அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


இந்நாட்களில் அதிகமாக பேசப்படுவது ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு பற்றியே.
ஆகையால் அதை பற்றிய சிறு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து லாவா எனும் நெருப்புக் குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலையிலிருந்து பீச்சியடிக்கப்படும் சாம்பல் ஐரோப்பாவின் வான் மண்டலம் முழுவதும் பரவி உள்ளது.
   
இஜப்ஜாலாஜோகுல்: எரிமலையை மூடியிருக்கும் பனிமலை..

இஜப்ஜாலாஜோகுல்… சில தகவல்கள்!
வெடித்துச் சிதறும் எரிமலையின் பெயர் இஜப்ஜாலாஜோகுல். கடந்த ஒரு மாதத்தில் இந்த எரிமலை வெடிப்பது இது இரண்டாவது முறையாகும்.
இது பனிக்கட்டி அடுக்குள் நிறைந்த மலையில் உள்ளது. எரிமலை வெடித்து நெருப்பை கக்குவதால், இந்த பனிப் படலங்கள் உருகி ஐஸ்லாந்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓடி வருகின்றனர்.
இந்த எரிமலையை சுற்றி 3 லட்சத்து 20 பேர் வசித்து வந்தனர். எரிமலை நெருப்புக் குழம்பைக் கக்க ஆரம்பித்ததுமே அவர்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.


எரிமலைகள் நிறைந்த நாடு ஐஸ்லாந்து…
வடக்கு துருவத்தில் அமைந்துள்ள நாடுகளுள் ஒன்றான ஐஸ்லாந்து வெந்நீர் ஊற்றுக்களுக்குப் புகழ் பெற்றது. அதேபோல இந்த நாட்டில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இப்போதும் சிறியதும் பெரியதுமாக உயிரோடு (எந்த நேரமும் வெடிக்கலாம்) உள்ள எரிமலைகள் எண்ணிக்கை 35 ஐத் தாண்டுகிறது. இவை தவிர உலகின் மிகப் பெரிய 4 எரிமலைகள் இங்குதான் அமைந்துள்ளன.


இப்போது வெடித்துள்ள எரிமலை இஜப்ஜாலாஜோகுல் (Eyjafjallajökull) ஐஸ் ஏஜ் காலத்திலிருந்தே அவ்வப்போது வெடித்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளது. எரிமலை என்ற ஒன்று இருப்பதே தெரியாத அளவுக்கு பனியால் மூடப்பட்ட மலை இது.
இதுவரை நான்கு முறை இந்த எரிமலை வெடித்துள்ளது. அவை 920, 1612, 1821 -1823, மற்றும் 2010. 1821-ல் இந்த எரிமலை வெடித்த போது 2 ஆண்டுகளுக்கு மேல் நெருப்பையும் சாம்பலையும் கக்கிய வண்ணமிருந்தது இந்த இஜப்ஜாலாஜோகுல். இந்த முறை கடந்த மார்ச் மாதமே இந்த எரிமலை வெடித்துவிட்டது. ஆனால் இந்த அளவு பெரும் தாக்கம் இல்லை. இதற்கு அருகில் உள்ள கட்லா எரிமலை மிகப் பெரியது. அது வெடித்தால் இதைவிடப் பெரிய பாதிப்புகள் இருக்குமாம்.
இந்த எரிமலை வெடிப்பும் நன்மைக்கே!


இஜப்ஜாலாஜோகுல் எரிமலை வெடித்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைவிட ஒரு பெரிய நன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக எரிமலை ஆராய்ச்சியாளர்கள் கருத்து  தெரிவித்துள்ளனர். அதாவது புவி வெப்பமடைதலை, இந்த எரிமலையிலிருந்து சீறிக் கிளம்பிவரும் சாம்பல் சற்று தாமதப்படுத்தும் என்பது விஞ்ஞானிகள் கருத்து.
இந்த எரிமலையிலிருந்து வெளிவருவது வெறும் சாம்பல் அல்ல… முழுக்க முழுக்க சல்பர் டை ஆக்ஸைடு. இது மேகக் கூட்டத்திலுள்ள தண்ணீருடன் வினைபுரிந்து சல்ப்யூரிக் அமிலமாக மாறுகிறது. இந்த அமிலம் மேகக் கூட்டங்களுக்கும் மேல் திவலைகளாக மிதக்கும்போது, சூரியனிலிருந்து வரும் அபாயமான கதிர்கள் சிலவற்றை எதிரொலிப்பு முறையில் தடுக்கிறது. குறைந்தபட்சம் ஒரு ஆண்டு காலத்துக்கு இந்த நிலை இருக்குமாம். அதன் பிறகே அந்த அமிலத்துளி மண்ணில்  அமில மழையாகப் பெய்கிறது. எரிமலை வெடிப்பு புவி வெப்பமடைதலைத் தடுக்கும் சக்தி கொண்டது என்பதற்கு ஏற்கெனவே சில உதாரணங்கள் உள்ளன.
வட ஐரோப்பா முழுக்க சாம்பல் மண்டலம்
கடந்த 1991-ம் ஆண்டு பிலிப்பைன்ஸின் பினாடுபு எரிமலை வெடித்தபோது 17 மில்லியன் டன் சல்பர் டை ஆக்ஸைடு சாம்பல் வெளிப்பட்டது. இதன் பலனாக பூமியின் வடவாகத்தில் 0.5 முதல் 0.6 டிகிரி வரை வெப்பம் குறைந்தது. இதேபோல 1982-ம் ஆண்டு மெக்ஸிகோவின் சிகான் எரிமலை வெடித்த போதும் புவியின் வெப்பம் குறைந்து காணப்பட்டது.இன்னும் சில தினங்களுக்கு இதே போல பெருமளவு கந்தக டை ஆக்ஸைடு வெளிப்பட்டால், நிச்சயம் புவியின் வெப்ப நிலையில் கணிசமான குறைவு காணப்படும் என்கிறார்கள் புவி ஆராய்ச்சியாளர்கள்.
20000 விமானங்கள் ரத்து


இந்த எரிமலை வெடிப்பால் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து உலகெங்கும் கடந்த இரு தினங்களாக நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்தியாவில் மட்டும் 70 விமானங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஐஸ்லாந்தின் அருகாமை நாடான இங்கிலாந்தின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. விமானங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. பிரிட்டனில் மட்டுமே 6 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விமான இயக்கம்.... எரிமலைக்கு முன்பும் பின்பும்
என்ன பாதிப்பு வரும்?
இந்த எரிமலை சாம்பல் மண்டலத்துக்குள் விமானத்தைச் செலுத்தினால் பாதை சரியாகத் தெரியாமல் விபத்து நேரிட வாய்ப்புள்ளது. மேலும் புகை துகள்கள் விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்துவிட்டால் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள விமான தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இஜப்ஜாலாஜோகுல் எரிமலையால் பெரும் வெள்ளப்பெருக்கு...


ஏற்கெனவே 1992-ல் இதுபோன்ற ஒரு எரிமலை வெடிப்பின் போது விமானத்தைச் செலுத்தியபோது, எஞ்ஜினுக்குள் புகைத் துகள்கள் அடைத்துக்கொள்ள, எப்படியோ சாமர்த்தியமாக விபத்திலிருந்து தப்பித்துள்ளனர் அந்த விமானத்தின் பைலட்டுகள். இதுபோன்ற ரிஸ்க்கை தொடர்ந்து எடுக்கக் கூடாது என்பதாலேயே இத்தனை விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்தப் புகை மற்றும் சாம்பல் உடலுக்குள் சென்றுவிட்டால் பல கொடிய நோய்களுக்கும் உள்ளாகலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும்.
பிரிட்டன் மட்டுமின்றி, நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளின் வான் பகுதிகளிலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
நன்றி :
என்வழி
Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.