அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

மங்காத்தா - தலயின் அசத்தல்
ஒன்றைரை ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் அஜீத்தின் படம் முக்கியமாக 50-வது அத்துடன் இங்கிலாந்து வந்ததன் பின்பு பார்க்கும் முதல் தமிழ் திரைப்படம் என நிறைய எதிர்பார்ப்புடன் சென்று பார்த்த படம் மங்காத்தா.


என்னடா இங்கிலாந்தில் அஜீத்துக்கு இவ்வளவு பான்ஸ்ஸ …. என்று சற்று திகைத்து போனேன்.ஏனென்றால் சினிமா தியேட்டர் முழுவதும் சனநெரிசல் டிக்கெட்டுக்கு.


அதன் பின்பே அறிந்து கொண்டேன் அது 11 திரையரங்கை கொண்ட தியேட்டர் காம்ப்ளெக்ஸ்.அங்கு வேற்று மொழி படங்களும் திரையிட்ப்படுகின்றன.
இனி தலயின் மங்காத்தாவுக்கு வருவோம். ஒரு கிரிமினலை தப்பிக்க விட்டமை மற்றும் பொலிஸ் அதிகாரியை சுட்டு கொன்றமையால் சஸ்பேன்ட் ஆன முன்னாள் பொலிஸ் அதிகாரியாக வலம் வருகிறார் அஜீத்.பெரிய சூதாட்ட புள்ளி மற்றும் தியேட்டர் ஓனர் ஆறுமுகம் செட்டியார் .நடக்க இருக்கும் ஜ.பி.ல் பைனலில் 500 கோடிக்கு மச் பிக்ஸிக் செய்வதற்காக பல சூதாட்ட தரகர்களின் பணம் செட்டியார் ஊடாக கைமாற்ற தீர்மானிக்கின்றனர். செட்டியாருக்கு கீழ் வைபவ் பொலிஸ் அதிகாரி மற்றும் சிலர் வேலை பார்க்கிறனர்.


Mankatha Movie Stills

இவர்கள் அந்த 500 கோடியை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர்.பிரேமிஜி ஜ.பி ஹக்கிங்கில் கில்லாடி அவனையும் வைபவ் அணியினர் தங்கள் கொள்ளைக்கு இணைத்துகொள்கின்றனர்.கொள்ளைக்கான திட்டம் சரிவராமல் போகவே இவர்களுடன் இணைகிறார் அஜீத்.இந்த 500 கோடி பண கைமாறுதலை தடுத்து அதை கைப்பற ஒரு புறம் அக்ஷன் கிங் அர்ஜுன். அந்த 500 கோடிக்கு என்ன நடந்தது என்பதே மீதி கதை.


முதல் பாதி றப்பர் மாதிரி சவ் என்டு இழுத்தடிப்பு எப்போ இடைவேளை வரும் என்டு இருந்தது ஒரு கோக் குடிக்க.தலயிட ஒபனிங் ஸின்னை விட அர்ஜுனின் ஒபனிங் அட்டகாசம்.
திரிஷா சில காட்சிகளில் வந்தாலும் அற்புதம் என் நண்பனே பாடலில் உணர்ச்சிகரமாக நடித்துள்ளார்.திரிஷா லட்ஷ்மி ராய் மற்றும் அஞ்சலி தேவைக்கு மட்டும் பயன்படுத்தபட்ட ஊறுகாய்.


அஜீத்தின் நடிப்பை பிரமாதம் நரைமுடி ,தோப்பை குறைந்து கமெடியில் பின்னி பெடல் எடுத்து விட்டார். வாடா பிலேடா பாடல் இது வரை நாம் பார்த்திராத விதம் மாக ஒளிப்பதிவு மற்றும் ஒளிதொகுப்பு பண்ணப்படுள்ளது. 
கண்ணாடி நான் கண் ஜாடை நீ .... இனிமை யுவன் அழகாக இசைமைத்துள்ளார்.மீண்டும் மீண்டும் கேட்க செய்யும் பாடல்.


புதியதொரு அனுபவம் அப்பாடலில்.அஜீத்துடன் சேர்ந்து சென்ஸார் போட்டும் மங்காத்தா ஆடியுள்ளது.சில வசனங்களுக்கு Beep...Beep... என்று வரும் சத்தம் பார்க்கின்றவர்களை எரிச்சலடைய வைக்கிறது.15 நிமிட கிளைமாக்ஸ் படத்துக்கு பிளாஸ் போயின்ட்.எதிர்பார்த்திராத திருப்பங்களுடன் அருமையாக இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. சில காட்சிகள் Oceans Eleven  மற்றும் The Italian Job இருந்து சுட்டு இதனூடன் தொகுத்துள்ளனர்.
வெங்கட்டின் எல்லா படங்களின் இறுதியில் வரும் சூட்டிங் ஸ்போட் கிளிப்பிங்ஸ் இப்படத்திலும் சூப்பராக வந்துள்ளது.படத்தை விட தலயின் சூட்டிங் ஸ்போட் கிளிப்பிங்ஸ் கலக்கல்.Over Confident உடம்புக்கு ஆகாது King Maker 


இப்பதான் டைம் கிடைச்சது விமர்சனம் எழுத…..

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.