
ஒன்றுக்கு மேறப்பட்ட மொழிகளை அறிந்திருப்பது மூளைக்கு நன்மையை ஏற்படுத்தும் என பான்குர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வயது முதல் 80 வயது வரையிலான 700 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
பல மொழிகளில் பேசுவதற்கும், பல கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்கும் மொழியறிவு மிகவும் இன்றியயைமாததென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல மொழிகளை தெரிந்து கொள்வதனால் நேரடியாக கிடைக்கப் பெறக் கூடிய நன்மைகளைப் போன்றே மறைமுகாக உடலுக்கு வேறும் நன்மைகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளை வயதடைவதனை கடடுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மொழிகளில் பேசுதல், எழுதுதல் மற்றும் சிந்தித்தல் ஆகியவற்றினால் மூளையின் செயற்திறன் வலுப்பெறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மொழிச் செயற்பாடுகள் மூளையின் சிக்கல் மிகுந்த இயக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இரண்டு வேறுபட்ட மொழிக் கட்டமைப்புக்களை மூளை ஆயுள் முழுவதும் செயற்படுத்துவதனால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment