அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

இருண்ட புறக்கோள்

படிமம்:Exoplanet Comparison TrES-2 b.png


ட்ரெஸ்-2பி (TrES-2b) அல்லது கெப்லர்-1பி (Kepler-1b) என்பது 750 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஜிஎஸ்சி 03549-02811என்ற விண்மீனைச் சுற்றி வரும் ஒரு புறக்கோள் ஆகும். இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களில் இதுவே மிகவும் இருண்டது என 2011 ஆம் ஆண்டில் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்தது. இதன் மீது படும் சூரிய ஒளியில் 1 விழுக்காட்டினையே வெளியே தெறிக்கிறது. இக்கோளின் திணிவு மற்றும் ஆரம் ஆகியவை இது வியாழனை ஒத்த ஒரு வளிமக் கோள் ஆக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனாலும், வியாழன் போலல்லாது, இக்கோள் தனது சூரியனில் இருந்து கிட்டிய அளவு தூரத்திலேயே அமைந்துள்ளது. இதனால் சூடான வியாழன் வகைக் கோள்களுடன் இதனை வகைப்படுத்துகின்றனர்.


ட்ரெஸ்-2பி புறக்கோள் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் நாள் ட்ரெஸ் (Trans-Atlantic Exoplanet Survey) என அழைக்கப்படும் டிரான்ஸ்-அத்திலாந்திக் புறக்கோள் ஆய்வு மையத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் கெக் அவதான நிலையத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.


புறக்கோள்களை ஆய்வு செய்வதற்காக 2009 மார்ச்சில் நாசா நிறுவனம் கெப்லர் விண்கலத்தை ஏவியது. ஏப்ரல் 2009 இல் இது தனது முதலாவது தொகுதி படங்களை அனுப்பியது. இவற்றில் ட்ரெஸ்-2பி குறித்த தகவலும் அடங்கியிருந்தன.


ஆகஸ்ட் 2011 இல் ட்ரெஸ்-2பி பற்றிய முக்கிய தகவல்களை அது அனுப்பியது. புறக்கோள்களில் மிகவும் இருண்ட கோள் இதுவாகும். நிலக்கரியை விட மிகக்குறைந்தலவு ஒளியையே வெளியேற்றுகிறது. இக்கோள் அசாதாரணமாகக் கருப்பாக இருப்பது எதனால் என்று தெளிவாகத் தெரியவில்லை, ஆனாலும், ஆவியான நிலையில் சோடியம், மற்றும் பொட்டாசியம், வளிம நிலையில் டைட்டேனியம் ஒக்சைடு ஆகியன அதிக அளவில் காணப்படுகின்றன எனத் தெரிகிறது. இவை ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டவை.
இது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. இது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது. இதன் மேற்பரப்பில் பல வாயுக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார்.


நன்றி : விக்கி

Post Comment


2 comments:

காந்தி பனங்கூர் said...

அறிவியல் பகிர்வுக்கு நன்றி.

www.panangoor.blogspot.com

டிலீப் said...

//காந்தி பனங்கூர் said...
அறிவியல் பகிர்வுக்கு நன்றி.

www.panangoor.blogspot.com//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.