அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

'ஏலியன்ஸ்' என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி; ஆனால் அவர்களை, மனிதர்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது' என, பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது: பிரபஞ்சத்தில், 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில், பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.


என்னுடைய கணித அறிவின்படி, வேற்று கிரகவாசிகள் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எந்த உருவத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது தான் சவாலான விஷயம். அவர்கள் நுண்ணுயிரிகளாகவும் இருக்கலாம். புழுவாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த உருவங்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு, நம் உயிரினத்தின் வளர்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம்.

தங்கள் கிரகத்திலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விட்டு, தற்போது வேறு இடத் தில் வசிப்பதாக நான் கருதுகிறேன். அது போன்ற வேற்று கிரகவாசிகள், மற்ற கிரகங்களுக்கு நாடோடிகள் போல நுழைந்து, அவ்வுலகத்தைக் கைப்பற்றவும் தயாராக இருக்கலாம். ஆனால், அவர்கள் இவ்வுலகில் நுழைந்தால், அவர்களுக்கு அது வெற்றியாக அமைய வாய்ப் பில்லை. இவ்வாறு ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்.

                                     நன்றி :Tamil Guide


                                                 

Post Comment


2 comments:

۞உழவன்۞ said...

nice

Dileep said...

நன்றி ... உழவன்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.