அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

எங்கேயும் எப்போதும் - விமர்சனம்





எங்கேயும் எப்போதும் ஏ.ஆர் முருகதாஸின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சரவணனின் இயக்கத்தில்  தற்காலத்துக்கு தேவையான கதைக்களத்தை கொண்ட படம்.நானும் பட டைட்டிலை பார்த்து ஏதோ காதல் கதையென நினைத்து படம் பார்க்க ஆரம்பித்தேன்.



படத்தின் ஆரம்பத்திலேயே திருச்சியிலிருந்து சென்னையும், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் இரு பஸ்கள் நேருக்கு நேராக கோரமாக மோதி கொள்கின்றன.அவ்விரு பஸ்ஸில் பயணிக்கும் இரு காதலர்கள் அவர்களின் கதை பிளஷ்பாக் மூலம் படத்தின் கதை நகருகின்றது.


ஜெய் தான் வசிக்கும் வீட்டின் எதிர்புறத்தில் வசிக்கும் அஞ்சலியை 6 மாதங்களாக ஒருதலையாக காதலிக்கிறான்.தன் காதலி என்ன கலர் ரேஸ் போடுறாளோ அதே கலர் ரேஸ் போட்டு கொண்டு வேலைக்கு போவான்.



ஒரு மாதிரியாக ஜெய்யின் காதலை அஞ்சலி அறிந்து அவனை லவ் பண்ண தொடங்குறாள். ஜெய் அஞ்சலியை விட நான்கு வயது இளமை வயது வித்தியாசத்தை பார்க்காமல் ஜெய் அவளை லவ் பண்ணுகிறான்.தனது வீட்டுக்கு தெரியாமல் திருச்சியில் உள்ள ஜெய்யின் வீட்டுக்கு இருவரும் சென்னையில் இருந்து கிளம்புகின்றனர்.


தம் காதலை சொல்லாமலே காதலராக வருகின்றனர் அனன்யா மற்றும் புது முகம் சர்வா நடித்துள்ளனர்.சென்னையில் நேர்முகதேர்வுக்காக தன் அக்காவின் வீட்டுக்கு வருகிறார் அனன்யா. அக்கா அவசர வேலையாக வேறு இடம் செல்வதால் நேர்முகதேர்வு நடைபெறும் இடத்துக்கு எவ்வாறு செல்வது என தெரியாமல் தடுமாறுகிறார்.




சர்வாவின் அறிமுகத்தின் மூலம் நேர்முகதேர்வுக்கு செல்லுகிறார் அனன்யா.
அவ் இடைவெளியில் இடம் பெறும் சம்பவங்கள் காதலாக மாறுகின்றது.ஆனால் தம் காதலை சொல்லாமலே ஒரு நாள் அறிமுகத்துடன் பிரிகின்றனர்.பஸ் விபத்தில் இவ் காதலர்களுக்கு என் நடந்து என்பதே மீதி கதை.


புதுமுகம் சர்வா அருமையாக கிளைமாக்ஸ் காட்சிகளில் உணர்ச்சிபுர்வமாக நடித்துள்ளார். சப்பாட்டு பிளேட்டை பார்த்து தலை முடியை சரி செய்வது உதவி செய்தவனையே சந்தேகபடுவது அனன்யாவின் சின்னபுள்ள தனமான நடிப்பு ரசிக்கும்படி உள்ளது. 


அஞ்சலி ,ஜெய் இருவர்கள் உம்மையான காதலர்கள் போல் படத்தில் வாழ்ந்துள்ளனர்.அஞ்சலி ஜெய்யிடம் தன்னை கட்டிபிடி என கேட்கும் போது கல்யாணத்துக்கு பிறகு பிடிக்கிறன் என்று சொல்லும் ஜெய் அதுக்கு அஞ்சலி நீ கல்யாணத்துக்கு பிறகு பிடி நான் இப்ப பிடிக்கிறன் அந்த காட்சி ரசிக்கும் படியும் மற்றும் கிளைமாக்ஸில் அஞ்சலி ஓ…. என அழு காட்சி படம் பார்ப்போரை அல வைக்கிறது.




பஸ்ஸில் பயணம் செய்யும் அத்தனை கதாபாத்திரங்களும் பஸ் விபத்தின் பின்பு பார்ப்போர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் என நினைக்கிறேன்.


எங்கேயும் எப்போதும் நித்திரை தூக்கம், செல்போனில் கதைத்துக் கொண்டு மற்றும் கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்



Post Comment


10 comments:

KANA VARO said...

படம் பார்க்கணும்..

Philosophy Prabhakaran said...

தமிழ்மணம் 1... மிகவும் தாமதமாக எழுதுயிருக்கிறீர்கள்... இருந்தாலும் ஓகே...

K.s.s.Rajh said...

சூப்பர் அன்ணே...

SURYAJEEVA said...

will go and see, thanks for the review

டிலீப் said...

//KANA VARO said...
படம் பார்க்கணும்..//

வித்தியாசமான கதை பாருங்கள் வரோ

டிலீப் said...

//Philosophy Prabhakaran said...
தமிழ்மணம் 1... மிகவும் தாமதமாக எழுதுயிருக்கிறீர்கள்... இருந்தாலும் ஓகே...//



நண்பர் பிரபா நம்ம ஊரில் போல வெளிநாட்டுகளில் எல்லா தியேட்டரிலும் தமிழ் படம் போடுவதில்லை.எப்போ போடுகிறார்களோ அப்போதுதான் பார்க்க முடியும்.

முதல் நாள் முதல் ஷோ படத்தை பார்த்து விட்டு எல்லா படங்களுக்கும் விமர்சனம் எழுதும் பதிவர் நான் அல்ல.வித்தியாசமான கதை படம் பிடித்திருந்தது அது தான் விமர்சனம் எழுதினேன்.

இன்னும் படம் பார்க்காதோருக்கு இவ் விமர்சனம்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பிரபா

டிலீப் said...

//K.s.s.Rajh said...
சூப்பர் அன்ணே...//

தங்ஸ் தம்பி

டிலீப் said...

//suryajeeva said...
will go and see, thanks for the review//

பணத்தை எவ்வாறு கொள்ளையடிப்பது என ஜடியா தரும் படங்களை பார்ப்பதை விட இவ்வாறான தற்கால சமூகத்துக்கு தேவையான படத்தை பார்ப்பது நலம்.

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜீவா அண்ணே

Harini Resh said...

Anjukaaga படம் பார்க்கணும்..:P

டிலீப் said...

//Harini Nathan said...
Anjukaaga படம் பார்க்கணும்..:P//

வித்தியாசமான கதை பாருங்கள் ஹரிணி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.