அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


வின்டோஸ் இயக்கியைப் பாவிக்கும் கணினியை உபயோகிக்கும் அனைவருக்கும், குறிப்பாக ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளை, நெட்வேர்க் அமைப்பில் இயக்கும் நிறுவனங்களுக்கு, மைக்ரோசொவ்ட் நிறுவனம் விடுத்துள்ள அவசர அறிவித்தலில், புதிதாக பரவிவரும் மிக மோசமான இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
W32.Sasser.A

என்றழைக்கப்படும் இந்த வைரஸ், மற்றும் இதே பெயரைக்கொண்ட இதர பைல்களையும், உடனடியாக கணினியிலிருந்து அகற்றுவதன் மூலம் மட்டுமே, இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து கணினியைப் பாதுகாக்க முடியும்.

'
Firewall' என்றழைக்கப்படும், கணினிகளைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் இயக்கிகள் கொண்ட கணினிகளில், இந்த 'Firewall' களை தொழிற்பட வைத்து, அது தொழிற்படும் சமயத்தில், மைக்ரோசொவ்ட் நிறுவனம், தனது இணையத் தளத்தில் அறிமுகம் செய்துள்ள 'தானியங்கி வைரஸ் நீக்கி" யை (அன்ரி-வைரஸ்) தரவிறக்கம் செய்வதன் மூலம், இந்த வைரசின் பாதிப்பைத் தவிர்க்க முடியும்.

இதுவரை குறைந்தது ஒரு மில்லியனுக்கும் அதிகமான கணினிகளை செயலற்றதாக்கி, பல சர்வதேச நாடுகளிலும் பாரிய நிறுவனங்கள் சிலவற்றை செயலிழக்க வைத்துள்ள இந்த வகை வைரஸ் வின்டோஸ் எக்ஸ்.பி., வின்டோஸ் 2000, இவற்றுடன் வெளியான ‘சேவிஸ் பாக்’ என்றழைக்கப்படும் மேலதிக அம்சங்கள் அடங்கிய வழங்கிகளைப் பாவிக்கும் கணினிகளைக் குறிப்பாகத் தாக்கி வருகின்றன.

இவ்வார இறுதியில் வெளியானதாகக் கருதப்படும் 'சாசர்" என்றழைக்கப்படும் இந்த வைரசை, மைக்ரோசொப்ற் நிறுவனம் உடனடியாகவே கண்டுபிடித்து விட்டதால், விரைவாக இதைத் தடை செய்ய முடிந்தாலும், இந்த வகையைக் சேர்ந்த 
A, B, C, D  என நான்கு வெவ்வேறு வைரஸ்கள் இதே பெயரில் பரவியதால், ஐரோப்பாவிலும், ஆசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. வட அமெரிக்காவிலும் பல நிறுவனங்கள் இந்தவகை வைரசால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

இதனோடு ஒத்த இன்னும் பல வைரஸ்களும் பரவலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், வீடுகளிலும் வியாபார நிறுவனங்களிலும் தொழில் இடங்களிலும் கணனிகளை வைத்திருப்பவர்கள், மைக்ரோசொப்ஃற் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 'தானியங்கி வைரஸ் நீக்கி" யை உடனடியாக அவர்களது இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கணினிகளைப் பாதுகாப்பது அவசியம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களையும், உதவிகளையும் பெற, கீழ்வரும் இணையத்தளத்திற்கு விஐயம் செய்யுங்கள்: 
http://www.microsoft.com/security/incident/sasser.asp 

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.