அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

பேஸ்புக் மொக்கை...Image

பேஸ்புக்கில் சிலர் போட்டும் மொக்கை Status , Note வாசிக்கும் போது 
அட ...எப்பிடி இவங்க இப்பிடி போசிக்குறாங்க என்று எண்ண தோணும்,  நான் வாசித்து என்னை கவர்ந்த சில மொக்கை காமெடிகள் உங்களுக்காக சிரிங்கோ.....சிரிங்கோ நல்லா....... சிரிங்கோ...


புதுசா கல்யாணமான ஒரு அப்பாவின் கதை

படத்துக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லை


மனைவி:ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னுபொய் சொன்னீங்க?கணவன்எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச்சொன்னான்!!
--------------------------------------------------------------------------------
மனைவிஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்சிரிப்பா,கூந்தலாஎன் கண்களா??எதுங்க?
கணவன்இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியேஅதான் புடிச்சுருக்கு
--------------------------------------------------------------------------------
மனைவிநம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்ககணவன்அவன் என்னவேணும்னாலும் ஆகட்டும்...ஆனாயாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்டகஷ்டம்என்னோட போகட்டும்...

--------------------------------------------------------------------------------
மனைவிஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்...
எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்கஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ்பணம் மொத்தமும்உனக்குத்தானே...!
--------------------------------------------------------------------------------
மனைவிஎன்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரேஅவரு என்னைபொண்ணு பார்க்க வந்தாருநான் அவரைகல்யாணம் பண்ணமாட்டேன்னசொல்லிட்டேன்அதை நினைச்சேஅவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.கணவன்அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தைஇத்தனை வருஷமாகொண்டாடிட்டிருக்கானேன்னு தான்ஆச்சர்யமா இருக்கு.

--------------------------------------------------------------------------------
மனைவிஎன்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவிநான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.
மொக்கையும், தண்டபாணியும் மொக்கையும், தண்டபாணியும் மரம் அறுக்கும் மில்லில் வேலை செய்தார்கள். ஒருநாள் (தண்ட)பாணி, தவறுதலாக சுழலும் வாளுக்குள் கையை விட்டுவிட்டான். 


கை துண்டானது. மொக்கை உடனடியாக, ஒரு பாலிதீன் கவரில் வெட்டுண்ட கையைப் போட்டு, பாணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மறுநாள் பாணியைப் பார்க்க போனபோது, அவன் படுக்கையில் இல்லை. மொக்கை செவிலியிடம் விசாரித்தார்.


 "தோட்டத்தில் பூப்பறிச்சுகிட்டு இருக்கார்" என்று செவிலி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாணி உள்ளே பூக்கூடையுடன் வந்தான். வெட்டுண்ட கை சரியாக ஒட்டியிருந்தது. 


மறுநாளே பணிக்குத் திரும்பிய பாணி, கவனக்குறைவாக காலை ரம்பத்துக்குள் விட்டுவிட்டான். மொக்கை முன்போலவே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மறுநாள் போனபோது, பாணி மூன்றாவது மாடிக்கு ஒரு நோயாளியை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்தார். 


மீண்டும் வேலைக்கு வந்த பாணி, இம்முறை தலையை வெட்டிக்கொண்டுவிட,மீண்டும் மொக்கை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மறுநாள் பார்ப்பதற்காக போனார். பாணி படுக்கையில் இல்லை. செவிலியிடம் மொக்கை கேட்டார்.. 


"எங்கே என் நண்பன் பாணி..? கல் சுமக்க போயிருக்கிறானா..? "இல்லே.. செத்து பூட்டான்..!' "அய்யோ.. எப்படி..?" "நேத்து அவன் தலையை எவனோ ஒரு முட்டாள் பாலிதீன் பையில் சுற்றி எடுத்து வந்திருக்கிறான்.. வரும்போதே மூச்சுத் திணறி செத்துப் போயிட்டான் போல..!"


Exam Hall-ல் நம்ம ஹீரோக்கள்

ஜீவா - என்னமோ ஏதோ எக்ஸம் நடக்குதே உள்ளே Question எதுவும் புரியலயே Answer எழுத தெரியலயே


சிம்பு - எவன்டா Question எடுத்தான்...எடுத்தான்...எடுத்தான்... அவன் கையில கிடைச்சான் செத்தான்.. செத்தான்... செத்தான்...


ஜெயம் ரவி - லோலிட்டா ஹலோ லோலிட்டா இந்த Questionக்கு Answer கொஞ்சம் சொல்லிடு


சூர்யா - முன்தினம் படித்தேனே படித்ததை மறந்தேனே Question-னை பார்த்ததும் நெஞ்சமும் புன்னானதே..


விஜய் - யாரது...யாரது ...சொல்லாமல் கொள்ளாமல் எக்ஸாம் வைப்பது
படிக்காத Subject- டை Question- னாக போட்டது யாரது...யாரது...


Post Comment


3 comments:

Niro said...

super mokkai

டிலீப் said...

//Niro said...
super mokkai//

நன்றி நிரோ

suryajeeva said...

sms jokes

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.