அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


கின் ஒன், கின் டூ… மைக்ரோசாஃப்டின் ‘இளமை செல்போன்


செல்போன் சந்தையில் மற்ற நிறுவனங்களோடு மல்லுக்கட்ட கிளம்பி விட்டது மைக்ரோசாஃப்ட்!
இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய செல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது இந்நிறுவனம். ஆனால் இந்த செல்போனை மைக்ரோசாஃப்ட் நேரடியாகத் தயாரிக்கவில்லை. ஜப்பானின் ஷார்ப் நிறுவனம் தயாரித்துள்ளது. வோடபோன் நிறுவனத்துடன் கூட்டாக விற்பனைக்குக் கொண்டு வருகிறது மைக்ரோசாஃப்ட்
இதுவரை எச்டிசி, சாம்சங் போன்ற நிறுவனங்களின் செல்போன்களுக்கு விண்டோஸ் தொழில்நுட்பத்தை மட்டும் வழங்கி வந்தது மைக்ரோசாஃப்ட். ஆனால் மொபைல் போன்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆப்பிள், பிளாக்பெர்ரி பிராண்டுகள் அடைந்த வெற்றி, மைக்ரோசாஃப்டையும் ஏதேனும் ஒரு வழியில் செல்போன் தயாரிப்பில் குதிக்க வைத்தது. அதன் விளைவுதான் இந்த புதிய முயற்சி.
இந்த போன்களுக்கு கின் ஒன், கின் டூ என பெயரிட்டுள்ளனர்.
மைக்ரோசாஃப்டின் இந்த போன்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டாலும், இன்னும் விற்பனைக்கு வரவில்லை. மே முதல் வாரத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு கிடைக்குமாம்.
ஃபேஸ்புக், ட்விட்டர், மைஸ்பேஸ் போன்ற சமூக நெட்வொர்க் தளங்கள் இந்த போனில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க் போல அமைத்துக் கொண்டும் கூட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டச் ஸ்கிரான், பக்கவாட்டில் அடக்கமான கீ போர்ட், கேமரா என அனைத்து வசதிகளும் கொண்டவை இந்த செல்போன்கள். கின் டூ-வில் ஸ்கிரீன் பெரியது, வீடியோ கேமராவாகவும் பயன்படுத்தலாம்.
விரைவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனமே நேரடியாகத் தயாரிக்கும் செல்போன்களும் விற்பனைக்கு வரும் என்கிறார் இந்நிறுவனத்தின் பொழுதுபோக்குப் பிரிவு தலைவர் ரூபி பாக்.
வாங்க நீங்க ரெடியா ...............Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.