அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


பயோனிக்ஸ் என்ற இந்த வார்த்தை Jack E. Steel என்பவரால் 1958ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. இது கிரேக்க வார்த்தையான 'bion' (bee-on) என்ற வார்த்தையிலிருந்து உருப் பெற்றது. bion என்ற வார்த்தைக்கு (unit of life) 'உயிரின் ஓர் அலகு' என பொருள் வரும். 'ic' என்ற அசைக்கு 'போன்ற' (like OR in the manner of) என்ற பொருள் வரும். ஆக 'உயிரைப் போன்ற' எனப் பொருள் கொள்ளலாம்.எது எப்படியோ மனிதனின் வேகமான வளர்ச்சிக்கு, அல்லது முயற்சிக்கு இந்த பயோனிக் ஒரு சான்று. இதை biomimetics, bio-inspiration, biognosis, biomimicry அல்லது bionical creativity engineering என்றும் சொல்கிறார்கள். வேறு சிலர் Biology + Eletronics என உண்டானது என்கிறார்கள்.

மருத்துவத்துறையில் பயோனிக்ஸ் என்பது வெளி மற்றும் உள் உடலுறுப்புகளின் சிதைவுகளை இயந்திர முறையில் சரி செய்து அதை பழைய முறையில் அல்லது அதை விட சிறப்பாக இயக்கும் தொழில் நுட்பமாகும்.
பயோனிக்ஸ் முறை இன்னும் அதன் துவக்க நிலையில்தான் இருக்கிறது என்றாலும் 'cochlear implant' மூலம் காது கேளாதவர்களை கேட்க வைக்க முடியும். அதாவது பயோனிக்ஸ் காதுகள். பயோனிக்ஸ் 


முறையின் மூலம் 2004ம் ஆண்டில் இயங்கும் ஒருமுழு இதயத்தையே செயற்கையாக உருவாக்கி காட்டினார்கள். புதிய நானோ தொழில் நுட்பம் மூலம் இதில் பல வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பெனிசில்வேனியா பல்கலை கழகத்தின் பயோஇன்ஜினியரிங் துறையில் பணிபுரியும் Ghana நாட்டைச் சார்ந்த Kwabena Boahen என்ற பேராசிரியர் தம் எட்டு வருட கல்லூரி பணியில் மனித விழித்திரையை ஒத்த 'சிலிகான் விழித்திரை' ஒன்றை உருவாக்கி உள்ளார். காட்டுப் பல்லியின் கண்களின் இயக்க சிக்னல்களை அதில் அனுப்ப, கருப்பு வெள்ளையில் அதுவும் பார்ப்பதை நிரூபித்திருக்கிறார்.இதன் முன்னேற்றம் பற்றிV செய்தி இங்கே .

பயோனிக்ஸ் பற்றிய கூடுதல் செய்தி இங்கே கிடைக்கிறது. 


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.