்டத்தை ஆரம்பித்த இந்தியா ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்தது.சச்சின் மற்றும் ஹர்பஜன் முறையே 56 , 46 ரன்களை எடுத்தனர்.
Sachin Tendulkar whips a boundary through midwicket


இறுதியில் 158 ரன்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து இரண்டாவது டெஸ்டிலும் தோல்வையை தழுவியது,ஆட்ட நாயகனாக புரோட் தெரிவானார்.


Cricket - npower Second Test - Day Four - England v India - Trent Bridge

A Mark of Respect 
Best Player of  2-nd Test Match
Dhoni




Post Comment


2 comments:

harini Nathan said...

wewewewe
ரொம்பதான் அடுத்த ல நாக அடிப்போம் இல்ல

டிலீப் said...

//harini Nathan said...
wewewewe
ரொம்பதான் அடுத்த ல நாக அடிப்போம் இல்ல//

பாருங்க பாருங்க

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.