அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

இணையத்தில் தமிழ் மின்னூல்கள்



இணையத்தில் இப்போது கணனியில் வாசிப்பதற்கான மின்புத்தகங்கள்(EBooks) தாராளமாகவே கிடைக்கின்றன. கடைத்தெரு, நூல் நிலையம் என்று நடந்து சென்று நல்ல புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலைந்து திரிந்து களைத்துப் போய்விடாமல் வீட்டில் இருந்தபடியே கணனி மவுஸ் பட்டனை அழுத்தி விரும்பிய புத்தகங்களை தெரிவு செய்து படிக்கும் முறை நன்றாகத்தான் இருக்கிறது.
அதைத்தவிர இணையத் தளங்களிலிருந்து இலவசமாகவே எத்தனையோ தமிழ், ஆங்கில மின் புத்தகங்களை சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது..
தமிழில் அதிகளவு மின்புத்தகங்கள் கிடைக்கின்றன. ஈழத் தமிழ் மண்ணின் ஆக்கங்களாக திகழும் அரும்பெரும் நூல்களின் களஞ்சியமாக

www.noolaham.net என்ற மின்நூலகம் திகழ்கின்றது.அதேபோல் தமிழக இணையத்தள இலவச நூலகங்களாக www.chennailibrary.com,
www.projectmadurai.org/pmworks.html,
www.tamilvu.org/library/libcontnt.htm போன்ற பல தளங்கள் காணப்படுகின்றன.
இந்த வகையான இணையத்தள நூலகங்களில் இலவசமாகக் கிடைக்கும் தமிழ் மின்புத்தகங்கள் பெரும்பாலும் PDF File முறையிலும் HTML வகையானகோப்புக்களாகவுமே காணப்படுகின்றன.


அதேபோல் ஆங்கிலத்திலும்
http://manybooks.net,www.mobipocket.com,www.free-ebooks.net,www.ereader.com/ereader/eBooks/freebooks.htm?
போன்ற பல தளங்களிலிருந்து பல்வகையான புத்தகங்களை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

அதேவேளை ஆங்கிலமொழி மின் நூல்கள், பலவகையான E-Reader என்று கூறப்படும் இன்னொரு மென்பொருள் கொண்டு மின்நூல்களை வாசிக்கும் முறையை கொண்டிருக்கின்றன. இந்த வாசிப்பு மென்பொருளானது அழகான வடிவத்தை நிறங்களை பின்னணி படங்களை உருவாக்கும் வசதி கொண்டிருப்பதால் அதன் மூலம் நாம் வாசிக்கும் மின் புத்தகத்தின் அழகு மேம்படுகிறது.தமிழ் மின்னூல்களுக்கு இந்தமுறை இருப்பதாக தெரியவில்லை. (யாரவது இருந்தால் சொல்லுங்கோ) எதிர்காலத்தில் நிறைய உருவாகலாம்.
இப்போது ஆங்கில E-Reader கள் சிலவற்றின் மூலம், தமிழ் மின்நூல்களை நாம் எப்படி அழகுறச் செய்வது என்று பார்ப்போம். இப்படியான நூல்களை நீங்கள் செய்து மற்றவரும் பயன்படும்படி செய்து கொள்ளலாம்.

eReader மென்பொருட்கள் iPhone, iPod touch, BlackBerry, Palm OS, PocketPC, Windows Mobile, Smartphone Symbian போன்றவற்றிலும் பாவிக்கும் வகையில் இருப்பதால் இப்படி உருவாக்கும் தமிழ் மின்புத்தகங்களை இந்த மின் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்போரும் அவற்றில் பதிவு செய்துவைத்து வாசிக்க முடியும். (பரீட்சித்து பார்க்கவில்லை)
ஆங்கில வாசிப்பு மென்பொருட்கள் பலவகை உண்டு. இவை இலவசமாகவே கிடைக்கின்றன. உதாரணத்திற்கு eReader, microsoft Lit, Plucker, MobiPokcet, Ebook Maestro, FBReader எனப் பலவகை காணப்படுகின்றன.

முதலில் eReader ல் எப்படி தமிழ் மின்புத்தகம் உருவாக்குவது என்று பார்க்கலாம்.
eReader
இதற்கு தயார் படுத்த வேண்டியது
1) கதை அல்லது ஏதாவது தமிழ் ஆக்கம்
2) eReader Pro for Windows
3) Open office Text document
4) பாமினி எழுத்துரு அல்லது அந்த வகையை சார்ந்த இன்னொரு எழுத்துரு.
5) அவசியமேற்படில் பொங்குதமிழ் உருமாற்றி (www.Suratha.com)

1) முதலில் http://www.ereader.com/ என்ற இணையத்தளத்திலிருந்து வாசிப்புக்கான மென்பொருளை (eReader Pro for Windows) தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.இதை கணனியில் நிறுவி வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: இதே இணையத்தளத்தில் அல்லது manybooks.net இல் நிறைய இலவச ஆங்கில மின் புத்தகங்கள் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து இந்த reader மூலம்வாசிக்கலாம். ( *.Pdb என்ற வகையிலான மின்நூல்கள் மட்டுமே.)

2) நீங்கள் எழுதிய அல்லது யாராவது நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆக்கம், கதை, கவிதை போன்றவை, பாமினி வகையை சேர்ந்த எழுத்து முறையால் ஆனதென்றால் (4) வது பகுதிக்கு போங்கள்.

3) unicode முறையிலோ TSCI அல்லது வேறெந்த முறையிலோ இருக்கும் ஆக்கத்தை பாமினி முறைக்கு மாற்ற வேண்டும். இதற்கு இணையத்தில் பொங்கு தமிழ் மூலம் உங்கள் கதையை வெட்டி ஒட்டி பாமினி முறைக்கு மாற்றவும்.( http://www.suratha.com/uni2bam.htm )பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியிலிருந்து பாமினி உருவிற்கு மாற்றிய கதையினை copy செய்து
கொள்ளவும்.

4) Open office text document ஐ திறந்து அதில் பாமினி எழுத்துருவில் உள்ள கதையை Paste செய்யவும். இந்த document ஐ Save as மூலம் Save Type ——– AportisDoc (Palm *.Pdb) வகையைத் தெரிவு செய்து பதிவு செய்து கொள்ளவும்.
open office தரவிறக்கம் செய்யும் முகவரி http://www.openoffice.org/

இப்போது கதை தயார். eReader ஐ திறந்து அதற்குள் கதையை எடுத்து வைப்பதன் (அல்லது File ————> add Books) மூலம் புதிய வடிவில் கதையை வாசிக்கலாம். எழுத்துக்கள் முதலில் புரியாத வடிவில்காணப்படும். Menu வில் view —-> view setting ல் சென்று bamini எழுத்துருவுக்கு மாற்றிக் கொள்ளவும். இங்கே டிசைன், பாமினி குடும்ப வேறுவகை எழுத்துரு, நிறம் இவைகளை மாற்றி கொள்ளலாம். கீழே உள்ளSave ஐ பயன்படுத்தி பதிந்து வைத்துவிட்டால்மீண்டும் eRaeder ஐ திறக்கும்போது விரும்பிய தெரிவு மாறாமல் இருப்பதைக் காணலாம்.

Post Comment


1 comments:

Thusharini said...

Realy use ful information Dileep.
keep writting and updatting this type of information.thanks .

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.