ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் காணப்படும் அதிபயங்கர மலைபாம்புகளை (African rock pythons)எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வேட்டையாடும் மனிதர்களை பார்க்கும் பொது நமக்குள் பயம் தொற்றிகொள்ளும் என்பது உண்மையே.
இந்த பாம்புகள் தான் உலகிலே மிக நீளமான மலை பாம்புகள் ஆகும், இவற்றின் கூரிய பற்களும் சர்வ சாதாரணமாக எந்த ஒரு காட்டு விலங்கினையும் சுருட்டி கொல்லும் திறனுடைய இந்த பாம்புகளை வேட்டையாடும் முறையே வித்யாசமாக இருக்கிறது.பாம்பு வேட்டைக்கு தயாராகிறார்கள்
மலைப்பாம்பு பிடிக்கும் முறை மிகவும் எளிதானது தான். மலைப்பாம்பு இருக்கும் வளையினை கண்டிபிடித்தவுடன் கையில் ஒரு சிறிய தோலை சுற்றிக்கொண்டு சின்ன தீ பந்தத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு மனிதன் அந்த வளைனுள் செல்லுவான்
முட்டையிட்டு அடைகாக்கும் மலைப்பாம்பு எப்பொழுதும் மிக கோபமாகவே இருக்கும். திறமையான மனிதன் மிக வேகம்மாக வெளியே வந்துவிடுவான்.... தவறினால் தலை பாம்பின் வாயினுள் தான்.ஆனால் அவர்களும் புத்திசாலியே, தோல் சுற்றபட்ட கையால் மெதுவாக பாம்பின் முன் ஆட்டுவார்கள் ஒரு வேளை பாம்பு இவர்களை கவ்வி விட்டால் கையால் பாம்பின் நுரையீரல் இருக்கும் பகுதியை கெட்டியாக பிடித்து அதனை சம்மாளித்துவிடுவார்கள். கையில் இருக்கும் சிறிய தீ பந்தம் பாம்புகளின் முகத்தினை நோக்கி வராதவாறு முகத்தின் முன் பிடித்துகொள்வார்கள். அதையும் மீறி பாம்பு கவ்விவிட்டல் வெளியே இருக்கும் நண்பன் வேகமாக காலைபிடித்து வெளியே இழுத்துவிடுவான்.
இவ்வாறு பிடிக்கபட்டு கொல்லப்படும் இந்த மலை பாம்புகளின் தோல்கள் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது.
இறுதியில் இப்படித்தான் மாற்றபட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஒருவேளை இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை உயிரினகளும் மனிதனுக்கு மட்டுமே சொந்தமோ?
நன்றி :muthalmanithan
4 comments:
வாவ்.என்ன தைரியம்.
amazing photos.
கொஞ்சம் மிஸ் ஆனா சங்கு தான்
////ஒருவேளை இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை உயிரினகளும் மனிதனுக்கு மட்டுமே சொந்தமோ?////////
அவ்வாறுதான் மனிதன் எண்ணுகிறான்.
ரொம்ப ரிஸ்கான விடயம்தான்.
(இன்னிக்குதான் உங்க தளத்துக்கு வருகை தந்தேன் )
kippoo உங்களை அன்புடன் எனது தளத்துக்கு வரவேற்கிறேன்
ஆம் அவன் தானே இவ் உலகத்த ஆளுகிறான்...
அவனுக்குதான் எல்லாம் சொந்தம்
Post a Comment