அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeஇணையத்தில் உலா வரும் அனைத்து நபர்களும் தங்களக்கு பிடித்தமான விசயங்களை தங்களது கணிணிக்குள் தரவிறக்கம் செய்ய ஆசை படுவார்கள். பெரும்பாலும் அவர்கள் தரவிறக்கம் செய்யும் கோப்புகள் பல MB கணக்கிளும், ஒரே கோப்பு பல பாகங்களாக பிரித்து இணைய வழங்கியில் (Web Server) சேமித்து வைத்து இருப்பார்கள். அங்கே இருந்து நமது கோப்பை தரவிறக்க சில வினாடிகள் காத்திருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் ஒரு நாளைக்கு இவ்வளவு அளவுதான் நீங்கள் தரவிறக்கம் செய்ய முடியும் என்று விதிகள் பல இருக்கும். இவை அனைத்தையும் விட நாம் தரவிறக்கம் செய்ய ஆரம்பித்த உடன் நமது இணையத்தின் வேகம் குறைந்து நமக்கு சங்கடத்தை தரும். எனவே நாம் பெரும்பாலும் பெரிய அளவிலான கோப்புகளை Torrentz எனப்படும் மென்பொருள் மூலம் தரவிர்ரகம் செய்து கொள்வோம். இரவில் தரவிறகத்தை ஆரம்பித்து வைத்துவிட்டால் காலை நமது கோப்பு தரவிறக்கம் ஆகி இருக்கும். ஆனால் பெரும்பாலும் நமக்கு தேவையான கோப்புகள் torrentz 'இல் இருக்குமா என்பது சந்தேகம். அது மட்டும் இல்லாமல் நமது கோப்பு நல்ல நிலையில் இருக்குமா என்பது மிக பெரிய கேள்வி குறி தான். எனவே இந்த பிரச்சனையை சுலபமாக்கும் மென்பொருள் தான் Mipony . இந்த மென்பொருளை இந்த லிங்கில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருள் உலகில் உள்ள பிரபலமான பல இணைய வழங்கியில் (Web Server) இருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் வசதி கொண்டது. இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவியயுடன் உங்களக்கு தேவையான கோப்பு எந்தவொரு இணைய வழங்கியில் (Web Server), எவ்வளவு பாகங்களாக இருந்தாலும் அனைத்தையும் ஒரே நேரத்தில் தரவிறக்க உதுவுகிறது. அது மட்டும் இல்லாமல் அந்த கோப்புகள் இணைய வழங்கியில் (Web Server ) நல்ல நிலையில் உள்ளதா என்று நாம் தரவிறக்கம் செய்யும் முன்பே நமக்கு சொல்லி விடுகிறது. மேலும் சிறப்பாக இந்த மென்பொருளின் உள்ளேயே ப்ரௌசெர் (Browser) இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நாம் ஒவ்வொரு முறையும் ஏதானும் லிங்கை தரவிறக்கம் செய்ய முயற்சிக்கும் போது தானகவே இந்த மென்பொருள் அந்த லிங்கை தன்னுடன் இணைத்து கொள்கிறது.
இந்த மென்பொருள் கண்டிப்பாக Torrentz'க்கு மாற்றாக அமையும் வசதி கொண்டது.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.