அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeவழக்கமாக திருமணம் முடிந்த பிறகு வீட்டிலோ அல்லது ஓட்டலிலோ முதலிரவு  நடைபெறும் . ஆனால் கேரளாவில் வித்தியாசமாக முதலிரவை ஓடும் ரயிலில் ‘கொண்டாடி’ அசத்தியிருக்கிறார்கள்.

 ஒரு இளஞ்ஜோடி.கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 7 மணியளவில் திருவனந்தபுரத்தை அடையும். நேற்று முன்தினம் இந்த ரயில் பையனூர் ரயில் நிலையத்தை அடைந்தது.
இந்த ரயிலில் எஸ் 8 கோச்சை பார்த்த பயணிகள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இந்த கோச் முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புதிய ரயில் பெட்டியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பயணிகள் விசாரித்த போது விஷயம் என்னவென்று தெரியவந்தது.ஆலப்புழா அருகே உள்ள களர்க்கோடு என்ற இடத்தைச் சேர்ந்த நாராயணன் நம்பூதிரி, சாவித்திரி தேவி தம்பதியினரின் மகன் ஹரீஷ் நம்பூதிரி. இவருக்கும் கண்ணூர் அருகே உள்ள பையனூரைச் சேர்ந்த சங்கரன் நம்பூதிரி, ரத்னமணி தம்பதியியரின் மகள் தீபாவுக்கும் நேற்று முன்தினம் காலையில் பையனூரில் திருமணம் நடந்தது.
மணமகனின் வீடும், மணமகளின் வீடும் வெகு தொலைவு என்பதால் திருமணம் முடிந்து முதலிரவை மணமகள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் மறுநாள் காலை 9 மணிக்குள் புதுமணத் தம்பதியினர் திருவனந்தபுரத்திலுள்ள மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லவேண்டும் என ஜோதிடர் கூறிவிட்டார். திருமணம் நடந்த அன்றே புதுமணத் தம்பதி மற்றும் திருமணத்திற்கு வந்த மணமகனின் உறவினர்கள் 70க்கும் மேற்பட்டோருக்கு மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 8 கோச்சில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.
அப்போது தான் மணமகன் ஹரீஷின் நண்பர்களுக்கு ஒரு ஐடியா உதித்தது. எஸ் 8 கோச் முழுவதிலும் மணமக்கள் மற்றும் திருமண வீட்டினரே இருந்ததால் ஒரு கூப்பேயை மணமக்களுக்காக முதலிரவு அறையாக மாற்ற தீர்மானித்தனர். உடனடியாக நண்பர்கள் அனைவரும் மங்களூர் சென்று ரயில் புறப்படுவதற்கு முன்பாக எஸ் 8 கோச்சை முதலிரவு அறையாக்கி விட்டனர். பின் பையனூரில் வைத்து மணமக்கள் மிகவும் சந்தோஷமாக ரயிலில் ஏறினர். ஜோதிடர் சொன்னபடியே நேற்று காலை 9 மணிக்குள் மணமக்கள் ஓடும் ரயிலில் முதலிரவை கொண்டாடிய வித்தியாசமான அனுபவத்துடன் திருவனந்தபுரத்தை அடைந்தனர்
.

Post Comment


1 comments:

kirukkan said...

அட சூப்பராஇருக்கே!!! இப்புடியான கிளுகிளுப்புசமாச்சாரங்களை அப்பப்போ அள்ளித்தெளியுங்கதலைவா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.