அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கும் திரைப்படம் 7-ம் அறிவு.இப்படத்தின் பாடல்கள் நேற்று பிரம்மாண்டமாக பிரபல சினிமா நட்சத்திரங்கள் முன்பாக வெளியிடப்பட்டது.



படத்திற்கான இசையை மேற்கத்திய பாடல்களில் உள்ள இசையை (Tracks) சுடுவதில் பிரபலமான ஹரிஸ்ஜெய்ராஜ்.


மேற்கத்திய பாடல்களில் உள்ள இசையை கொப்பி அடிப்பதாக பலரின் விமர்சனத்துக்கு உள்ளானதால் நொந்து போன ஹரிஸ் கொப்பி அடிக்கும் தொழிலை கைவிட்டு இம் முறை தான் இசையமைத்த முந்திய படங்களின் பாடல்களில் உள்ள இசையை 7-ம் அறிவுக்கு பயன்படுத்தியுள்ளார். மீண்டும் மீண்டும் பாடலை கேட்கும் பொழுது இரு பாடல்கள் முன்னமே இசையமைத்த பாடல்களின் இசை.ஏனைய பாடல்களும் ஏற்கனவே கேட்டதை போல் இருந்தாலும் எப்பாடல் என கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.

முன்  அந்தி  சாரல்  நீ
முன்  ஜன்ம  தேடல்  நீ 




இப்பாடலை கேட்கும் போது அயன் படத்துக்காக ஹரிஸ் இசையமைத்த


விழி  மூடி  யோசித்தால்  அங்கேயும்  வந்தாய்  முன்னே  முன்னே
தனியாக  பேசிடும்  சந்தோசம்  தந்தாய்  பெண்ணே  பெண்ணே....

பாடலை நினைவுபடுத்துகிறது.


அடுத்த பாடல் பெரும் வெற்றியை பெற்ற இதே இயக்குனரால் இயக்கப்பட்ட கஜினி திரைபடத்தில் வரும்  


ஒரு  மாலை  இளவெயில்  நேரம்
அழகான இலை உதிர்  காலம் 

எலே  ஏலம்மா
சொல்லாமலே  உள்ளம்  துள்ளும
நெஞ்சோரம , நெஞ்சின்  ஓரமா 




7ம் அறிவின் பாடல்கள் ஏற்கனவே கேட்ட பாடல்களின் சாயலாகவே உள்ளது.இந்த முறை ஹரிஸ் அரைத்த மாவையே அரைத்துள்ளார்.


பழைய இசை என்றாலும் அனைத்து பாடல்களின் வரிகள் ரசிக்கும் படி உள்ளது.


ஹரிஸின் முந்தைய சாதனைகள் இதோ….





முந்தினம் பார்த்தேனே பாடல் ஜோர்ஜ் மைக்கலின் Faith பாடலிருந்து கொப்பி அடிக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------


அடியே கொல்லுதே.....
----------------------------------------------------


எங்கேயும் காதல் படத்தில் வரும் நங்கை…பாடல் 
----------------------------------------------------

அட கடவுளே …. கடவுளுட படத்தையும் விட்டு வைக்க இல்லையே


அன்னியன் படத்தில் வரும் தீம் பாடல் The Passion of the Christ சுடப்பட்டுள்ளது.







ஹரிஸின் இசையில் அடுத்து வெளிவர உள்ள பாடல்கள் இளையதளபதியின் நண்பன்.முதன் முதலாக தளபதியுடன் இணைந்துள்ளதால் இப்படத்துக்கு தனது சொந்த மெட்டை போடுவார் என எதிர்பார்க்கின்றேன்.


File:Nanban promo poster.jpg








Post Comment


10 comments:

K.s.s.Rajh said...

அவர் என்னத்தை வேனும்லானும் அரைக்கட்டும்..நாங்க ஸ்ருதிஹாசனுக்காக படம் பாப்போம்.ஹி.ஹி.ஹி.ஹி.....

KANA VARO said...

ஹீ ஹி கலக்கிட்டீங்க

மைந்தன் சிவா said...

அப்படி எல்லாம் புதுசா எதிர்பார்க்க கூடாது தலைவா!

suryajeeva said...

நல்ல உடையல்

டிலீப் said...

//K.s.s.Rajh said...
அவர் என்னத்தை வேனும்லானும் அரைக்கட்டும்..நாங்க ஸ்ருதிஹாசனுக்காக படம் பாப்போம்.ஹி.ஹி.ஹி.ஹி.....//

அஹா... அஹா...
சோ என்னத்துக்கு போஸ் ஹீரோ ???
ஸ்ருதிய மட்டும் வைச்சே படம் பண்ணி இருக்கலாமே..
ஹி.ஹி.ஹி.ஹி.

டிலீப் said...

//KANA VARO said...
ஹீ ஹி கலக்கிட்டீங்க//

தங்ஸ் வரோ ,, உங்கள விடவா ??

டிலீப் said...

//மைந்தன் சிவா said...
அப்படி எல்லாம் புதுசா எதிர்பார்க்க கூடாது தலைவா!//

அஹா...அஹா... இருக்குறது தானே வரும் என்றீங்கலா

டிலீப் said...

//suryajeeva said...
நல்ல உடையல்//

நன்றி ஜீவா

Harini Nathan said...

ம் உண்மைதான் அரைத்ததையே அரைத்திருக்கிறார்
ம் ஆனால் சில பாடல்கள் நன்றாக உள்ளன டிலீப்
யம்மா யாம்மா பாடல் :)
அருமையான அலசல் பதிவு டிலீப்

டிலீப் said...

//Harini Nathan said...
ம் உண்மைதான் அரைத்ததையே அரைத்திருக்கிறார்
ம் ஆனால் சில பாடல்கள் நன்றாக உள்ளன டிலீப்
யம்மா யாம்மா பாடல் :)
அருமையான அலசல் பதிவு டிலீப்//

பாடல்கள் அனைத்தும் அருமை ஹரிணி ஆனாலும் மெட்டுகள் முன்பே கேட்டவை

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.