அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



2012 நிகழ்வுகள் உலகின் பேரழிவு அல்லது பெரும் மாற்றம் 2012ஆம் ஆண்டில் நிகழலாம் என நிலவும் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் குறிக்கிறது. இந்த சோதிடங்கள் முதன்மையாக மாயா நாட்காட்டியில் 5,125 ஆண்டுகள் கழித்து திசம்பர் 21 அல்லது 23,2012ஆம் ஆண்டில் முடிவதைக் கொண்டு எழுந்துள்ளன.


மெக்சிகோ பகுதியில் வாழ்ந்திருந்த மாயா நாகரீகத்தில் உலகம் துவங்கியதாக அவர்கள் கருதிய நாளிலிருந்து தொடர்ந்த நாட்காட்டி முறை (Long Count calendar) கடைபிடிக்கப்பட்டது. இதனைக் கொண்டு தொன்மவியல் வானிலையாளர்கள்,மத பொழிப்புரையாளர்கள், எண்கணிதவியலாளர்கள் மற்றும் புறப்புவி ஆய்வாளர்கள் என ஒவ்வொருவரும் ஒரு நம்பிக்கை அல்லது கருத்தை பரப்பி வருகின்றனர்.
புதிய காலம் விரிவுரையாளர்கள் பேரழிவு ஏற்படும் என்பதை மறுத்து அந்த நாளில் நேர்மறையான மாற்றம் நிகழலாம் எனவும் 2012 புதிய சகாப்தத்தின் துவக்கம் என்றும் கொள்கை வகுக்கின்றனர்.இத்தகைய எண்ணங்களும் கருத்துக்களும் பல புத்தகங்கள்,தொலைக்காட்சி விவரணப்படங்கள்,இணைய தளங்கள் மூலம் உலகெங்கும் பரவியுள்ளது.
மாயா ஆராய்ச்சியாளர்கள் மாயா நாட்காட்டி 2012இல் முடிகிறது என்பது மாயா வரலாற்றை தவறாக கணிக்கிறது என்று வாதிக்கிறார்கள். இன்றைய மாயாவினருக்கு, 2012 முற்றிலும் தொடர்பில்லாதது, பழைமைவாதிகளுக்கு இதனைக் குறித்த மூல செய்திகளோ கிடைப்பதில்லை அல்லது முரண்பட்டுள்ளது.இதனால் அவர்களிடையே இந்த நாளைக்குறித்த ஓர் பரவலான இணக்கமான புரிதல் இல்லை. 2012ஆம் ஆண்டு உலகின் பேரழிவுக்கான காரணங்களாக பகுதி அறிவியலாளர்கள் கூற்றுக்களை (கருங்குழி ஒருங்கிணைப்பு,தடுமாறும் கிரகமொன்று புவி மீது மோதல்,துருவங்கள் மாற்றங்கள்,சூரியனின் தீப்பிழம்புகள்) அறிவியல் வல்லுனர்கள் மறுத்துள்ளனர்.பெரும்பாலானவை அடிப்படை இயல்பியல் விதிகளுக்குப் புறம்பானவை.
இந்த ஆண்டு பேரழிவு நிகழுமென அச்சமடைந்துள்ள பொதுமக்களின் நம்பிக்கையின் பேரில் ரோலாண்டு எம்மெரிக் இயக்கத்தில் 2012(திரைப்படம்) வெளியாகியுள்ளது.மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்டுவதாக இல்லாத மனிதம் தொடர்ச்சி கழகம் மூலம் இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விளம்பர நிகழ்படம் அறிவியலாளர்களாலும் பகுத்தறிவாளர்களாலும் பெரிதும் விமரிசிக்கப் பட்டது.

நாசா என்ன சொல்கிறது

2012 நிகழ்வு பற்றி (அமெரிக்க) தேசிய வானூர்தியியல், விண்வெளி நிருவாகம் தன் இணைமதளங்களில் தெளிவாக விளக்கியுள்ளது. அவற்றின் சாரம் என்னவெனில், இந்த பீதி அறிவுபூர்வமானதும் அல்ல அறிவியல் பூர்வமானதும் அல்ல என்பதே!

நிபிரு பீதி பற்றி நாசாவின் கருத்து

நிபிரு என்ற மிகப்பெரிய விண்பொருள் (கோள் என்றும் சொல்பவர் உண்டு) பூமியை நோக்கி நேராக வரப்போவதாகக் கூறும் (கற்பனைக்கதை எழுத்தாளர்) செக்காரியா செட்சினின் கருத்திலிருந்து துவங்கியதுதான் இந்த நிபிரு பீதி என்று கூறலாம்.  அவர் தன் கருத்திற்கு ஆதாரமாக வைப்பது, சுமேரியர்களின் புராதன ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாக அவர் கூறும் விடயங்களைத்தான். அவற்றில் நிபிரு என்ற கோள் உள்ளதாகவும் அது 3600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வரும் எனவும் கூறப்பட்டுள்ளது என்கிறார் இவர். அனுண்ணகி என்றழைக்கப்படும் வேற்றுக்கோள் வாசிகள் பூமிக்கு வந்தனர் என்றும் அவர்கள் கூற்றுப்படியே நிபிருவின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது; நிபிரு பீதியைக் கிளப்புபவர்கள் முன்னரே ஒரு தேதியைக் குறித்திருந்தனர் -- அதாவது மே 2003 -- அத்தேதியும் வந்து சென்று விட்டது; எனவே இப்போது தேதியை சற்று முன்னர் தள்ளிப்போட்டுள்ளனர் இவர்கள்.

மாயா இனமக்களின் நாட்காட்டி டிசம்பர் 21, 2012 அன்று முடிவுறுவது குறித்து?

உண்மையில், மாயா நாட்காட்டி குறிப்பிடப்பட்ட தேதியான டிசம்பர் 21, 2012 அன்று முடிவடைவதில்லை; டிசம்பர் 31 அன்று நாம் பயன்படுத்தும் நாட்காட்டி முடிவடைந்தது என்று கூற முடியுமா! மீண்டும் ஒரு வருட நாட்காட்டியை நாம் தொடர்ந்து பயன்படுத்துவது இல்லையா? அதேபோல் தான் இந்த மாயா நாட்காட்டியும். இதன் தற்போதைய நீள்-எண்ணம் (long count) முடிவுற்றாலும் மறு தினமே மீண்டும் ஒரு புதிய தொடர்ந்த (நீள்-எண்ண) நாட்காட்டி துவங்கும்

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.