அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

தமிழ் என்று தேடினாலே, ராகா.காம் தான் இரண்டாவதாக வருகிறது. எல்லா தமிழரும் ராகாவிற்கு சென்று பாடல்கள் கேட்டு இருப்பீர்கள். ஆனால், அதில் பாடல்கள் தரவிறக்கம் செய்திட, பணம் செலுத்த வேண்டும். இந்த பதிவில் எப்படி இலவசமாக, ராகா மற்றும் அனைத்து பாட்காஸ்ட் தளங்களில் (embed செய்ய பட்ட ஒலி உள்பட) இருந்து தரவிறக்கம் செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

ராகா.காம், tamilbeat போன்ற இணைய தளங்களில் இருந்து மட்டுமல்ல, எந்த ஒலியை உங்கள் கணினியில் இருந்து கேட்டாலும் அதை நீங்கள் பதிவு செய்யலாம்.

முதலில், இந்த இணைய தளத்தில் இருந்து, mymp3 recorder-ஐ பதிவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவவும். (அப்படியே ஒரிரு விளம்பரத்தைச் சொடுக்கினால், நான் உருவாக்கிக் கொண்டிருக்கும், எனது பல்கலை கழக வலைதளத்திற்கு ஒரு டொமைன் நேம் வாங்குவதற்கு உதவியாக இருக்கும். )

ராகாவில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1). இப்போது நிறுவிய மென்பொருளை இயக்கவும். படத்தில் காட்டியது போல் திரை திறக்கும். முதலில், ”Source" என்பதை கிளிக் செய்து, வலது புறத்தில் இருக்கும் “SteroMix"-ஐ கிளிக் செய்யவும்.

2). இப்போது, ராகா.காம் அல்லது உங்களுக்கு பிடித்தப் பாடல்கள் “ஒலிபரப்பும்” இணைய தளத்திற்குச் செல்லவும். உங்களுக்கு பிடித்த பாடலை ஓட விடவும். (இணைய இணைப்பு மெதுவாக இருந்தால், பாஸ் செய்து விட்டு, buffer ஆகி முடிந்தவுடன் ப்ளே செய்யுங்கள். (ராகா.காமில் இருந்து பாடல் கேட்க ரியல் ப்ளேயர் வேண்டும். முதலில் real player-ஐ உங்கள் கணினியில் நிறுவுங்கள். real player-ஐ பெற்றிட இங்கே செல்லவும்.

3). அதே நேரம், இந்த மென்பொருளில் “Record"(சிவப்பு நிற பொத்தான்) பொத்தானை அழுத்தவும். இப்போது, உங்கள் ஒலிபெருக்கியில் பாடும் பாட்டு, உங்கள் கணினியில் பதிவு ஆகிறது.

4). பாடல் முடிந்த பின், ”ஸ்டாப்” (வெள்ளை நிற பொத்தான்)-ஐ கிளிக் செய்யவும். சரிபார்த்து கொள்ள, ப்ளே செய்து பார்க்கவும்.

5). இன்னும் உங்கள் கணினியில் நிரந்தரமாக பதிவாக வில்லை. பாதுகாப்பாக, சேமித்திட “Save To Mp3" கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பான இடத்தில் சேமித்திடுங்கள். “Save to wav" என்று கொடுத்தால், அதிக கொள்ளளவு எடுக்கும்.

அவ்வளவு தான். இப்படி எந்த இணைய தளத்தில் இருந்தும் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்திடலாம்.


நீங்கள் இந்த உத்தியை பயன்படுத்தித் தரவிறக்கம் செய்தலில் வெற்றி(!) பெற்றால், மறக்காம கருத்து தெரிவிக்கவும். தோல்வி பெற்றாலும் சரி, கருத்து போடுங்க, சரி பண்ணிடலாம். நல்ல தமிழ்க் கவிதைகள், பட்டிமன்றம், பாடல்கள் ஒலிவடிவில் (பாட்காஸ்ட்) இருக்கும் இணைய தளம் தெரிந்தால், இங்கே அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.