
158 உயிர்களை பலி வாங்கிய மங்களூர் விமான விபத்து தொடர்பான கண்ணீர் கதைகளுக்கு மத்தியில் டிவிட்டரில் இருந்து நெகிழ வைக்கும் சோக கதை வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் ஏறுவதற்கு முன் இளம்பெண் ஒருவர் பகிர்ந்து கொண்ட டிவிட்டர் செய்தி இணையவாசிகளை கண்ணீர் விட வைத்துள்ளது.
ஹர்ஷினி பூஞ்சா எனப்து அந்த இளம்பெண்ணின் பெயர்.17 வயதாகும் அவர் மல்டி மீடியா மாணவி.கடந்த சனிக்கிழமை அன்று பூஞ்சா தனது பெற்றோர்களோடு துபாயில் இருந்து மங்களுருக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணமானார்.மங்களூரில் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.
பூஞ்சா டிவிட்டரில் ஈடுபாடு கொண்டவர்.நெட்டிசன்டூ என்னும் பெயரில் அவர் டிவிட்டரில் தகவல்களை பகிர்ந்து கொண்டு வந்தார்.டிவிட்டரில் அவர் அத்தனை பிரபலம் என்று சொல்வதற்கில்லை.இருப்பினும் அவர் தனது எண்ண ஓட்டங்களை டிவிட்டர் மூலம் வெளீயிடுவது வாடிக்கை.
இப்படீ தாண் கடந்த சனிக்கிழமை அவர் துபாயில் மங்களூர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக தனது செல்போன் மூலம் டிவிட்டரில் அப்போதைய உணர்வினை பகிர்ந்து கொண்டார்.
திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மங்களுர் செல்கிறேன் என்று குறிப்பிட்டிருந்த அவர் இது போன்ற குடும்ப வைபவங்களில் தனக்கு அதிகம் ஆர்வம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு விமானத்தின் அருகே சென்றதும் ,விமான நிலையத்தில் இருக்கிறேன்,இப்போது நான் எதிர்பார்ப்பதெல்லாம் மழை ஒன்றை மட்டும் தான் என்று பதிவு செய்திருந்தார்.
இது தான் அவர் அனுப்பிய கடைசி டிவிட்டர் செய்தி. சில மணி நேரங்களில் மங்களூரில் தரையிறங்கிய அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அவர் உட்பட 158 பேர் உயிர்களை குடித்துவிட்டது.
விமான விபத்து பற்றி தகவல் அறிந்த பின் அந்த செய்தியை படித்தவர்கள் பட்டாம்பூச்சி போல் சிறகடித்த அந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோக முடிவை நினைத்து கலங்கிப்போயினர்.
விமானத்தில் ஏறுவதற்கு முன் அந்த பெண் என்ன நினைத்திருந்தாரோ தெரியாது. ஆனால் நிச்சயம் காத்திருந்த விபரீதத்தை அறிந்திருக்க மாட்டார்.
நாளிதழ்களிலும் தொலைகாட்சிகளீலும் விமான விபத்தில் பலியானவர்களின் சோக கதைகள் பதிவு செய்ய்ப்பட்டு வந்த நிலையில் இந்திய டிவிட்டர் வெளி இளம்பெண்ணின் கடை டிவிட்டர் செய்தியை பார்த்து கண்ணீர் சிந்தியது.
அதன் பிறகு மிக இயல்பாக அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் செயலில் பலரும் ஈடுபட்டனர்.
பூஞ்சாவின் டிவிட்டர் செய்திகளை பின்தொடர்ந்தவர்கள் இந்த பதிவை குறிப்பிட்டு தங்கள் வேதனையை தெரிவித்தனர். இன்னும் சிலர் பூஞ்சா மறைந்து போனால் என்ன அவருக்கு மரியாதை செய்யும் வகையில் அவரை பின்தொடர்வோம் என்று அழைப்பு விடுத்தனர்.
இதனை பார்த்த மற்றவர்கள் அவரின் பின்தொடர்பாளராக மாறியதோடு இதனை மறுடிவீட் செய்தனர்.இதன் பயனாக கணிசமானோர் பூஞ்சாவின் பின்தொடர்பாளராக சேர்ந்து விட்டனர்.
பலர் வரது ஆன்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வதாக கூறியிருந்தனர்.பூஞ்சாவின் பேஸ்புக் பக்கத்திலும் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
சிலர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருந்தனர்.
பாலிவுட் பிரபலங்கள் சிலரும் தங்கள் வேதனையை பதிவு செய்தனர்.
இருக்கும் போது ஒருவருக்கு டிவிட்டரில் கிடைக்கும் ஆதரவை எண்ணி ம்கிழலாம்.ஆனால் இறந்த பின் கிடைக்கும் ஆதரவால் என்ன பயன் என்று கேட்கலாம்.மறைந்த ஆன்மாவுக்கான டிவிட்டர் கால மரியாதை என்று வைத்துக்கொள்வோமே.
இதனை தான் ஒரு டிவிட்டர் பயனாளி மறைந்த பின்னரும் பின்தொடரப்பட பூஞ்சா தகுதி வாய்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது டிவிட்டர் கணக்கேனும் நீடுடீ வாழ்க.
———-
1 comments:
Pooja win maraiwu megawum wedhanayai tharugirathu, awalin athuma santhi adaya pirathippom nanbargalay.
Nandri Dileep ungal pagirwitku
Post a Comment